Monday, 18 May 2015

விழுது - ரேவதி

இலை 1

செல்வ நிலையம்
 எங்களது நந்தவனம்
 அதில் இருந்த பெரும் விருட்சம்
 தாத்தா...
அந்த விருட்சம் எத்தனையோ
ஜீவ ராசிகளுக்கு
 அடைக்கலம் alidhadhu
நானும் ஒரு சிறு எறும்பாய்
 அந்த விருட்சத்தில்
 ஊர்ந்து இருக்கிறேன்
 என்பதே என் வாழ்வின்
 பெருமை....
மழை போல்
 வாழ்ந்து....
நிறைய மனங்களை
 நனைத்து இருக்கிறிர்கள்
 தாத்தா...
அந்த மழையில்
 முளை விட்ட
 சிறு விதை
 நான்....
மீண்டும் துளிர்ப்பேன்.......





Aravindan Selvaraj Very poetic intro! Pl keep writing..


Karuppiah Shanmugam அடடே பாட்டாவே பாடிட்டியா .....

சபாஷ்

Revathi Arunachalam பாந்தமனவர்களை நினைக்கையில் ....பாடல் வருவதில்வியப்பில்லை...................................பாசாங்கு செய்ய மனமும் இல்லை.

இலை 2

முத்து ரத்தினம்
பெற்றுஎடுத்த
நவ மணிகளில்
முதல் ரத்தினம்....
...
என் அப்பத்தாவும்...பெரிய தாத்தாவும்..
இந்த அண்ணனும் தங்கச்சியும்....ஒருவருக்கு ஒருவர்
மன சஞ்சலங்களை பகிர்ந்து கொண்டு..ஆறுதல்சொல்லிக்கொண்டு
மனோதிடத்துடன் இறுதிவரை
இணைந்து இருந்து
என்னுள் சிரஞ்சீவியாக
வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.....
தாத்தாவின் நடை வைத்தே அப்பத்தா அவர்கள் மனதைகண்டு கொள்வார்கள். தாத்தா கம்மிய குரலில் பேசுவார்கள்
அப்பத்தா" எதுக்கு அண்ணே kalanguringa " என்று உறுதியான
குரலில் சொல்வார்கள்....சற்று நேரம் மௌனம் தொடரும்...பின்பு அப்பத்தா தரும் காப்பியை குடித்துவிட்டு..."வரேன்சௌந்தரம்" என்று தாத்தா
நடந்து செல்வார்கள். அதை வாசலில் இருந்து அப்பத்தா கண்ணைவிட்டு மறையும் வரை பார்த்தே இருந்து விட்டு..."எப்பேர்ப்பட்ட அண்ணன்" என்று பெரு மூசெரிவதை... வியந்து பார்த்து இருக்கிறேன்.

இளம் வயதில் கைம்பெண் ஆன தங்கச்சியை கரம் பிடித்து கரை ஏற்றிய அண்ணன்...... அந்த நன்றி மறவாத தங்கை....உயிர்ப்போடு என்னுள்


Aravindan Selvaraj The last few lines..very emotional!. A great brother for an equally great sister!

Deepa Senbagam வரிகள் சொல்லும் சரித்திரம்.செவி வழி வந்தவை வரி வழியாக மனதை அடைகிறது. ஒவ்வொருவர் எழுத்தும் தாத்தாவைப் patriya ஒரு புது கோண பார்வையில் விரிகிறது.

Ravindran Aiyadurai இந்த வீரமங்கை வேலுநாச்சியாரைப் பற்றி தனிக் காவியமே எழுதலாமே ரேவாப் பொண்ணு(அல்லது)எங்கள் பெரிய தம்பி

Jeyasree Suresh பெரிய அம்மாச்சி இறந்த அன்று வாழைப்பழம் வழக்கமாக வீட்டில் கொணர்ந்து விற்கும் ஒரு பாட்டி "பழம் வாங்கலையா சாமி" என வினவ, அதற்கு தாத்தா அவர்கள் "என் தங்கச்சி செத்துப்போச்சும்மா" என்று சொல்லும்போது உடைந்து கண்ணீர் வந்ததை பார்த்த அன்று அவர்கள் பாசத்தை உணர முடிந்தது.



இலை 3

அய்யா துரை....
ஆச்சார்யன்(ர்)
இறுமாப்பு அற்றவர்
 ஈந்து மகிழ்ந்தவர்..
உறவுகளின் தோழர்....
ஊர் போற்ற வாழ்ந்த் உத்தமர்
 என்றும்நினைவில் நிலைத்து இருப்பவர்
 ஏணிப்படியாக இருந்துஎங்களைஏற்றியவர்
 ஐயம் அகற்றிய அய்யா
 ஒழுக்கத்தின் உண்மை பொருள்
 ஓம்காரம் எமக்குரைத்த எங்கள் குரு
 ஓவுஷதம் நீரே எங்களுக்கு

Subhasree Sundaram "உயிர்" எழுத்துக்களில் "மெய்" நிறைத்து, இது அய்யன் ஆத்திசூடி!!

இலை 4

தாத்தா வீடு....
நாங்கள் சுதந்திரமாக கால் பதித்த இடம். எங்கள் அப்பாவின்"அப்பா" என்ற வெற்றிடம் எப்படி நிரப்பட்டதோ அதற்கு சற்று குறைவின்றி எங்களுக்கு தாத்தா என்ற பாச உணர்வை உணர செய்த பெரிய தாத்தா....
சுபா நீ சற்றே பின்பு பிறந்ததால் அந்த விபூதி தோய்ந்த விரல்கள் பற்றி வீதி உலா நடந்தேறியது.
குஞ்சுகள் என்று குழந்தை சிரிப்போடு தாத்தா எங்களை வரவேற்பது என் குதூகலம் கூட்டியது. அநத களிப்பில் தாத்தாவின் கால்களில் ஏறி நின்று ஊஞ்சல் ஆடிய உவகையன நாட்கள் அவை.
ஜன்னல் கம்பிகளை பிடித்தபடி தாத்த...ா தூங்க கால் மிதிப்பது ஞாயிற்றுக்கிழமை வேலை.
சந்தனம் இழைக்க தண்ணீர் தருவது
சந்தனம் இழைப்பதை வேடிக்கை பார்ப்பது
வேடிக்கை பார்க்கையில்விரல் நீட்டி விஷமம் பண்ணுவது
"அதிகப்ப்ரசங்கி"என்று அதட்டல் வாங்குவது ....
தாத்தாவின் அதட்டலை அச்சடித்தார் போல்
இருக்கும் அந்த பொட்டு...ஆச்சர்யம் கொடுத்து
அழுத்திவிடும்....

Karuppiah Shanmugam 


No comments:

Post a Comment