முந்தைய பதிவு..
சற்று மன இறுக்கமான பதிவு.. அறிவேன்..
இருப்பினும் மாமனிதரான சத்குருவும் ஒரு சாமான்ய மனிதனாக எதிர் கொள்ள வேண்டிய வாழ்க்கையின் பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியிருந்தது என்பதைப் பதிவு செய்யும் பொருட்டே பகிரப்பட்டது.
குடும்பத்துக் கவலைகள் மனதில் ஓடும்போது தாம் விரும்பிச் செயல் படும் தளங்களில் இதன் வெளிப்பாடு நிச்சயம் இருக்கத்தான் செய்யும்.
ஆனால் சத்குரு இதனின்றும் வேறுபட்டிருந்தார்கள். இது அனைவருக்கும் சாத்தியமான விஷயமே அல்ல..!
இனி.. என் பள்ளி நாட்களுக்கு வருகிறேன்.
அப்போது 10ம் வகுப்பு. நாகசுந்தரம் என்ற NCC (AIR WING) ஆஃபிசர்.. ஏர் விங் .. மாணவர்களை விளையாட்டு மைதானத்தில் அமரச் செய்து.. பறக்கும் விமான மாடலை வைத்து வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். மேலும் மறு நாள் காண்டிடேட்ஸ் தேர்வு ( CANDIDATES SELECTION ) இருப்பதையும் தெரிந்து கொண்டேன்.
தேர்வுக்காக விருப்பபட்ட மாணவர்களை வரிசையாக நிற்க வைத்த வரிசையில் நானும் இருந்தேன்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் வரிசையில் நான் இல்லை.
ஆம்.. அதில் நான் “ செலக்ட் “ ஆகவில்லை...!
அந்த NCC மாணவர்கள் பெரேட்(PARADE) செய்வது.. பெரிய பூட் போட்டு அணிவகுத்து நடப்பது.. இறுதியில்.. பூரி கிழங்கு சாப்பிடுவது எல்லாம் பார்த்துக்கொண்டே .. இருந்தேன்.. கூடவே அந்த மாணவர்கள் செய்த க்ளைடர் (GLIDER ) மாடல்களையும்.. பார்த்துக்கொண்டே இருந்தேன்....
காலம் ஓடிற்று.
இறுதி பாட்ச் (BATCH) 11-ம் வகுப்பு.. முடிந்து.. பி.யு.சி.. வெள்ளைசாமி நாடார்.. கல்லூரியில் சேர்ந்தேன். FIRST GROUP.. Also called MPC group.அப்போது மூர்த்தி மாமா.. ( BSc )பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி.. யில்.
கல்லூரி வாழ்க்கையின் போதும் .. முன்பு நின்றது போல்.. தரைப்படை என்.ஸி.ஸி selection க்குச் சென்று நின்றேன். ..
Prof. அகஸ்டின் (Eng Dept).. march செய்யச் சொல்ல.. 26 இன்ச் பெல்பாட்டத்தில்.. March பண்ண முடியவில்லை.
எனக்கே அசிங்கமாயிருந்தது.. !
Army என்.ஸி.ஸியிலும் நான் தேர்வாகவில்லை...
ஸ்போர்ட்ஸ்லயோ அல்லது என்.சி.சி யிலோ ஒரு சர்டிஃபிகேட் கண்டிப்பாக வேண்டும். அப்பத்தான் வேலையெல்லம் கிடைக்கும். இந்தக் காரணத்தினாலேயே முருகா மாமாவுக்கு சப்.இன்ஸ்பெக்டர் செலக்ஷன் ஆக முடியவில்லை என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அதனாலேயே மிகவும் கவலையாகக் கூட இருந்தது.
பி.யூ.சி முடித்து.. பி.எஸ்.சி (Physics)) ல்.. சேர்ந்து.. படித்துக் கொண்டிருந்தேன். படிப்பில் என்னுடைய பெர்ஃபாமன்ஸ் எனக்கே திருப்தி கரமாயில்லை..
இந்தச் சமயத்தில்தான்.. சத்குரு.. இந்து ஆங்கில நாளிதழில் வெளி வந்த விமானப் படைத் தேர்வுக்கான விளம்பரத்தை கட் செய்து கொண்டு வந்திருந்தார்கள். டிசம்பர் 1980 முதல் வாரத்தில் வந்திருந்த விளம்பரம் அது.
என் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட விளம்பரம் அது..!
“ இதுக்கு அப்ளை பண்ணுப்பா..! பார்க்கலாம்..” என்றுவிட்டு சென்றுவிட்டார்கள்.
மறு நாள் நானே அதை டைப் செய்து.. பூர்த்தி செய்து அனுப்பினேன்...
என் வாழ்வின் மகத்தான பக்கங்களுக்கு.. பிள்ளையார் சுழி இடப்பட்டதை நானறியேன்..
சத்குரு... அறிந்திருந்தார்கள் போலும்....!!!
***********************************************************************தொடரும்
இலை 30
சத்குரு : 26
INA VETERAN SENDS HIS DISCIPLE TO THE INDIAN AIR FORCE:
நான் அனுப்பியிருந்த விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப் பட்டு 14 டிசம் 1981 அன்று தேர்வுகளுக்கு வரும்படி அழைப்பு.. வந்திருந்தது.
அந்தச் சமயத்தில் செமெஸ்டர் தேர்வுகள்.. நடந்து கொண்டிருந்தது. நல்ல வேளையாக 13 ந் தேதியே கடைசி கெமிஸ்ட்ரி.. முடிந்த உடனே கிளம்பினேன்..
கால் லெட்டர் வந்ததை சத்குருவிடம் சொல்ல.. அவ்வளவு சந்தோஷம். கூடவே ..
”இதில் எப்படியாவது செலக்ட் ஆயிடுப்பா..! ஆயிட்டேன்னா.. உன் அப்பாவிற்கும் உதவியாயிருக்க முடியும். உன்னுடைய வாழ்க்கையும் மாறிவிடும்.. யூனிஃபார்ம் ல தேசத்திற்கு சேவை என்பது பெரிய கொடுப்பினை.. உன் அப்பாவை நேவியில் சேர்க்க நினச்சது.. முடியாமப் போயிருச்சு.. அம்மாவும் .. உங்க அப்பத்தாவும் சம்மதிக்கலை... ஒரே புள்ள ..அவனைப் போயி..” னு தடுத்து விட்டார்கள். என்றுவிட்டு “சத்குரு மதுரையிலிருந்து இடம் கிடைப்பது கஷ்டம்.. நேரே திருச்சிக்குப் போய் அங்கிருந்து வேறு பஸ் பிடித்தால் போய் விடலாம்”.. என்று.. நிறைய வழிகாட்டுதல்..
.
ஆனால் எனக்கு மனதில் நம்பிக்கை.. இல்லை.
காலை 5.30 க்கு சென்னை.. தாம்பரத்தில் இறங்கி (உடன் 3 பேர்) விமானப் படைத் தளத்திற்குச் சென்றோம். காத்திருந்தோம் வெளியில்.
சரியாக 7 மணிக்கு உள்ளே அழைத்தார்கள். பயங்கரமான கூட்டம் ஆயிரக் கணக்கில்.
முதலில் 1200 பேர் கொண்ட குழுவாக .. ஓடுபாதையில்(ரன்வே) பிரித்தார்கள். நல்ல வெயில். மொத்தமாக 6 குழு பிரிந்து நிற்க.. கிட்டத்தட்ட 7300 பேர்..
நான் முதல் பாட்ச். அந்த ஹாலில் 1200 பேரும் அமர்ந்தோம். இன்ஸ்ட்ரக்ஷன் கொடுக்கப்பட்டது.. 30 கேள்விகள். அவகாசம் 20 நிமிடங்கள். நேரம் முடிந்து மணி ஒலிக்கும் போது.. இரண்டு கைகளையும் உயர்த்தி நின்று விட வேண்டும்.
கணிதம்.. ஆங்கிலம் , விஞ்ஞான மற்றும் ஜி.கே சம்மந்தப்பட்ட கேள்விகள்.. எளிது என்று சொல்லிவிடமுடியாதபடி வினாக்கள்..!
கைகளை உயர்த்தி நின்றுவிட்டு வெளியே.. வந்தேன்.. விமானப் படையினரின் சீருடையும்.. அந்தச் சூழ்னிலையும்.. மனதைக் கலக்கிற்று.
இப்படியாக 6 குழுவினருக்கும் (Batches ) தேர்வு முடிந்த போது.. மாலை 4 மணி.
5 மணிக்கு விமான ஓடு பாதையில் வந்து அமரச் சொன்னார்கள். ஜே..ஜே.. ன்னு கூட்டம்.
அத்தனை பேரும்.. படபடப்போடு.. அமைதி காக்க..
முடிவுகள்.. சொல்ல ஆரம்பித்தார்கள்.. 30 பேருக்குப் பின் என் நம்பரும் அறிவிக்கப் பட்டது.. எங்களைத் தனியே நிற்கச் சொன்னார்கள்.
நாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறோமா..? இல்லை ஃபெயிலா..? என்று தெரியவில்லை.
இப்போது.. நாங்கள் மொத்தமாக 128 பேர்.. தனியே நின்றிருக்க.. 7300 பேரில் 128 பேர் என்ற விகிதம் நிச்சயம் நமக்கு சாதகமான முடிவாக இருக்க வாய்ப்பில்லைதானே..?
ஃபெயில் என்பதை நாங்களாகவே முடிவு செய்து விட்டோம்.
30 க்கு 25க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
Sqn Ldr.Seshan declared the results as below...!
‘Listen Gentle Men.. All those who have scored 25 & above out of 30 are declared ‘Passed”. Am happy to announce here these 128 Boys have cleared their PST (Preliminary Screening Test). And they will proceed for the medical fitness and Theory exams after two days.. I wish them all the Best..”
Thats all I broke into tears..
இதை உடனடியாக மாமாவிற்கும்.. வீட்டிலும் சொல்ல வேண்டும்...
ஆனால் எனக்குத் தெரியாது.. இதை விடவும் கடினமான தேர்வுகள் வரும் நாட்களில் இருக்கின்றன என்பது.
இது தெரியாமல்..
மனதில் உற்சாகம் கரை புரண்டோட நேரே.. அய்யனாவரம் சென்று கதவைத் தட்டினேன்..
*********************************************************************** தொடரும்
இலை 31
சத்குரு : 27
நான் வந்த விவரத்தை அயனாவரத்தில்..பெரியம்மா, பெரியப்பாவிடம் சொல்ல.. பெரியப்பாவிற்கு ரொம்பச் சந்தோஷம்.
ஸ்ரீ.சொக்கலிங்கம் பெரியப்பா என் மனைவியின் வழியில் அவர்களின் அப்பத்தாக்களின் வழி உறவினர் என்பதைத் தெரியப்படுத்திக்கொள்கிறேன்.
“ஏன்ய்யா உன் ஓய்வு நேரத்தை எப்படி கழிப்பாய்..? இந்தக் கேள்வியுடன் தான் சம்பாஷணை பொதுவாக ஆரம்பிக்கும்.
இந்த முறை..
இந்த இரண்டு நாட்களிலும் பெரியப்பா.. எனக்கு ஒரு இண்டர்வியூ வை எப்படி சந்திக்க வேண்டும் என்பதைத் தெளிவாக.. செய்முறை பயிற்சியோடு சொல்லிக்கொடுத்ததை மிகுந்த நன்றியறிதலோடு நினவு கொள்கிறேன்.
இரண்டு நாட்கள் கழிந்து.. சென்றேன்.
நண்பர்கள் ஹைட்.. வெயிட்.. சரியாக இருக்கணும்.. இல்லன்னா ரிஜெக்ட்.. என்று சொல்ல.. நானும் பயந்து போய்.. 9 வாழைப்பழங்கள் தின்று.. எடையை ஏற்றிக்கொண்டேன். வயிறு தனியாக அசைவது போல ஒரு ஃபீலிங்...
அந்த சுற்று நல்ல வேளையாக.. முடிந்தது.. அதற்கு அடுத்த நாள்..
முதலில் ஆங்கிலம்... பின் கணிதம்.. அதன் பின் சயின்ஸ்..G K.. என்று 45 நிமிடத் தேர்வுகள்... ஒவ்வொரு முறையும் தேர்வு முடிவுகள்... அப்புறம் அடுத்த தேர்வு...
இப்படியாக.. 128 லிருந்து எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து.. 98 ஆகி இருந்தது.
சத்குருவின் .. என் குல தெய்வத்தின் அனுக்ரஹம்.. நிச்சயம் எனக்கிருந்ததால்... 98 பேரில் நானும் இருந்தேன்.
இன்னும் இரண்டு படிகள். இப்பொது மனதில் சற்று நம்பிக்கை பிறந்தது. கூடவே தவிப்பும்.. இதிலும் தேர்ச்சி பெற வேண்டுமே..?
பதினைந்தாம் நாள் விமானப் படை வளாகத்தினுள் நுழைகிறேன்.. இன்று ஃபைனல் மெடிகல் எக்ஸாம்( Final Medical Examination) ஓடவிட்டு.. நடக்கவிட்டு.. கயிறு ஏறச்சொல்லி என்று.. அனைத்திலும் .. வெற்றிகரமாக வெளி வந்தேன்.
எண்ணிக்கை.. 87 ஆகி இருந்தது.
ஒரு நாள் விட்டு 17-ம் நாள்.. நேர்முகத் தேர்வு... ( Personal Interview )
அந்த அறையின் உள்ளிருந்து வெளியே வந்தவர்கள் பேயடித்த முகத்துடன்.. வெளி வந்தார்கள்..
என் முறை வந்த போது... உள்ளே செல்ல..
பளீரென்று 3 ஃபோக்கஸ் லைட்டுகள் (FOCUS LIGHTS). ஒளி வெள்ளம்.. பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரியவில்லை. மனதில் பதட்டம்.. தொற்றிக் கொண்டது.
“ Are you Mr.Shanmuga nathaan..” இடது பக்க இருட்டிலிருந்து கேள்வி..
“ yes sir “ என்று சொல்லி விட்டு நின்றேன். ( அப்படித்தான் பெரியப்பா சொல்லிக்கொடுத்தது)
“ Please sit down “
“ Thankyou sir..” உட்கார்ந்த பின்.. எங்கு.. எதைப் பார்க்கவேண்டும் எனத் தெரியவில்லை.. அவ்வளவு வெளிச்சம்.
என்னுடைய ஒவ்வொரு அசைவும் கண்காணிக்கப்படுகிறது.. என்று நன்கு தெரிகிறது.
ஒவ்வொரு மூலையிலிருந்து வந்த கேள்விகளை வைத்து.. 4 பேர் இருந்தார்கள் என்று கணித்தேன்.
“ What is kaleidoscope..? “
“ Dont know sir..”
“ You say yourself a Science student of Physics..?”
.....................................................................
“ What is the Chemical Name of Diamond..?”
........................................................
“ Why it shines..? in dark..”
............................................
“ what do you mean by Refractive Index..?”
....................................................
( I replied all the above questions suitably ) AND THE SESSION LASTED FOR 20 MTS
“ Why do you want to join the Air Force..?..”
“ Actually my father had a chance to join the Navy..”
Interviewing Officer interrupted.. sharply..!
“ Why..You don’t want to..?”
“ I definitely want to join the AF. not only I love to be in Uniform. Also to fulfill my Maternal Uncles Dream.. .”
“ Who is your Maternal Uncle..?”
“ He is Sri.Aiyaadurai ..an Ex from INA. A World War veteran and A close Associate of Subhaash Chandra Bose.. Also a Freedom Fighter of India..”
When I said this, I was at the Peak of my Confidence.
.........................................- SILENCE ...................................................
There was an Absolute Silence.. there..!!!!
அதற்கப்புறம் அங்கே கேள்வி இல்லை. எனக்கு சத்குருவின் பெயரும் விளக்கமும் கொடுத்த பின் எனக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை...
“ Thankyou Shanmugan.. you can go now..”
கம்பீரமாக வெளியே வந்தேன்.
18-ம் நாள் முடிவுகள் வெளிவந்தது.. நான் விமானப் படையில் நுழைந்தேன்.
Kindly watch – the miracle done ON 18th day.
And the Task assigned to me BY SATHGURU is not an Easy one...!
I am very proud to say that..!
.................................................AIR WARRIOR CONTINUES..FROM NOW
இலை 32
சத்குரு : 28
AIRWARRIOR REPORTS TO SATHGURU : PART 1
இந்த விமானப் படை வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும்..
சத்குரு அவர்களுக்கே சமர்ப்பணம்.
ஏனெனில் என் தகப்பன் சுட்டு விரல் பற்றி டி.வி.எஸ் நிறுவனத்தில் இணைத்து.. அவர்கள் காட்டிய வழியில் 42 வருடங்கள் பணி செய்த பெருமை என் தகப்பனுக்கு உண்டு.
வேற்று நிறுவனங்கள் வந்து அதிக சம்பளத்திற்கு அழைத்த போதும் செல்லவில்லை.
சில விஷயங்கள் மனதிற்கு வெகு நெருக்கமானவை. அதை மீறி எவ்வளவு கொட்டிக் கொடுத்தாலும் மாற்றங்களை மனது அங்கீஹரிப்பதில்லை.
அந்த வகையில் அடுத்து வரும் சில பகிர்வுகள் .. வேறு எவரிடமும் நான் பகிர்ந்ததில்லை. காரணம் அந்தப் புனிதமான தருணங்களைப் புரிந்து கொள்வது எல்லோராலும் முடியாது.
ஒரு நொடிப் பொழுதில் அது வேறு விதமாக.. தற்பெருமையாகக் கூட கருதப்பட்டு விடலாம் என்ற அச்சத்தில் .. என் அப்பாவிடம் கூட மேலோட்டமாகத்தான் பகிர்ந்திருக்கிறேன்.
இவை யாவும் சத்குருவிடம் கூட நான் பகிர்ந்துகொள்ள காலம் இடம் கொடுக்கவில்லை. ஆகவே இந்தப் பகிர்வுகள் அவர்கள் எனக்குக் காட்டிய பாதையில்.. நான் அதற்குரிய தகுதிகளோடு பணியாற்றி இருக்கிறேன்.. என்பதை சில சுவடுகளின் மூலம் பதிவு செய்து.. சத்குருவின் திருப்பாதங்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்.
ஜெய் ஹிந்த்..!
இறுதியில் நாங்கள் 72 பேர் தேர்வானோம்.
அதில் 14 பேர்களுக்கு... ( ELECTRONICS & COMMN. ENGG )
என்னை வழியனுப்ப அப்பா வந்திருந்தார்கள் சென்னைக்கு. அப்பாவிடம் தேர்வான செய்தி மற்றும் என்னுடைய உருக்கமான நன்றியையும் உறுதி மொழியையும் பதிவு செய்து சத்குரு அவர்களுக்கு அனுப்பினேன்.
That letter Begins like this...
“ சுதந்திரப் போராட்ட வீரரும் எங்கள் குடும்பத்தின் தந்தையுமாகி நின்ற “ என்று ஆரம்பித்து.
.
“உங்கள் வழிகாட்டுதலில் விமானப் படையில் இணையும் விமானப்படை வீரனும் அன்புப் பேரனுமாகிய என்னுடைய வீர வணக்கத்தைத் தெரியப் படுத்திகொள்கிறேன்.. ஜெய் ஹிந்த்..!
என்று முடியும்.
அதைப் படிக்கும்போது என் அப்பா அழுதுவிட்டது இன்னமும் என் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது.
பெங்களூர் பயணம்... 6 ஜனவரி 1981. ல் காலைப் பொழுதில் நிறையக் கனவுகளோடு எங்கள் குழு உரிய இடத்தில் ‘ர்ப்போர்ட்” செய்தது.
எங்களை வரவேற்று ஸ்க்வாட்ரன் லீடர் யாதவ் ( Sqn Ldr Yadav ) பேசிய உரை பின்வருமாறு .:
“ My dear Gentlemen , I welcome you all for the 16th Batch Training here. I see here number of heroes.. like Kamal, Rishikapoor, Mithun and Rajnikanth.. . We will ensure your Identity is ERASED into to. What so ever you are.. who so ever you are..! right now you are like this sand. ( Picked up Hand full of mud )
We have to find the ‘”Gold”...... “ The Soldier” in you.. and thats what you have come here for. I expect you all to have that GUTS to undergo the tough training procedures for the next six months.. You have to take this as a challenge for you individually.. and personally. You have to become FIT physically and mentally worthy to wear the Uniform...
All these days you all must have had food in Golden bowls.. Never mind.. We will ensure you turn out to be a brave Air warrior. and become ready to Serve the Nation with Smile..
AIR FORCE.. is a way of LIFE..!
I wish you all Best of Luck.. Jaihind..!..”
*********
வெல்கம் லன்ச் நன்றாகத்தான் இருந்தது.
அப்புறம் நான் ஏற்கனவே சொன்ன “ சிகை அலங்காரம் “
மறு நாள் காலை 4.45 க்கு விசில்.. ரன்னிங் .. முதல் நாள் 1.6 கி.மீ மட்டும். அதற்கப்புறம் பரேட். 2 மணி நேரம் என ஆரம்பித்து... நாளுக்கு நாள் இந்த நேரங்கள் அதிகரிக்கப்பட்டன.
DAILY காலையில் 5 கி.மீ , க்ராஸ் கன்ட் ரி ரன்னிங் 12 – 15 கி.மீ. வாரத்தில் 3 முறை.. அணிவகுப்பு 2.30 மணி நேரம்.. கொஞ்ச நேரம் விமானப்படை பற்றிய வகுப்புக்கள்..
அதிலும் எங்களுக்கு வாய்த்த டரெய்னர் (CLINT EASTWOOD) ‘ க்ளிண்ட் ஈஸ்ட் வூட்” ன் மறுபதிப்பு. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் கிடையாது. அவனை ஏமாற்ற முடியவே முடியாது...
உடம்பு அத்தனயும் வலிக்கும்... யாரிடமும் சொல்லக்கூட முடியாது...!
அப்புறம் 3 மாதங்களின் பின் சிறு ஆயுதங்கள் உபயோகித்தல்.. என்ற வகையில்.. ரைஃபிள் .. ரிவால்வர்.. மற்றும் ஸ்டென் கன் (SMC – STEN MACHIN CARBINE ) சிறிய வகை இயந்திரத்துப்பாக்கி.. சுடுதல் என்று பயிற்சிகள்.. மாதத்தில் மூன்று முறை...
இந்தப் பயிற்சிகளின் போது ஒரு கணம் ஸ்டெப் கட்டிங் குடன் கல்லூரி மாணவனாய் எவ்வளவு சுதந்திரனாய்.. கண்களில் கனவுகள் பல தேக்கி வலம் வந்தேன் என்று மனது நினத்துவிட்டாலும்..... ஆண்மை மிகுந்த 7.62 (mm) குண்டுகளடங்கிய மகஸினைப் பொருத்திச் சுடும்போது.. தோள்கள் வாங்கும் ரீகாயில் ( RECOIL KICKS ) குத்துக்கள்.. மனதை .. உடம்பை.. இறுக்கி வைக்கும்..
JUNGLE SURVIVAL :
நடுவில் 5 நாட்கள் ஜங்கிள் ப்ரேட். (JUNGLE PARADE)
மேன் வெர்சஸ் வைல்ட் தான். 5 கிமீ பரப்பளவில் தும்கூர் ரோட்டில் ஒரு காடு. 6 நாட்கள். இலை தளைகள் செருகி நிறமறைப்பு (CAMOUFLAGE ) செய்யப்பட்ட உடை துப்பாக்கி சகிதம்.. இரவு 8 மணிக்கு சாப்பாட்டிற்கு மட்டும் கூடவேண்டும்.
மற்றபடி தண்ணீரும் இல்லாமல் வாழ வேண்டும்.
இரவில் பச்சை இலைகளை பாலித்தீன் கவர்களில் கட்டி வைக்க 2 ஸ்பூன் நீர் காலையில் கிடைக்கும்..
பசளையில் சிறுவனாயிருந்தபோது.. பூவலிங்கம் பெரியப்பா வீட்டு சேவலைக் கல்லெறிந்து கொன்றது.. கௌதாரிப் பறவைகளை வேட்டையாடத் துணைபுரிந்தது..
தெரியாமல் கொண்டு சென்ற மிளகாய்ப்பொடியைத் தடவி சுட்டு.. உணவுக்கான வழிவகை..!
பொதுவாய் இந்த உடல் என்ற மண்ணை எடுத்து உலையில் போட்டு.. விதவிதமாய் வெப்பத்தில் உருக்கி... முதலில் சொன்னது போல் தங்கம் காண வேண்டும்.
அதற்கு கொஞ்சம் ஒத்துழைக்க வேண்டும்.. அவ்வளவுதான்...!
என்னால் ஒத்துழைக்க என்பதை விட..
என் உடம்பால் அது முடிந்தது... !
இந்த ஆறு மாதங்களின் முடிவில்.. என்னுடன் வந்திருந்தவர்களில் 4 பேர் திரும்பிச் சென்றுவிட்டார்கள்.
நான் 28 நாள் விடுமுறையில் மதுரைக்குச் சென்றேன்...
அந்த நாள் காலையிலேயே .. சத்குரு விஜயம்..!
நான் பாத்ரூமில் குளித்தவன்.. வேகமாக முடித்து.. நேரே அவர்கள் காலடியில் நமஸ்கரித்தேன்.
ஒரே உணர்ச்சிப் பெருக்கு...” ஜைஹிந்த்” என்று சல்யூட் அடித்த கையோடு என்னை ஆரத்தழுவிய சத்குருவின் வாசம் இன்னும் என் நாசியில்...
தழுவியபடி சொன்ன வார்த்தை...
“ இந்தப் பாகிஸ்தான் காரங்களை..ஒண்ணுமில்லாமப் பண்ணனும்ப்பா..”
மந்திரமாய் என்னை 20 வருடங்கள் இயக்கிய வார்த்தைகள் இவை
##############################################
#TO CONTINUE
இலை 33
SATHGURU : 29
PART 2 :
IN OPERATIONS WITH AF AND ARMY :
லீவில் வந்ததும் முதலில் நான் செய்த வேலை.. ஸ்கூலில் NCC OFFICER நாகசுந்தரம் சாரைப் போய்ப் பார்த்தேன். விமானப் படையில் சேர்ந்த்தைப் பற்றிப் பெருமையாகப் பேசியதுடன் நில்லாமல்.. தலைமைஆசிரியரிடம் கூட்டிச் சென்றது.. HE SHOOK HANDS AND CONGRATULATED ME.
இங்கே கல்லூரியிலும்.. PROF:AUGUSTIN ஐப் போய்ப் பார்த்தேன்.. அவருக்கே உரிய ஸ்டய்லில் கை குலுக்கிவிட்டு “ சாரி” என்றார். ( For not selecting me in the NCC )
###################################
என் முதல் பணியிடம்.. பதான் கோட்... அங்கே பெரும்பாலும்
( BASE OPERATIONS ) பணி. மேற்கு எல்லைப்புறங்களின் மொத்தப் பரப்பும் ரேடார் களினால் கண்காணிக்கப்பட்டு.. பாகிஸ்தான் விமான போக்கு வரத்தும் கண்காணிக்கப்பட்டு.. அதன் ஏர் சிசுவேஷன் மேப் முன்னே பெரிய கண்ணாடித் திரைகளில் வினாடிக்கு வினாடி.. தெரிந்து கொண்டிருக்க .. வளைவு வளைவான பல அடுக்கு கட்டுப்பாடுகள்...மங்கலான அவரவர்க்கு உரிய ப்ரத்யேக விளக்கு மற்றும் தொலை தொடர்புக் கருவிகளுடன் .. மேற்கு எல்லை வான் பரப்புகள்.. 24 மணி நேரக் கண்காணிப்பில்..
அங்கே இருக்கும் ஒவ்வொரு வினாடியிலும்.. அடுத்த செகண்ட் சாமி வந்துவிடும் போன்ற திக் திக் மன நிலை...
இந்த இடம் கட்டளைகள் பிறப்பிக்கப்படும் இடம். தலைமைத் தளபதியின் விரல் அசைவுக்குக் காத்திருக்கும் தயார் நிலையில் விமானங்கள். கோயிலின் கருவறை போல. குறிப்பிட்ட பிரிவினரைத்தவிர வேறு விமானப் படையில் இருப்பவர்களே “பார்க்க்க்கூட” வாய்ப்புகள் இல்லாத இடம்.!!!!
இங்கே பணியாற்றுதல் பெரிய.. கொடுப்பினை..! 25க்கும் மேற்பட்ட வேறு பட்ட பொறுப்புகளுடன் விமானிகள், ரேடார் க்ரூ..ஏர் டிஃபென்ஸ் ஆபரேஷன்ஸ் குழு என அனைத்தும் ஒன்றினைந்து ஒரு பெரிய வாத்தியக் குழு போல இயங்கும் இடம்...
இங்கே இசை பிறப்பதில்லை...
“..SCRAMBLE ..”என்ற வார்த்தை . மூன்று முறை ஒலிக்க...
90 வினாடிகளில் போர் விமானங்கள் விண்ணில் பறக்கக் கட்டளை பிறக்குமிடம்.
நான்கு வருடங்களுக்கு இங்கு பணி புரியும் பேறு பெற்றேன்.
MOST PRESTIGIOUS AND CLASSIFIED PLACE IN THE INDIAN AIR FORCE..WHERE AN AIR WARRIOR GETS THE OPPORTUNITY TO PERFORM.
MY MAIN STRENGTH WAS SHARP AND EFFICIENT RT ( WIRELESS RADIO TELEPHONY ) COMMUNICATION SKILLS
I WAS BLESSED TO WORK HERE WITH THE GRACE OF SATGURU.
********
1983 டிசம்பர் மாதம் நடந்த ஆர்மி.. மற்றும் விமானப்படை கூட்டாக நட்த்திய போர்ப்பயிற்சி ஒத்திகையில்.. பாகிஸ்தான் தன்னுடைய ஆர்மி ட்ரூப்புக்களை எல்கயில் குவித்துவிட.. டென்ஷன் ஆரம்பமாகிவிட்ட்து...
( உண்மையில் இதுக்குப் பேர்தான் “டென்ஷன்” )
அந்தச் சமயத்தில் 1984-ல் 17 AOP என்ற தரைப்படை ஹெலிகாப்டர் யூனிட்டில் 28 நாட்கள் ராஜஸ்தான் பாலைவனத்தில்.. பணி புரியும் வாய்ப்பு கிட்டியது. மேஜர்.ரண்தாவா.. கேப்டன் .சுதிர். இருவரும் சீட்டா ஹெலிகாப்டர் விமானிகள்.
மேற்கு எல்கையோரம் 100-150 அடி உயரத்தில் தாழப் பறந்தபடி...டாரோட்.. லோங்கேவாலா.. கட்டாடோ.. கிஷன் கர்.. ஃபெரோஜ்பூர்.. இப்படி வாய்க்கு நுழையாத பெயர்கள் கொண்ட பாலைனிலக் க்ராமங்களினூடே.. ட்ரூப் மூவ்மெண்ட்டைக் கண்காணித்தல்.
இவர்கள் பறப்பதற்கு விமானப்படை கட்டுப்பாட்டு அறையிலிருந்து.. அனுமதி பெற்றுத் தருதல் என்ற கோ ஆர்டினேஷன் வொர்க்.
A SAMPLE COMMUNICATION :
CONTROL 12.. REQUEST ADC FOR PANTHER .. FIRST LEG COURSE 140 AT LEVEL 100 FOR 7 MTS.. SECOND LEG COURSE 140.. AT LEVEL 115 FOR 13 MTS WITH PERMISSION TO FLY OVER 150 FOR 5 SECS AFTER 10 MTS FLIGHT.
ENROUTE HALT FOR 20 MTS AT KISHANGARH…. ROGER…
என்னுடைய திறமையான ரேடியோ தொடர்பு.. இந்த ரோந்துக்கான பணியில் என்னையும் கூடவே.. கூட்டிச் சென்றார்கள். முறையாக விமானப்படை அதிகாரிகளின் அனுமதி யுடன்...
எனக்கு முதல் முதலாய்.. ஹெலிகாப்டரில் பயணம்.
மீனாக்ஷி கோபுர உயர அளவில்.. அப்படியே மதுரை கீழே நகர்ந்தால் எப்படி யிருக்கும்..?
முதலில் கொஞ்சம் பயம்.. இருந்தது. சரியாக 22 நாட்கள் இப்படி ஒரு நாளைக்கு 3-4 மணி நேரம் என்ற கணக்கில் பறந்து திரிந்தேன்..
இதில் நான் 21 நாட்கள் குளிக்கவில்லை என்பதைப் பெருமையோடு கூறிக்கொள்கிறேன்.
குடிப்பதற்கு மட்டுமே நீர் கொடுக்கப்படும்
.
24ம் நாள் என்னுடைய பதான்கோட்டிற்குத் திரும்பிவிட்டேன்.
ஒருவாரம் கழித்து அந்த ஹெலிகாப்டர் யூனிட்டிலிருந்து அந்த செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
“ H-1943 “ என்ற அந்த ஹெலிகாப்டர் உயர் அழுத்த மின் கம்பியில் சிக்கி விபத்துக்குள்ளானது என்றும். அதில் அந்த சர்தார்ஜி. மேஜர்.. கோ பைலட் இருவரும்.. வீரமரணம் எய்துவிட்டார்கள். என்று.
ஜெய் ஹிந்த்..!
====================================================
இன்று இந்து நாளிதழில் சமீபத்தில் காணாமல் போன டொர்னியர் கடலோரக் காவல் படை விமானத்தின் விமானியின் மனைவி ஸ்ரீமதி.தீபா.. தன்னுடைய 14 மாதக் குழந்தையை விமானியாக்குவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்.
இந்தத் தாயின் மனதும்.. என் தகப்பனைச் சேர்க்க முடியாமல் போனாலும்.. என்னை விமானப் படையில் சேர்த்து அழகு பார்த்த சத்குருவின் மனதும் வேறொன்றாய்த் தோன்றவில்லை.
ஜெய் ஹிந்த்..!
###################
AIR WARRIOR CONTINUES PART III IN FLYING SQUADRONS
இலை 35
SATHGURU : 30
எல்லாப் புகழும்..சத்குரு வுக்கே :
PART III :
ரேடார் பணியிலிருந்து போர் விமான அணிக்கு மாற்றம்.
அன்பே வா.. படத்தில் அசோகன் சொல்வார் :
“ விமானப் படையில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் அவனுடைய விமானம்தான் முதல் காதலி “
இது சத்தியமான வார்த்தை..!
என் முதல் விமானம் . மிராஜ் 2000. MIRAGE 2000
8 வருடங்கள் ( 7 SQUADRON ) 7 ஸ்குவாட்ரான், குவாலியர், மத்யப்ரதேஷ் மானிலம்.
அதில் ஒரு சிறு துளி :
(I HAVE TRIED TO GIVE LESS TECHNICAL DETAILS AS FAR AS POSSIBLE )
TAIL NUMBER KF 104 என்ற விமானம்.( GROUP CAPTAIN. PANESAR ) க்ரூப் கேப்டன்.பனேசர் (சர்தார்ஜி) மிகத் திறமையான விமானி. இந்த விமானத்தில் தாம்சன் சி.எஸ்.எஃப் டாப்ளர் ரேடார் THOMSON CSF RADAR . இயங்கவில்லை.
ஆன் செய்து பார்த்தபோது. குறை ஏதும் தெரியவில்லை. முதலில் பவர் சப்ளை யூனிட்டை (POWER SUPPLY UNIT ) மாற்றி அனுப்பினேன். பறந்துவிட்டு வந்தபோது சரியாகவில்லை. இப்படி வேறுபட்ட பார்ட்ஸ் களை ஒருவித லாஜிக்படி மாற்றினாலும்.. பறக்கும்போது இந்த ரேடார் இயங்கவேயில்லை. 3 நாட்களாக இயங்காமல் இருக்க ஏர்.ஹெட் க்வார்ட்டர்ஸிலிருந்து ( AIR HEADQUARTERS).. விசாரணை வந்துவிட.. அதுவும் இந்த விமானம் புதுப்பொண்ணு.. என்பதால் ரொம்ப விசேஷம்.
ஃப்ரான்ஸ் பயிற்சி பெற்ற SQN LDR பட்டாசார்யா வந்தார். இதை மாற்று.. அதை மற்று என்றார்..எதுவும் நடக்கவில்லை. (HQ ) தலை மேல். ப்ரஷர் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. இதுவரை 13 முறை பறந்து விட்ட விமானத்தில்.. இந்தக் குறை நீங்கவேயில்லை. 9 நாட்கள் ஓடி விட்டன.
3 ஆவது நாளிலேயே எனக்கு நாம் தவறான பாதையில் இருக்கிறோம் என்று தெரிந்துவிட்டாலும்.. பட்டாசார்ய சொன்னதை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். ( ஃப்ரான்ஸ் ட்ரெய்ண்ட்) அல்லவா..?
5 ஆவது நாளிலிருந்தே எனக்கும் அவருக்கும் ஆர்க்யூமெண்ட் ஆரம்பம்.
6 ஆவது நாள் முதலில் இவரைப் பார்க்கும்போது “ குட் மார்னிங் “ வாய் சொன்னபோது .. மனது அதைச் சொல்லவில்லை.
“ அப்ப எதில் ப்ரச்னை என்பதை நீயே சொல் “ நான் சொல்கிறேன் என்றுவிட்டு மௌனமாகிவிட்டேன். உள்ளே தீர்மானித்தேன்.. இன்று வேலை நேரம் கழிந்த பின்.. ஆரம்பிக்கலாம். அதற்கு அனுமதியும் வாங்கிவிட்டேன். எனக்கு 24 மணி கெடு வைத்து அனுமதி கொடுத்தார் எஸ்.டி.ஓ (STO - SENIOR TECHNICAL OFFICER )
விமானத்தில் இருக்கும் கம்ப்யூட்டரை டவுன்லோட் செய்தேன். இதற்கு லாபரேட்டரியில் தான் அனுமதி கிடைக்கும். இருந்தும் செய்தேன்.
அதில் பார்த்தபோது.. கடந்த 13 பறந்த டாடா பதிவுகளில் ( FLIGHT FAULT REPORT ).. 8 முதல் 11 வினாடிகளில் இந்த ஃபெய்லியர் பதிவாகியிருந்தது...
அப்படியானால்...? அப்படியானால்..?
ரேடாரில் நிச்சயமாக இல்லை. தென்..?
எனக்கு முன்னே அந்த KF 104 மௌனமாக நின்று கொண்டிருந்தது..?
APPLY LATERAL THINKING.. MAN
இரவு வீட்டில் இதை யோசித்தபடியே தூங்கிப்போனவன்.. காலையில் எழுந்தபோது மனதில் ஒரு சிறு யோசனை உதித்தது.
அதன்படி காசியோ ( CASIO) ஸ்டாப் வாட்சை ஆன் செய்து.. 6 விமானங்கள் ஒடி டேக் ஆஃப் ( TAKE OFF ) ஆவதைக் கணக்கிட்டேன். அந்த ஆவரேஜ்.. டேக் ஆஃப் டைம் 8 – 11 வினாடிகளுக்குள் இருக்க..
மனதில் உற்சாகம்..
UNDER CARRIAGE LIFTS OFF APPROXIMATELY IN THIS TIME…
அதாவது.. சக்கரங்கள் தரையை விட்டு எழும்பும்போது.. இந்த நேரம் கோ.இன்ஸைட் ( COINCIDE ) ஆக.. அண்டர் கேரேஜ்.( UNDER CARRIAGE ). பற்றிய மேனுவல்களைப்( MANUAL ) பரப்பிப் படிக்க ஆரம்பித்தேன்... அதில் நிறைய மைக்ரோ ஸ்விச்சுகள் இருக்க.. அதில் ஒன்று ரேடாருடன் ( RADAR ) சம்மந்தப்பட்டிருக்கிறது.. தெரிந்து.. மேலும் படிக்க “ அதில் ஒரு லைன் தரையில் இருந்து விமானம் மேலெழும்போது.. ஏர் கண்டிசனிங் ( AIR CONDITIONING ) பகுதிகளைக் கனெக்ட் செய்யும்..
அது நடக்கவில்லை. ஆகவே.. ரேடார் இயங்க முடியவில்லை ..PROBABLY THIS COULD BE THE REASON.
இது லாஜிக்.
ஓடிப்போய் அந்த வலது சக்கரத்து கேபிள் அமைப்புகளைப் பார்க்க.. கொஞ்சம் நாற்றம் அடிப்பது போல் உணர்ந்தேன்.. ஏர் ஃப்ரேம் ( AIR FRAME ) டிபார்ட்மென்டில் போய் கொஞ்சம் பானல்களை ( PANEL ) ஓப்பன் செய்ய ரிக்வெஸ்ட் செய்ய.. ஓப்பன் செய்யும்போதே..
“ இந்த ( STARBOARD WHEEL ) ஸ்டார் போர்ட் வீல்லதான் சார் போன வாரம் பேர்ட் ஹிட் (BIRD HIT ) ஆச்சு “ என்று சொல்ல..
1+2+3=6 எனக்குத் தெளிவாயிற்று..
கழுகு ஒன்று அடித்ததில் அந்த குறிப்பிட்ட கனெக்டர் வெட்டி விட்டார் போல் துண்டாகியிருந்தது.
அது சரி செய்து அனுப்பினேன்.
Gp.Capt பனேசர் வந்து இறங்கியவுடன்.. “ WHERE IS NATHAN ? “ என்று கேட்க.. நான் சற்று தயக்கத்துடன் சென்றேன்..”
“ YOUR RADAR IS BEAUTIFUL. NICE MAN!! “ என்று சொல்லவும் எனக்கு உயிர் வந்தது.
“ GOOD WORK NATHAN “ இதைச் சொன்னது SQN LDR பட்டாச்சார்யா.
என் ( PROFESSIONAL JURISDICTION ) எல்லையைத் தாண்டி வேலை செய்ததற்காக . எனக்கு.. BEST AIR WARRIOR என்ற கௌரவம் 1994 ல் வழங்கப்பட்டது.
இதை எனக்கு வழங்கியவர்.. மேற்கு பிராந்தியத் தலைமைத் தளபதி..AIR MARSHAL VK GANDHI
அந்தப் புகைப்படம் இணைத்திருக்கிறேன்.
I DEDICATE THIS FIRST HONOUR TO SATHGURU..!
########################################################
I HAVE TRAINED MANY YOUNG PILOTS FROM THE MIG SQUADRONS WHO JOINED THE MIRAGE FLEET, ON THE LASER GUIDED BOMBS DELIVERY. WHILE DELIVERING ANY WEAPON THE FIGHTER HAS TO LOOK AT THE TARGET FOR MORE TIME DURATION IN SECONDS. THIS IS NOT POSSIBLE IN THE HILLY TERRAINS AS THE AIRCRAFT MANOEVUR CANT BE RESTRICTED TO FLYING LIMITS. THE LASER WEAPON CAN AIM THE TARGET IRRESPECTIVE OF THE AIRCRAFT DYNAMICS AT BELOW 5000 ALT.
HERE I WISH TO MENTION.. THESE LASER BOMBS HAVE DESTROYED THE BUNKERS OCCUPIED BY PAKISTAN DURING KARGIL WAR.
“ இந்தப் பாகிஸ்தான் காரங்களை..ஒண்ணுமில்லாமப் பண்ணனும்ப்பா..”
KINDLY WATCH THE MIRAGE VIDEO ATTACHED EARLIER
ALL THE MISSIONS WERE SUCCESSFUL.
FOR WHICH I WAS HONOURED SECOND TIME IN THE MIRAGE SQUADRON.
THE AWARD WAS GIVEN BY THEN WNG COMMANDER NANDRAJOG.
I DEDICATE THIS SECOND HONOUR TO SATH GURU
############################################################
I WAS TRANSFERRED TO AMBALA ( 5 SQUADRON ) IN THE JAGUAR SQUADRON. HERE I CONTRIBUTED THE MAXIMUM TO ACHIEVE 100% FLYING OF ALL THE JAGUAR PLANES ON A PARTICULAR DAY. THIS MEANS ALL THE PLANES SHOULD FLY BEFORE SUN SET TIME. MY 23RD JAGUAR PLANE TOOK OFF JUST 2 MINUTES BEFORE SUNSET. IN THE YEAR 2000.
FOR WHICH I WAS AWARDED FOR BEST EVER CONTRIBUTION FROM AN AIRWARRIOR FOR THE YEAR 2000.
THIS WAS AWARDED BY THE THEN AIR VICE MARSHAL CHINNA
I DEDICATE THIS THIRD HONOUR TO SATHGURU.
############################################################
இலை 36
AIRWARRIOR CONCLUDES.. !!
இந்தத் தளத்தில் விமானப் படை வாழ்வின் சில துளிகளை
“இப்போது” பதிவு செய்ததன்.. காரணங்கள் இரண்டு :.
...
முதலாவது :
சத்குரு அவர்கள் காட்டிய வழியில் என் தகப்பன் போலவே சிரமேற்கொண்டு முற்றிலும் அதற்குரிய புனிதமான தகுதிகளோடு பயணித்திருக்கிறேன் என்பதை அவர்கள் நம்மோடிருந்த காலத்தில் என்னால் தெரிவிக்க முடியவில்லை என்பதாலும்..
இரண்டாவதாக..
அங்கே கொட்டி கிடக்கும் வாய்ப்புக்கள் இன்றைய தலைமுறையினரின் கவனத்திற்கு வரவேண்டும். அதற்குரிய ஆர்வம் இவர்களிடம் துளிர்க்க வேண்டும்.. என்ற என் பேரவாவும் தான் சற்று விளக்கமாக எழுதத் தூண்டியது
சத்குரு எனக்குள் விதைத்த விதையை நான் பல இடங்களில் தூவி இருக்கிறேன். சிலருக்குப் ப்ரத்யேகமான வழிகாட்டுதலும் செய்திருக்கிறேன்..
TRY JOIN THE FORCES.. FEEL THE PRIDE IN UNIFORM....
AND TOUCH THE SKY WITH GLORY...!
JAIHIND
இலை 37
சத்குரு : 31
மறுபடியும் ஷண்முகனாதன் தொடர்கிறேன்..:
அடிக்கடி என் உடன் பிறந்தோரிடம் நான் ஒன்று சொல்வதுண்டு. நீங்களெல்லாம் என்னை விட 20 வருஷங்கள் அப்பா அம்மாவுடன் சேர்ந்து அதிகமாக இருந்திருக்கிறீர்கள்.. என்று.
அந்த வகையில் சத்குருவுடனான 13 வருடங்களை... 1994 வரை இழந்திருக்கிறேன்.
விடுப்புக்களில் வரும்போது அவர்களுடன் கழித்த நேரங்களை விரல் விட்டு எண்ணி விடலாம். அந்தச் சமயங்களில், பெரும்பாலும் தேசத்தைப் பற்றிய கவலைகள் இருக்கும். அங்கே வீட்டிற்குச் செல்லும்போது இருவருமே பரஸ்பரம் வீரவணக்கத்தோடு ( ஜெய் ஹிந்த் ) தான் எதிர்கொள்வோம்.
மனத்தளவில் சீருடையில் சத்குருவும்.. நான் பணியிலும் இருந்ததினால், என்னுடன் பகிர்ந்து கொள்ளும் அந்தக் கணங்களில் சற்றுப் பின்னோக்கிப் பயணித்து அவர்கள் காலத்திய நினைவுகளின் லயிப்போடு தேசத்தைப் பற்றிய சத்குருவின் பகிர்வுகள் நினைவுகளில் நீங்கா இடம் பெற்றிருக்கும் அழியாத சித்திரங்கள்.
1988 – ல் அப்பத்தா அவர்களின் மறைவின் போது.. அந்த உயிரற்ற உடலின் முன் அமர்ந்து “ ஓம் நமசிவாய..” என்று மீண்டும் .. மீண்டும் சொல்ல முயன்று.. முடியாமல் வெடித்து அழுது நின்ற கோலம்.. எங்கள் மனங்களில் உறைந்து நிற்கும், பச்சை மரத்தில் எழுதி வைக்கப்பட்ட கீரல்கள்.
அப்பத்தா அவர்களின் மறைவின் போது நான் கண்ட மற்றுமொரு அழியா நினைவு.. “ அம்மா “ அன்று அழைத்து அழுது நின்ற என் தகப்பன்.
அவனுள் உறைந்திருந்த இந்த “ அம்மாவென்று அழைக்காத மறுப்பை..” வைராக்கியம்.. என்று சொல்வதா..?
குழந்தை பருவத்தில் தாயின் வெறுப்பைச் சுமந்து நின்ற காரணம் என்று கொள்வதா ..?
தகப்பன் அவசியமே இல்லாமல் அந்த வயதில் மறைந்து போனது.. அருணாசலத்தின் குற்றமில்லையே..?
ஒவ்வொரு முறையும் என் தகப்பன்.. என் தாத்தாவின் படத்தின் முன் நின்று.. “ வெரி இர்ரெஸ்பான்ஸிபிள் பெர்ஸன் “ என்று எங்கள் முன் எங்கள் அங்கீஹாரத்தை எதிர்பார்த்துச் சொன்னபோதெல்லாம்..
மனதில் கனன்று நிற்கும் அந்த வலியை எங்களால் உணர முடிந்தது.
அந்த இழப்பை “என்னில் காண முயன்று.. அந்த அளவு கோலில் நான் குறைந்து நின்ற போதெல்லாம்.. நானும் தகப்பன் சொன்னதை.. இன்றளவும் சொல்வது.. தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது..!
“ வெரிமச் இர்ரெஸ்பான்சிபிள் பெர்ஸன் “ நானும்தான்..!
எந்தக் காரணத்திற்காகவும் எந்த தகப்பனுக்கும் தன் பிள்ளைகளை அனாதரவாக்கிச் செல்ல உரிமையே இல்லை. ஒவ்வொரு தகப்பனும் தன் பிள்ளைகள் சுயமாய்த் தலையெடுக்கும் வரையிலுமாவது .. துணை நிற்க வேண்டிய கடமை இருக்கிறது என்பதும்.. இதை நினைவில் கொண்டு குலதெய்வத்தின் நினைவும் கொண்டு முழு எச்சரிக்கை உணர்வோடு வாழ்ந்து சிறந்து வழிகாட்ட வேண்டும்..
என் தகப்பனுக்கு நல்லகாலம். !
தகப்பன் என்ற குறை தெரியாமல் பெரிய தாத்தா ஸ்ரீ.இராமனாத பிள்ளையும், ஸ்ரீ. சுப்பையா பிள்ளையும்.. ஸ்ரீ. அய்யாதுரைபிள்ளை அவர்களும்.. வெவ்வேறு காலங்களில் சுட்டு விரல் பற்றி நடத்திச் சென்றார்கள். மூன்று தெய்வங்களாய் நின்ற குலதெய்வங்கள்.!!
அப்பத்தாவின் மறைவின் பின்பு.. சத்குருவின் வருகை, வீட்டில் அவர்கள் பேசுவதற்கோ.. பிள்ளைகளோ.. அப்பாவோ.. யாருமே ஒன்றாய் கூடுதல் என்பதோ அரிதாகிவிட்டது போன்ற பல்வேறு காரணங்களால் குறைய ஆரம்பித்தது. செல்வ நிலையத்திற்குச் நாங்கள் சென்று வருவதும் கிட்டத்தட்ட நின்றே விட்டது.
இதன் நடுவில் மனித மனங்கள் எடுக்கும் சில அகோர வடிவங்கள்,
உறவுகளின் மேன்மையை ..!
ஸ்ருஷ்டியின் அழகை.. !
உணர்த்திக் காட்டவே..!
என்று நியாயம் கற்பித்துக்கொண்டு வாழ்வை எதிர் நோக்குதல் இங்கே தவிர்க்க முடியாத யதார்த்தம் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டிய நிஜம் ..!
போக்குவரத்து சிதைந்து நின்றிருந்த காரணத்தினாலேயே நான் பாத்யாத்திரைக்கு வரும்போதெல்லாம்... அனைவரின் வீட்டிலும் பூஜை என்ற நிகழ்வை எல்லோரும் ஒன்றுகூடவென்று பின்னாளில் ஆரம்பித்து வைத்தேன்..!
இப்படியிருக்க சத்குரு ஒரு நாள் இரவில் 9 மணிக்கு மேலிருக்கும்.. வெறும் துண்டு போர்த்திக்கொண்டு வந்து அப்பாவின் பெயர் சொல்லி அழைத்தபடி நின்றார்கள்.
கண்களில் கலக்கம்....!
###################################### தொடரும்.. பதிவுகள்
இலை 38
சத்குரு : 32
அந்த அசாதாரணமான் இரவு நேரத்தில்.. வெறும் துண்டு மட்டும் போர்த்திக்கொண்டு சத்குரு வந்திருக்கிறார்கள் என்றால்..
அப்பா பேப்பர் படித்துக்கொண்டிருந்தார்கள்.. வெளியே அப்போது கேட் போடவில்லை. ஒரு கம்பு மட்டும் இருக்கும். அதை எடுக்கும் சத்தம் கேட்டு அப்பா வெளியே லைட் வெளிச்சத்தில் பார்க்க .. சத்குரு..!!!!
...
ஒரு கணம் திகைப்புற்றாலும்.. சமாளித்துக்கொண்டு.. “ என்ன..?” என்று கேட்க
“.. அப்பா... ! அம்மா..!.. அம்மா..!” வேறு வார்த்தைகள் வரவில்லை.. குரல் கம்மி ஒலிக்கிறது
சொல்லும்போதே பேச முடியாமல் உதடுகள் துடிக்க.. கண்களில்.. நீர் ததும்பிக்கொண்டு.. சொல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
ஏற்கனவே முருகா அம்மாச்சிக்கு உடல் நிலை சரியில்லாம்ல் இருக்கிறது என்பது தெரிந்த விஷயமே என்பதால்.. அப்பா முகத்தில் ஒரு நிம்மதி..
அப்பாவிடம் பதற்றம் இப்போது இல்லை.
“ அம்மாவை சென்னையிலிருந்து கூட்டிக்கொண்டு வர்ராங்களாமப்பா..” இதைச் சொல்லும்போதே தொண்டை அடைக்கிறது சத்குருவுக்கு.
ஆனால் அப்பாவிடம் அந்த உணர்ச்சிக் கொந்தளிப்புக்கேற்ற முக பாவம் நிச்சயமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
தன்னுடைய தாய் சென்று சில மாதங்களே ஆகியிருக்க. தகப்பன் முகமே தெரியாது..
இந்த நிலையில்.. .. தன் அத்தை சிறப்புற வாழ்ந்து... உடல் நலிந்து இறுதி நாட்களை நெருங்கிக்கொண்டிருந்தது பெரிய தாக்கத்தை மனதில் ஏற்படுத்தவில்லை என்று புரிந்துகொள்ளும் அதே வேளையில்..
இத்தணை வயதான பின்பும்.. “தன் தாய்” முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பை.. செய்தியை.. அந்த “ மகனால்” மனதாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதையும் புரிந்துகொள்ளும் மன நிலை நமக்கு இருந்தேயாக வேண்டும்..!.
எத்தணை வயதானால் என்ன..?
“ பிள்ளைகள் மூப்பதில்லை.. பெற்றோர் காண்..!”
என்பது உண்மைதானே!
அந்த உதாரண மகனாய் சத்குரு.
இந்த சோகமான மன நிலையில் .. அந்தச் செய்தி கேட்டதும்.. பகிர்வதற்குப் பக்கத்தில்.. எவரும் இன்றி அக்கணமே.. புறப்பட்டு.. மகன் ஸ்தானத்திற்குச் சற்றும் குறையாத அருணாசலத்திடம்.. ஓடோடி அந்த ராத்திரியில் வந்து நிற்கும் .. இந்தக் காட்ஷியின் பதிவு..
ஒரு அருமையான மகனையும்..!
மகனாய் நின்ற மருகனையும்...! முன் நிறுத்தும்..
அடுத்த இரண்டாம் நாள் கொழும்பில் பெற்றெடுத்த அந்தப் பசளைப் பேரரசி சுப்பையன் ஜோதியில் கலந்தது.
( இந்தப் பதிவு தங்கை ரேவதி கூற எழுத்தில் நான் பதிக்கிறேன் )
##################################
#
இலை 39
சத்குரு : 33
ஞானமளிப்பவன் யார்..?
அந்த முறை நான் லீவில் வந்திருந்த சமயம் செல்வ நிலையத்திற்குச் சென்றேன். வழக்கமான பரஸ்பர சம்பாஷணைகளில் என்னை அதிகம் கவனிக்க வைத்தது..
“ How is your wife and child ..? “
இந்தக் கேள்வியை சத்குரு என்னிடம் கேட்டபோது.. அதில் நான் உணர்ந்த தூரம்...
அந்த நிமிஷத்தில் நான் தூரத்தில் இருந்தேனா.. அல்லது அவர்களே எட்டாத தூரத்தில் இருக்கிறார்களா..?
என்று ஒரு கணம் குழம்பியபடி நான் இருக்க..
என் முகம் செத்துவிட்டது எனக்கே தெரிந்தது.....
ஒன்றும் புரிந்து கொள்ள முடியாத நிலையில் சீக்கிரம் கிளம்பிவிடலாம் என்று கூடத் தோன்றியது.
அளவற்ற பாசமும் பிரியமும் கொண்டோரின் சின்ன புருவச் சுளிப்புக் கூட மனது தாங்க மாட்டேன் என்கிறதே...!
“ ஷண்முகனாதா.. ராஜ யோகமனு கேள்விப்பட்டிருக்கியா..?.. அதப்பத்தி எதாவது தெரியுமா..? என்று கேட்க..
‘’ராஜ யோகம்-னு விவேகானந்தரின் புத்தகம் இருக்கிறது.. இன்னும் அதை நான் படிக்கவில்லை.. பிரம்மகுமாரிகள் இயக்கத்தில் அது சொல்லித்தருகிறார்கள்
எனச் சொல்ல..
“ அந்தப் புஸ்தகத்தைக் கொண்டு வந்து கொடுப்பா..” என்று சொன்னதும் என் முகத்தில் கொஞ்சம் உயிர் வந்தது.
மறு நாள் காலையிலேயே.. சத்குரு வீட்டில் பிரசன்னம்.. நான் கொண்டுபோய்க் கொடுப்பது வரை காத்திருக்கவில்லை
அப்போதுதான்.. முதல் முறையாக சத்குரு.. தான் “.YSS..” ல் இருப்பதைத் தெரிவித்தார்கள். மேலும் ‘கிரியா யோகம்” பற்றிய வழிகாட்டுதல்களின்படி அந்தப் பாதையில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதை சத்குருவின் பேச்சில் தெரிந்து கொண்டேன்...
அந்தச் சமயத்தில் அனைவரும் குறிச்சிக்கு எங்கள் குலதெய்வம் கும்பிட போயிருந்தோம். விசேஷம் இதில் என்னவென்றால் “ சத்குருவும்.. சிதம்பரம் பெரியப்பா” இருவரும் அந்த முறை வந்திருந்தார்கள்
வழக்கம்போல் பூஜை..செய்து விமரிசையாக சாமி கும்பிட்டோம். அப்பாவிற்கு அருள் வந்து வாளேந்தி ஆட... எல்லோரும் சூழ்ந்திருக்க... அனைவர் கண்களிலும் கண்ணீர் வழிந்தோட அந்த இடமே முத்தையன் ஆக்கிரமிப்பில்.. மின்பாய்ந்திருந்தாற்போல இருந்தது..
அந்தச் சூழலில் சத்குரு “தனியே” நின்றிருந்ததும்..
ஆங்காங்கே.. இருந்த சின்னஞ்சிறுசுகளை .. “ அங்க போய் சாமி பார்..” என்று சொல்லிக்கொண்டிருந்ததையும் நான் கவனிக்கத் தவறவில்லை....
முதலில் என்னிடம் அவர்கள் “ How is your wife and child ..? “ என்று கேட்டபோது தூரத்தை உணர்ந்தேன்..
பேசிய சில சந்தர்ப்பங்களில் வழக்கமாகப் பேசும் பேச்சுக்களில் இருந்துகூடத் தூர உணர்ந்தேன்..
இப்போது குல தெய்வம் கும்பிட வந்த இடத்திலும்.. சத்குரு தூர இருந்ததை கவனிக்கிறேன்.
ஏன்..?
இது பற்றிய கேள்வி என்னுள் இருந்து கொண்டே இருந்தது..? ஒருவேளை அப்பத்தா இருந்திருந்தால் ஏதாவது தெரிய வந்திருக்குமோ என்னவோ..?
நானே ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தேன்.. அந்த நாளும் வாய்த்தது..!.. சத்குரு வீட்டிற்கு வந்திருந்த சமயம் கேட்கிறேன்
“ மாமா நீங்கள் கோவிலில் அப்பாவிற்கு சாமி வந்த போது தூரத்திலேயே நின்றிருந்தீர்கள்..? ..” என்று தயங்கியபடி முடிக்காமல்... ..விட..
“ ஷண்முகனாதா.. சாமியாடுறதுன்னா உனக்கு என்ன தெரியும்?.. நீ ஆடிருக்கேல்ல ..! இப்ப சொல்லு..!”
“ அது ஒரு மாதிரி நான் என் உடம்பே பத்தாமல் இருப்பது போலவும்.. ஒரு பெரிய சக்தி மின்னல் போல உள்ளே இருப்பது போலவும் தோணும்... அப்படியே மனசு உணரும் பலத்தில் அந்த இடத்தையே ஒரே கையாலேயே இருக்கும். பெரிய மரத்தை எல்லாம் கூடப் பிடுங்கி எறிந்துவிடலாம்..போல அவ்வளவு பலசாலியாக.. இருப்பது போல இருக்கும்..”
இதற்கு முன்னால் நான் சில முறை அப்படி ஆடி இருக்கிறேன். சேலத்திலும் ஆடியிருக்கிறேன்..
“ ஏன் என்று யோசிச்சியாப்பா..?”
“ இல்லியே.. ஆனா ஒரு நாலஞ்சு நாளக்கி .. இப்படியே பவர்ஃபுல்லா இருக்குற மாதிரி இருக்கும். மாமா..!”
“ அப்ப நீ என்ன சொல்றேன்னு உனக்குத் தெரியுமா..?”
“ தெரியும்...ஆனா ஏன் இப்படிச் சொல்றேன்னு தெரியாது..!”
இப்படியாக அந்த உரையாடல் மேலும்.. மேலும்.. நிகழ்ந்தது.
..................................!!
...................................!!
...................................!!
அதில் புரிந்து கொள்ளுதல் என்பதற்கு .. மிகவும் அப்பாற்பட்ட விஷயங்களைப் பேசினார்கள்..! அது விமரிசனங்களுக்கோ.. அஹங்காரம் சார்ந்த அறிவுக்கோ நிச்சயம் எட்ட முடியாத தேவ ரகஸ்யமாகவே எனக்குப்பட்டது...
அன்றைய சத்குருவின் அமைதியான ஸ்வரூபம்.. நான் இதுகாறும் கண்ட ரூபம் இல்லை..!
சுய பரிசீலனை.. என்பதன் அவசியத்தை எனக்கு உணர்த்திய கம்பீர ரூபம்..!
முடிவில் “யோசுச்சுப் பார்..”! என்று விட்டுச் சென்றார்கள்...
அந்த நாளின் முற்பகல் 11 மணி வரையிலுமான இரண்டு மணி நேரங்களுக்கு நான் மிகவும் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்....!!!
=========================================================
அந்தப் பேச்சின் சாரத்தை நான் படித்த பின் வரும் சின்னஞ்சிறு கதையின் மூலம் பதிவு செய்கிறேன்.
“ குழந்தையொன்று ஆண்டவன் படத்தின் முன்னே நின்று கண்கள் மூடி வேண்டிக்கொண்டிருந்தது..”
இதைப் பார்க்கும் தாய் கேட்கிறாள்...!
“ என்ன வேண்டுகிறாய் செல்லம்..?”
“ அம்மா திருக்குறளை எழுதி இருப்பது “ பாரதியாராக இருக்க வேண்டும்.. என்று வேண்டினேன் அம்மா..”
என்றது குழந்தை..!
“ ஏண்டா செல்லம் அப்படி வேண்டினாய்..? எனத் தாய் கேட்க
“ அப்படித்தானம்மா நான் டெஸ்டில் எழுதி இருக்கிறேன்..” என்றது குழந்தை
############################################## தொடரும்....
இலை 40
சத்குரு : 33
ஷண்முகனாதன் நிறைவு செய்கிறேன் :
அன்று சத்குரு கூறிய வாசகங்கள் ஆழ்ந்த மன ஒருமையுடன் உச்சரிக்கப்பட்டன. பலனை உறுதியாகக் கொடுக்கவல்ல உள்ளார்ந்த திறன் கொண்டவையாய்த் திகழ்ந்தன.
...
அச்சொற்களிலில் இருந்து கிளம்பும் அதிர்வலைகளை உரிய முறையில் பயன்படுத்த, எவனொருவனின் வாழ்க்கையிலும் துன்பங்களில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று தோன்றியது.
ஆன்மீக பலமுள்ளவர்களிடம் உரிய தகுதிகள் கொண்ட சீடர்கள் தாமாகவே செலுத்தப்படுகிறார்கள். அவர்களிடமே குருக்களின் போதனைகள்.. சென்றடைகின்றன.
நம் சமுதாயம் ஒரு தொடர்ச்சியான உயிருள்ள பாரம்பரியத்தின் மூலமாகவும்.. புத்துணர்ச்சியூட்டும் குருக்களின்.. நம் முன்னோர்களின் மூலமாகவும்.. கணக்கற்ற மாற்றங்களிடையே கூடத் தன்னைச் சரி செய்து கொண்டு பயணிக்கிறது...
நம்மிடம் நம் முன்னோர்களின் குணதிசயங்கள் ஜீன் களில் கடத்தப்பட்டு நம்மில் விரவிக்கிடக்கின்றன. அவையே நமக்காக அவர்கள் விட்டுச் சென்ற பெரும் புதையல்.
அவர்களின் பூத உடல்கள் நம் கண்களுக்குப் புலப்படாது இருந்தாலும்.. அந்த உடல்கள் சுமந்த ஆன்மாக்கள் நம்மைக் காத்து அருள் புரிவதோடு.. தங்கள் பயணத்தையும் தொடர்ந்தபடியே இருக்கின்றன.
தகுந்த தருணங்களில் தங்கள் இருப்பின் அருகாமையையும் புலப்படுத்துகின்றன.
அவர்கள் நிலைத்திருப்பவர்கள்...என்றென்றும்..!
சூழ்னிலைகள் காரணமாகவோ.. தவிர்க்க முடியாத நியமங்களின் பொருட்டோ.. முன்னைப்போல் அல்லாது.. நம் குடும்பங்கள் வெவ்வேறு.. இடங்களில்.. சிதறிக்கிடந்தாலும்..
இந்தக் கால கட்டத்தில்
இது தவிர்க்க முடியாததே என்றாலும். கூட.
அன்பின் வழியில் இணைந்தே இருக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
அதனாலேயே பாட்டன்களின் பெயரைச் சொல்லி ஒன்று கூடுகிறோம்.
இந்த ஒன்று கூடல் அடிக்கடி மனதில் துவேஷங்களின்றி நிகழ வேண்டும்.
ஒன்று கூடி அன்று பேத்தி எடுத்த புகைப்படம்.. வெறும் நிழலாய் மட்டும் இருந்துவிடாமல்.. நிஜமாகவும் இருக்க முன்னோர்கள் அருள்புரிய வேண்டும்..
தீய சொற்களும்.. மனிதர்களும் நிச்சயம் பலம் உடையன அல்ல. அதைப் பலமுள்ளதாகச் செய்வது நம்முடைய மனங்களே..!
நாம் கொடுக்கும் முக்கியத்துவமே..!
நல்லவை தீயவை என்று எதுவும் இல்லை பாகுபாடு செய்து பார்ப்பது கன்மம் கைக்கொள்ளும் மனங்களே. அதற்கு வெகுதூரம் பயணப்பட வேண்டியதிருந்தாலும்...
முன்னோர் பால் கற்றவற்றைக் “கொஞ்சம்” கடைப்பிடித்தாலே போதும்.. நல்மார்க்கம் தென்படலாம்..!
மற்றவரிடம் கொள்ளும் அன்பாயிருக்கட்டும்...
தோட்டத்தில் மலர்ந்து கிடக்கும் பூக்களாகட்டும்...
ஆண்டவனின் அருளின்றி.... அவை நிகழ்வதில்லை..!
இறை நம்மை நெருங்கி வருவது.. குருக்கள் மூலமாகவே..!
இதை அனுபவபூர்வ உணர்வோடு பகிர்கிறேன்.
அந்த அளவற்ற நன்றி உணர்தலால்தான்.. என்னுடைய அத்தணை பகிர்வுகளும் இருந்தன என்று கூறுவேன்.!
நன்றியுடன் இருப்பதென்பது.. நாங்களாக வளர்த்துக்கொண்ட பண்பல்ல..!
எங்களுக்கு வழங்கப்பட்ட ஒன்றால் உணர்ச்சிவசப்பட ஊற்றெடுக்கும் ஓர் உணர்வு..!
மனித உருவிலும்..
தெய்வ உருவிலும்....
தொழுது வரும் தெய்வங்களிடமிருக்கும்
“தாய்மை” எனும் பேரன்பு பரிதவிப்போரின்
இறைஞ்சுதல்களை கேட்காமலிருக்காது......
என்ற மாறாத நம்பிக்கையுடன் என் பகிர்வுகளை நிறைவு செய்கிறேன்...
வாழிய பாரதம்...!
ஜெய் ஹிந்த்..!
மிக்க அன்புடன்
ஷண்முக நாதன் அருணச்சலம்.