இலை 1
விசும்பின் துளிவீழின் அல்லால் இங்கே பல நிலங்கள் பசுமை கண்டிருக்குமோ... அவ்வுயிர்த்துளியில் புல்லாய் முளைக்கும் பேறு பெற்றவன் என்ற பெருமையுடன் பாத கமலங்களில் நமஸ்கரிக்கிறேன்

இலை 2
மற்றும் சில மகிழ்வான என் இளம்பிராயத்து பழங்கானத்த.. நினைவுகள்.. கணம் நீதிபதி...
அவர்களுடன் சேர்ந்து பகிர்ந்து கொள்வதில் சந்தோஷப்படுகிறேன் :
..காலையில் “வந்தேமாதரம்.. சுஜலாம்..சுபலாம்..” ரேடியோவில்கேட்காத நாட்கள் இல்லை
...

அந்த பச்சை கலர் ‘மாஜிக் ஐ” அடிக்கடி ட்யூன் பண்ணி வைப்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும்
குளிக்கும் இடத்தில் சிட்டுக் குருவிகள் குளிக்கத் தண்ணீர் நிரப்பி வைப்பதை சத்குரு தவறாமல் செய்வார்கள்.
மாடிப்படியில் உட்கார்ந்தபடி ஒரு பிரவுன் கலர் ஸ்டூலை காராகப் பாவித்து ஓட்டியபடி.. சிறு மூங்கில் கம்பை இடது பக்க கல்லிடுக்கில் செருகி.. கியர் மாற்றி.. ஓட்டியது.. இதுவே எனக்கு ஆட்டோமொபிலில் பெருவிருப்பம் கொண்டதற்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்..
பக்கத்து வீட்டில் ஃபேன் மேல் கூடு கட்டி குஞ்சு பொரித்திருக்கும் சிட்டுக்குருவிகள்......
வீடுகளுக்கு நடுவே இருக்கும் சந்தில் ஓலைக் காத்தாடி பென்சிலில் கலர் அடித்து காக்கா முள் குத்தி ஓடவிடுவது..
அந்த முல்லைக் கொடிகளில் இருக்கும் பூக்களை பறிக்க காம்பவுண்ட் சுவற்றில் ஏறி..ஏறுவதற்கு வாகாய் சுவற்றில் இருக்கும் என் கால் பெருவிரல் வைக்கச் சரியான சிறு செங்கல் குழி..
சாமி ரூமில் மனக்கும் சந்தனம்... அரக்கும் போது சத்குருவின் கைகளில் ஆடும் சதைக்கதுப்பு..
சாமி ரூம் நிலைப்படியில் ஒரு சரிவான மேடு இருக்கும்.. அது என்னுடைய கார் பொம்மைகளை.. தானே உருள வைக்கும்.. உருளும் காருக்கு முன்பாக இரு தீப்பெட்டிகளை வைத்து ,, அதன் நடுவில் இந்த கார் இடிக்காமல் போய்விட்டால் வரும் இன்பம்...
ரவி அத்தான் எனக்கு முதன் முதலாய் டைம்பீஸ் வைத்து கடிகாரம் பார்க்கச் சொல்லிக் கொடுத்தது.. ( உங்களுக்கு நினைவிருக்கிறதா அத்தான்..?)
இரவில் வெள்ளை வெளேரென்று தலைகாணி உரை போடுவது...
பக்கத்து சந்தில் ஓயாமல் கேட்கும் சண்டைச் சத்தம்..
அதைப் பார்க்க முற்படுகையில் காதில் விழும் சத்குருவின் அதட்டல் குரல்..
.
இரவில் பாபுவும்.. அத்தானும் மாடியில் சுவற்றில் உட்கார்ந்து கொண்டு பேசுவது..
அப்பவெல்லாம் ட்ரவுசரில் தோள்பட்டை பெல்ட் இருக்கும் எக்ஸ் போலக் குறுக்காக.. அந்த ட்ரவுசர் போடும்போது.. நான் நடனம் ஆடுவது போல இருக்குமாம்.. அதை.. (“ ஷன்முகனாதா.. அங்க அந்த ட்ரவுசரைப் போட்டுக் கண்பி..” என்பார்கள்... நானும் குஷாலாக செய்து வைப்பேன்.. அதிலொரு பெருமை..!
அப்பா ஃப்ரண்ட்சுடன் சீட்டு விளையாடியதைப் போட்டுக் கொடுத்தது...
தம்பி ஸ்ரீதரை உப்பு மூட்டை தூக்கிச் சென்றது.. வழியில் வண்ணான் வீட்டில் இருக்கும் கழுதைகளை வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்பது..(என்ன வேடிக்கையோ..? அவ்வளவு நேரம் நிற்பேன்..)
சாயந்திரம் அத்தை டீ போடும்போது ஸ்டவ்விலிருந்து வரும் புகை வாசனை..
அம்மாவைப் ‘போடி’ என்று சொன்னதற்கு சத்குருவிடம் வாங்கிய அறை...
சத்குரு கழற்றி வைக்கும் மஞ்சள் நிற ரப்பர் காலணி..
அவர்களின் கால் அமுக்கி விடுவது.....
பழங்கானத்து பாலம் வரை வாக்கிங் சென்றது.. அப்போது திருமலைத் தென் குமரி படத்திலிருந்து பாடல் பாடியது...
டி.வி.எஸ் பள்ளியில் 2 ம் வகுப்பு படித்தபோது..வரும் வழியில் கோவலன் பொட்டலுக்கெதிரில் மீன் பிடித்தது.. (வலையாக என் சட்டையை உப்யோகித்துவிட்டு.. வீட்டில்.. சத்குரு இருவரும் வழங்கிய வெகுமதிகளை வாங்கிக் கொண்டது..)
பாப்பா அத்தாச்சி க்ளாசில் டீச்சர் சொல்லி ஒரு மாணவியின் புத்தகத்தை தூக்கி மூஞ்சியில் எரிந்தது...
நினைவுகள்...நினைவுகள்....மரிக்குமோ..?
இலை 3
பதிவு என்றதும் தான் எனக்குத் தெரிந்தத்து.. அவரவர் மொழியில் பதிவு செய்யலாம் என்ற செய்தி... மிக்க மகிழ்ச்சி...இன்று எழுதியது.. மூர்த்தி மாமாவின் எழுத்தில் கிடைத்த உந்துதலால்...தம்பி அரவிந்தனின் அகரத்தோடு.. என் பதிவுகளும் தொடரும் ..நாளை முதல் .நூற்றாண்டு மிகச் சிறப்பாக முத்தாய்ப்பாக இருக்க அனவரும் ஒன்று கூடுவோம்...சத்குருவாயும்..பிதாமகராயும் விளங்கும் எந்தையின் புகழ் பரப்புவோம்... நெஞ்சம் விம்மி வழிகிறதடா...!
இலை 4
சத்குரு பதிவு : 2 :
அப்பொழுது நான் ஜெயராஜ் நாடார் ஸ்கூலில் படித்துக்கொண்டுருந்தேன்..மூர்த்தி மாமா வெள்ளைசாமி நாடார் கல்லூரியில். ஹாஸ்டலில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தார்கள். தினமும் மாலையில் செல்வ நிலையம் வருவது வழக்கம்.
அப்படி ஒரு நாள் அங்கே வந்திருந்தபோது.. வீட்டில் மேஜை மேல் பெரிய கண்ணாடி வைக்கப்பட்டிருக்கும். அதற்கு முன்னால் பெரும்பாலும் அமர்வது வழக்கமாய் இருக்க..
பாமா அக்கா மூர்த்தி மாமாவிடம், “ ஏம்ப்பா மூர்த்தி..இங்க வர்ரப்ப எல்லாம் அந்தக் கண்ணாடி முன்னாலேயே உக்கார்ற..! ‘ என்று பரிகாசம் தொனிக்கும் குரலில் சிரித்துக்கொண்டே கேட்க...
“ அத்தாச்சி.. அது எதுக்குன்னா.. நான் எப்போதும் ஒரு பெரிய மேதை முன்னால் உட்காருவதையே விரும்புகிறேன்..” என்று சிரித்தபடி உடனடியாக யோசிக்கவே இல்லாமல் பதில் சொன்னர்களாம்.
நான் அங்கு சென்ற சமயம் சத்குரு .. இந்த நிகழ்ச்சியை என்னிடம் சொல்லி, “ ஷண்முகனாதா பதில் சொல்றதிலயும்.. பொருத்தமா ..சாதுர்யமா எப்படி பேசனும்னு..புரிஞ்சுதா..? “
“..ம்.. புரிஞ்சுச்சு.. மாமா..” என்று உண்மையிலேயே புரியாமல் பதில் சொல்ல..
“ என்ன புரிஞ்சுக்கிட்ட..? “ என்று விடாமல் கேட்க.. ..நான் முழித்தேன். எனக்கு அது புரியத்தான் இல்லை.
“ சாம்பிராணி.. கண்ணாடியில தெரியிற நம்ம உருவத்தை.. எவ்வளவு.. அழகா.. சாதுர்யமா ‘மேதை” ன்னு சொல்லி ...அந்த புத்திசாலித்தனம் வேணும்டா..! எப்பவும்..” என்று தலையில் மெதுவாகக் குட்டினார்கள் சத்குரு..
மோதிரக்கைக் குட்டு என்பது இதுதானோ..?
இந்த வாக்குச் சாதுர்யம் ஒரு வேதியியல் மாணவரை நீதிபதி ஆக்கிப் பார்த்திருக்கிறது என்பது.. நாம் அனவரும் அறிந்ததே..!
இலை 7
Sydney Carton’s Sacrifice…
அப்டின்னு ஒரு பாழாப்போன பாடம் இங்க்லிஷ்ல . அப்ப 9 ம் வகுப்பு படிச்சிட்டு இருந்தேன்...
ஒண்ணும் இல்ல “ சாக்ரிஃபைஸ்’ அப்ப்டிங்கற வார்த்தைக்கு .. என்ன அர்த்தம்?....னு கேட்டாங்க.
தெரியலைன்னு சொல்லிப்புட்டேன். அப்படி ஒரு கோபம் சத்குருவின் முகத்தில்..! புருவங்கள் சுருங்கி.. கண்கள் பெரிதாகி..!
டி.வி.எஸ் ல அப்பாவின் நண்பர் ஒருவரின் நான்கு பிள்ளைகள் வீட்டில் எங்களுடன் தங்கிப் படித்துக் கொண்டிருந்தார்கள். தினமும் மாலையில் சத்குரு அப்போது தங்கியிருந்த திரு.முருகரத்னம் ( தமிழ் பேராசிரியர்.. காமராசர் பல்கலை ) என்பவரின் வீட்டில் டியூஷன்.
இந்தக் கேள்வி சேகர் என்பவனிடம் கேட்கப்பட.. பாவிப்பய.. ‘தியாகம்” அப்டின்னு சரியான பதிலைச் சொல்லிப்புட்டான்.
அவ்வளவுதான்..?
நெற்றிக்கண் .. திறக்கப்பட...கழனிப் பானையில விழுந்த எலி வடிவாய் ... ‘ நாதன் ‘ நான் ‘நக்கீரன்..’ ஆனேன்..!
“மடச் சாம்பிராணி.. இந்த வார்த்தை கூடத் தெரியாம.. என்னடா படிக்கிறீங்க..?
“.........” மனசு.. தொடை.. எல்லாம் கிடு..கிடு..
பெரும்பாலும் மாலை நேரங்கள் மிகவும் பயங்கரமானதாகத்தான் தோன்றும்.
தினசரிப் பயங்கரங்கள்.
இங்கே கோபத்திற்குக் காரணமே.. எனக்கு அர்த்தம் தெரியாமல் போனது கூட இல்லை..!
இன்னொருவனுக்குத் தெரிந்திருந்ததே..! அதுதான்
.....சத்குருவால் சகிக்க முடியாமல் ..கோபம் வந்துவிட்டது.. போலும்
POSSESSIVENESS.....
இந்த வார்த்தைக்குப் புது அர்த்தம் கற்பித்தவர்..சத்குரு..!
இது அன்று..!
இன்று....
... எங்கள் பள்ளியில்.. ஆசிரியர்களிடம்... மாணவ.. மாணவியரிடம்.. நான் கேட்கிறேன்..? தினசரி..
“....... “ என்ன அர்த்தம்..?
பி.கு: 8, 9 மற்றும் 10- என ஒவ்வொரு வகுப்பிலும் தினசரி புதியதாய் 5 ஆங்கில வார்த்தைகளுக்கு .. தமிழில் அர்த்தத்தோடு ..சிறிய வாக்கிய அமைப்பும் பயிற்சி கொடுக்கப் பணித்திருக்கிறேன்..
“ குரு தேவோ..மஹேஷ்வரஹ..”
இலை 8

சத்குரு : பதிவு 4:
பாகம் ..1
சாதுர்யமாகப் பேசுவது.. என்பது பற்றி நேற்றுச் சொல்லியிருந்தேன்...
சாதுர்யமாய் நான் நினத்துக்கொண்டு பேசியதை... இங்கே பதிவு செய்கிறேன்.
இந்தப் பதிவு.. யாரையும் சுட்டிக்காட்டுவதற்காக அல்ல..!...
பட்டறையில் அடிபடாமல் உருப்பெறுதல் சாத்யமில்லையே..!
உளிகளின் ஆதிக்கமில்லாமல் நற்சிலைகள் உருப்பெறுவதில்லயே..!
**************************************************************************************
அப்பத்தாவுக்கு.. அப்போது உடல் நிலை மிகவும் சரியில்லை.... என் அப்பத்தாவை அப்படிச் சோர்ந்து போய் நான் பார்த்ததில்லை... டி.வி.எஸ் மருத்துவ மணையில் .. சொக்கிகுளத்தில் சேர்த்திருக்கிறது... அங்கு இருந்த நாட்களில்.. மிகவும்..புலம்புவார்கள்..
“ இந்தக் கழுதைஹ வந்து பாக்கக்கூட இல்லயே.. வளத்த காரணத்துக்காகவாவது வந்து பாக்கலையே..! ஆமா அவனுக்குப் பத்திரிக்கை வைக்க வந்தப்ப.. வெளியே..போடீன்னுதான் சொன்னேன்.. நாசமத்துப்போக...பாசமுமா அத்துப் போகும்...?”
இந்தப் புலம்பல்..வெம்பல்.. என் முன்னால் தான்.. அப்பா முன்னடி முடியாது.
இந்த நிலையில்..
காலனியில் நான் என் ஃப்ரெண்டு வீட்டில் நின்று கொண்டிருந்தேன்.. அந்த வழியே.. சந்திரசேகர்.. வருகிறார்..! சேகரைக் கூப்பிட்டு நான் சாதுர்யமாகப் பேசுவதாய் நினைத்துச் சொன்னேன்.
“சேகர் .. அப்பத்தா ரொம்பப் புலம்பிக்கிட்டேயிருக்காங்க.. அம்மாகிட்டச் சொல்லி வந்து பாக்கச் சொல்லுய்யா..! அப்பத்தா சொன்ன வார்த்தைகளை அப்படியே.. “வளத்த பாசம் கூடவா தெரியாமப் போகும்” ன்னு நானும் சொன்னேன்.
அப்போது எனக்குத் தெரியாது... நடக்கப் போவது...என்ன? என்று.
கடைசி நேரத்திலாவது அத்தையும், அக்காவும் வந்து பார்க்கட்டுமே என்று நினத்துச் சொல்லியது.

----- தொடரும்..பாகம் 2
Cont'd...
......2..3 நாட்கள் கழிந்திருக்கும்.. சென்னையிலிருந்து சின்ன மாமா மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஷண்முக பவனத்திற்கு வந்திருக்க...
அவர்களைக் கூட்டிக் கொண்டு.. மாலையில் செல்வ நிலையம் சென்றேன்...அனவரும் பேசிக்கொண்டிருக்க.. பெரிய அத்தான் பார்வை மட்டும் என் மீதே நிலைத்திருந்ததைக் கவனித்துக் கொண்டிருந்தேன்...
ஓர் நொடியில்.. என் பார்வைக் கோடும்.. அவர்களின் பார்வைக்கோடும் சந்திக்க.. சாமி வந்தது போல் எழுந்து... ஏய் இங்கே வா..? என்று முன் வரந்தாவிற்கு வரச்சொல்லி நகர.. பின்னா...டியே நானும் போனேன்...
“ஏண்டா.. (............................................) என்னவெல்லாம் பேசியிருக்கிறாய் நீ..? என்று சத்தமிட்டபடி என் சட்டையைப் பிடித்துத் திருகி..
விட்டார் ஒரு அறை.. வலது கன்னத்தில்...!
இந்த அடி..!
பழங்கானத்தத்தில் அக்ராஹரத்தில் இருந்த சமயம் ஏதோ நான் செய்த சேட்டைக்கு.. அப்பத்தா என்னைத் தூணில் கட்டி வைத்து அடித்த அடி..!
பசளை பள்ளிக்கூடத்தில்வீட்டுப்பாடம் அவசரமாக எழுதி.. கையெழுத்து சரியில்லை என்று வாத்தியார் எஸ்.பி.ராமன் அடித்த அடி..!
சத்குருவிடம் அம்மாவைப் போடி என்று சொன்னதற்கு வாங்கிய அடி..!
எர்ணகுளத்தில் அப்பாவிடம் வாங்கிய அடி..!
இந்த அடிகள் அத்தனையிலும் பெரிதாக வித்தியாசங்கள் இல்லை.
எல்லாமுமே என்னிடமிருந்த ஏதொ ஒரு தவறை திருத்திக்கொள்ள எனக்குக் கிடைத்த வாய்ப்புக்களாக நினைக்கிறேன்.
எந்த நிகழ்வுமே... அந்தந்த நேரத்து நியாயங்கள்...தானே.
நிகழ்வுகள் பலவும் கலந்ததுதானே வாழ்க்கை.....!
.... தொடரும் ..பாகம் 3
Contn'd
................. அந்த நிமிஷத்தில் யார் யாரோ என்னென்னமோ பேசினார்கள்.. நான் ஆத்திரமாயிருந்தேன்.. ரௌத்திரமாயிருந்தேன்... ஆனால் அழவில்லை. சிவகுமார் மாமா அப்படியே என்னைக் குண்டுக் கட்டாய் தூக்கி வெளியே கொண்டு விட்டார்கள்.. “ வீட்டுக்குப் போயிருப்பா.. நீ” என்று சொல்லி.
நான் எவரிடமும் .. அப்பாவிடமும் இதை ப்பற்றிச் சொல்லவில்லை.
மறு நாள் ஜெயா மாமாவின் திருமணம்
திருமணத்தின் போது .சின்ன மாமா சத்குருவிடம்.. இதைப் பற்றிச் சொல்லிவிட்டார்கள்.... நான் கவனித்தேன்......
சத்குரு எதுவும் பேசவில்லை...! முகம் மட்டும் இருண்டிருந்தது.
அதன் பின் நானும் செல்வ நிலையம் பல நாட்கள் போகவே இல்லை
ஒரு வாரம் கழிந்திருக்கும்... நான் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்தேன். திடீரென்று.. அங்கே சத்குரு பக்கத்தில்.. வந்தார்கள்..
“ ஏப்பா.. அவன் என்ன உன்ன அடிச்சுட்டானா..?” கேட்கும்போதெ குரல் தளுதளுக்கிறது.. எனக்கும் அழுகை வர.. ஒரு துளி உருண்டோடுகிறது.
அப்படியே என் சட்டை மேல் பட்டனை விலக்கிப் பார்க்க.. நெஞ்சில் விரல் நகக் கீரல் பதிந்திருந்தது.. கண்டுவிட்டு.. அது தெருவென்றும் பாராமல்.
கைகூப்பி.. “ அவனுக்காக என்னை மன்னிச்சுக்கடாப்பா..”.. என்று சொல்லி நின்ற கணத்தில்....
“ நீ என் பிள்ளையடா..! என்று என் அப்பனின் சுட்டு விரல் பற்றி நின்ற கருப்பண் தெரிந்தான்.
(அந்த நிமிஷத்து என் மன உணர்வை 40 வருஷங்களின் பின் இன்று தமிழால் உருவம் கொடுக்கிறேன்..)
அதெல்லம் ஒன்றுமில்லை மாமா.. பரவயில்லை.. இப்ப என்ன .. நீங்க அடிச்சா. என்ன?.. பெரியத்தான் அடிச்சா என்ன..? என்று பேசத் தெரிந்த மனதுக்கு... மௌனமாயிருக்க மட்டுமே முடிந்தது...
கண்களில் மட்டும் வெள்ளம்...பெருக்கெடுத்தது..!
என்னை அடித்த அதே கைகள்.. எனக்கு ஆசிகள் வழங்கவும் செய்தன..
நான் விமானப்படையில் அம்பாலா என்ற இடத்தில் இருந்தபோது பெரிய அத்தான் உரிமையோடு வந்து தங்கியதும்..! .. வெள்ளியில் டம்ளர் ஒன்றை அக்கா பரிசாக வழங்கிச் சென்றதும்....
.....பெரியத்தான் தன் இறுதி நாட்களைத் தாங்கொணாத வேதனையுடன் கழித்துக்கொண்டிருந்தபோதும்.. என் மனைவியின் உடல் நிலை குறித்து..நினைவு கூர்ந்து... இந்தச் சின்ன வயசில்.. ஜெகதீஸ்வரிக்கு இருக்கும் வேதணையை விடவும் தனக்கு வந்தது பெரியதல்ல என்று கூறியதும்.......
வாழ்க்கையின் இருமை நிலைகளைக் கற்றுக் கொடுத்தன என்றால் அது நிச்சயமாக மிகையில்லை.
குளிர்ச்சியின் மறுகோடி தானே வெப்ப நிலை....!
அன்பின் மறு கோடிதானே.. வெறுப்பும்..!
Subhasree Sundaram பாமா அம்மா அழுத்தமாய் சொல்வது போல் - குணபூஷணம் in real sense..
Subhasree Sundaram We as a group are oxymorons - முரண்களின் உச்சத்தில், 360°புள்ளியில் இணையும் ஆலவட்டங்கள்.
Aravindan Selvaraj Great writing annathe..excellent tempo. It takes a legendary step to apologise. And even more to forgive and forget! Life goes on..
Aravindan Selvaraj Oxy"morons"...smile emoticon

இலை 9
சத்குரு : பதிவு 5:
முதல் சங்கம்:
ஓம் அஸ தோமா ஸ த் கமய
தமசோமா ஜோதிர்கமய
ம்ருத்யோர்மா அமிர்தம் கமய...
ஓம்சாந்தி சாந்தி சாந்தி [இதன் பொருள் ]
என்னைப் பொய்யிலிருந்து உண்மைக்கும்..
இருளிலிருந்து ஜோதிக்கும்..
மரணத்திலிருந்து.. மரணமில்லாப் பெருவாழ்விற்கும்
இட்டுச்செல்வாயாக..! மூன்று வகையிலும் பேரமைதி நிலவட்டும்..!

நான் தீக்க்ஷை பெருவதற்காக ஈஷா யோக வகுப்புக்காளில் இருந்தபோது..
முதல் கவளம் உண்பதற்கு முன் சொல்லவேண்டிய மந்திரம்.. என்பதாகச் சொல்லப்பட்டது
*****************************
முதல் சங்கம் அமுதூட்டும்....... திருமந்திரம்.
‘ஓங்காரத்துள்ளே உதிக்கும் பரம்பொருளே...’
இந்தப் பாடல் பாடும் ஒவ்வொரு சமயமும்.. என்னுள்ளே பதிந்திருக்கும் அந்தக்குரலின் வழியேதான் செவி மடுக்கிறேன்... ஸ்ரீமன்.ஏ.எஸ்.பி யின் குரல்.
முதல் முதலாய் வாழ்க்கையோடு இணையும் எதுவும்.. நெஞ்சுக்குள்ளே அச்சாய்ப் பதிந்துவிடத்தானே செய்யும்...!
மிகச் சில பிம்பங்கள்.. முருகாத்தாத்தாவின் திவ்ய வடிவினை ..
சிர்ரஸ் மேகத் தீற்றலினூடே தெரியும் நிலவு போல்.. மனதில் பதித்திருக்கின்றன.
( என்னுடைய SENSORY PERCEPTIVE CORTEX ஞாபக... மூளை அடுக்குகளுக்கு .. நன்றி)
அம்மையம்பதியில்.. அந்தக்காலத்தில் நெடுஹாலைத் தாண்டி இருக்கும் அந்த அறையில் .. பூஜை அறை இருந்தது நினவிலிருக்கிறது..
அங்கே அவர்களுடன் அமர்ந்திருந்தது....
சந்தன மணத்துடன் எனக்குச் சந்தனம் வைத்துவிட்ட அந்த விரல்கள்..
அவர்களுடன் பக்கத்தில் சப்பணமிட்டு.. சாப்பிட உட்கார்ந்தது நினைவில் இருக்கிறது...
வாழை இலையில் சாப்பாடு பரிமாறப்பட... கருவேப்பிலைப் பொடி நெய் விட்டுப் பிசைந்து.. உருட்டி.. எனக்கு ஊட்டி விட்ட
முதல் கவளம்...
நினைவில் நீங்கா இடம் பெற்றிருக்கிறது...
இது ‘முதலாவது’ முதல் சங்கம்... எனக்குக் கிட்டிய பேறு...!
*************************************************************************************
சத்குருவிடம்... பல நாட்கள் உடன் இருந்து சாப்பிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
இலையின் சுத்தம்...
ஒன்றோடொன்று கலவாத பல வண்ண உணவு வகைகள்..
தயிர் சாதம் அள்ளிச் சாப்பிடும்போது ஒரு லாவகம்..சாப்பிட்டு முடியும் வரை தயிரின் வெண்மை அப்படியே இருக்கும்..
( இது என் அப்பாவிடமும் கண்ட ஒரு விஷயம்.)
பருப்பும்.. நெய்யும்.. கலந்து
முதல் கவளம் .................எனக்குக் கிடைக்கும்..
விபூதி மணத்துடன் ..அத்தை அவர்களின் கைமணமும் கலந்து எல்.சுப்ரமணியன்.. லுக்பாண்ட்டி.. இவர்களின் ஃபயூஷன் இசை போல இருக்கும்...போங்களேன்..!
மாம்பழம் இருந்தால் இன்னும் விசேஷம்....
மாம்பழம் சத்குருவின் மிகப்பெரிய ‘வீக் பாயிண்ட்’ என்பதும்...
மாம்பழம் வேண்டி கோபித்துக்கொண்டு வந்த முருகனோ..!
அதைவிடப் பெரிய “வீக் பாய்ண்ட் என்பதும் .....கவனிக்கப்படவேண்டியது
( ‘ப்ளஸ் பாயிண்ட் வீக் பாய்ண்ட் ஆவது முருகனிடம் மட்டுமே சாத்தியம் ) ‘
இது இரண்டாவதாய் மற்றுமொரு முதல் சங்கம்...!
ஏனெனில்.. நான் மிதுன ராசிக்காரனல்லவா..?
அவர்கள் புகட்டியது.......
அந்த முதல் கவளங்கள் " இரண்டு " மட்டும் அல்ல...
வாழும் வகையறியும் உபனிஷத்துக்கள் பல என் அத்தணை புலன் களின் வழியும் ஊட்டப்பட்டது ... என்பது உணர்ந்த உண்மை
**************************
இன்று என் மகள் கண்மணி சொல்கிறாள்..” அப்பா நீங்க சாப்பிடறதப் பாத்தா..ஆசையா இருக்குப்பா. நானும் உங்க கூடவே சாப்புட்றேன் பா...”
எனக்குக் கிட்டிய பேறு...!
Karuppiah Shanmugam எவரிடமும் சொன்னாலும் நம்ப மாட்டார்கள்
சாபிடுவதில் என்ன ஒழுங்கு என்று !
ஆனால்பல வண்ண காய் கொழம்பு ஒன்றுடன்
ஓன்று சேராமல் அந்தந்த எல்லைக்குள் வைத்து
உள்ளங்கையில் கூட படாமல் சாப்பிட சொல்லி தந்தவர் எங்க பெரியப்பா .... பசலை மக்களுக்கே என்றால் .ஹீ ஹீ
Ravindran Aiyadurai அப்பா அவர்களின் பருப்பு சாதப் பிசைவின் கைஒட்டிய மீதத்தை தட்டின் விளிம்பில் வழித்து சாப்பிடும் போதுஅருகமர்ந்து சாப்பிடும் எங்களுக்கும் ஒரு பங்கு அந்த அமிழ்திற்கு சீதாக்குட்டி வைத்த பெயர் "பக்கம்"
Ravindran Aiyadurai அரவிந்தரைத் தொடர்ந்து அருண் தவச் செல்வங்களின் அணிவகுப்பு -- தொடரட்டும் தொய்வின்றி
இலை 10

சத்குரு : பதிவு : 6
இதற்கு முன் –
குரு, சத்குரு இவர்களின் திருக்கைகளால் உண்ட அமுதம், பட்டினத்தார் சொற்களைத் திருமந்திரம் ஆக்கி இருப்பது எதேச்சையாய் நிகழ்ந்ததென்றால்.. எவர் கண்ணிலும் படாமல் இருப்பதும் எதேச்சை என்று கொள்ளவில்லை.
இப்போது ‘மொய்குழலார் ஆசை ‘ விலக்கி’, சத்குரு ‘நடுச்சங்கம் நல்விலங்கு பூட்டியதைப்’ பகிர விழைகிறேன்.
திருமணங்கள் பத்துப் பொருத்தம் பார்த்து, பெரியோர்கள் நல்லாசிகளுடன் நடந்து கொண்டிருக்க... சத்குருவுக்கு இவைகள் என்றும் இரண்டாம் பட்சம். சத்குருவின் தொலை நோக்குப் பார்வையில் நிகழ்ந்த திருமணங்கள் இங்கே ஏராளம். உறவுகளின் வளமைக்காகச் சமூக சிந்தணையோடு ஒரு பெண்ணையும் ஆணையும் சேர்த்து வைக்க எடுக்கும் முடிவுகள்.. மிகவும் ஆச்சரியகரமானவை.
இவர்களின் தேர்ந்தெடுப்பில் இருக்கும் மணமகனோ.. மணமகளோ ஒருவித தியாக உணர்வோடு அந்தத் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் இருக்க வேண்டிய சூழ் நிலை இருக்கும். ஆக சத்குரு முன்னிறுத்தும் ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு நிமித்தம் நிச்சயம் இருக்கும். அது புரிந்துவிட்டால் சத்குருவின் பிரம்மாண்டம் புரிபடும். உறவுகளின் அருமை உறைக்கும். !
செல்வ நிலைகளைத் தாண்டிய ஆதரவின் முக்கியத்துவம் பிடிபடும்.!
தன் பிள்ளைகளுக்கு அமைந்த திருமணங்களே இதற்குச் சான்றுகள். தன் பிள்ளைகள் என்று சொல்வதில் என் தகப்பனும் அடக்கம். தங்கை பிள்ளையை வேறாய்க் கருதியதே இல்லை என்பதை நான் சொல்லத் தேவையே இல்லை.
சற்று விளக்கமாய்ப் பதிவு செய்கிறேன்.
என் தகப்பன் எப்படி இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே..! என் அம்மாவைக் கரம் பிடிக்கையில் என் அப்பாவின் மன நிலை என்ன என்பதை என்னிடம் பகிர்ந்திருக்கிறார்கள். எப்படி அப்பா இதற்குச் சம்மதித்தீர்கள்?.. என்று நானே கேட்ட பொழுது..
அப்பாவின் பதில்.
“ இவளா எனக்கு ..? கேட்டது என் மனம்
இவள்தான் உனக்கு என்றது சுற்றம்..?..
இது தகப்பன் இல்லாது போனதற்காக.. எதன் காரணத்தை முன்னிட்டு மேற்கொண்ட சமரசம்..?
இது எனக்குள் எழுந்த கேள்வி.. அந் நாட்களில்.!
ஒரு அழகான, இளவரசன் போன்றவன் மனதில் எப்படியெல்லாம்.. ‘மொய்குழலார் ஆசைகள்” நிறைந்திருக்கும்..? முன்னின்று நடத்திய சான்றோர் எப்படி இதைப் பார்த்திருந்தார்கள்..?
மணமாலை சூடி என்னைப் பெற்றவர் தம்பதியராய் வீற்றிருக்க... எத்தணை விமர்சனங்கள் ஓடியிருக்கும்..?
பிள்ளையாரே.. தனக்கு வருபவள் .. தன் தாயார் போன்றிருக்க வேண்டும்.. என்று நினத்ததால் தானே.. ஓடிப்போய் குளத்தங்கரையில் உட்கார்ந்தார்..?
கணபதிக்குத் தெரிந்தது அருணாசலத்திற்குத் தெரியவில்லை..!
(...அங்கேயும் உமையவளும் கருப்புத்தானே..!..)
என் தகப்பனுக்குச் சொல்லக் குரல் எழுந்தபோது...
அங்கே ஒலித்தது சத்குருவின் குரல்..
“அப்பா அருணாசலம்.. அச்சம்பத்துப் பொண்ணு திரும்பிச் சென்றால்... உன் தங்கச்சி (ராதா அத்தை) திரும்பி வந்துவிடும்.. பார்த்துக்கோ..!”
இதற்கு மறு வார்த்தையும் உண்டுமோ..?
என் அம்மாவை ஏற்றுக் கொண்டு..வாழ்ந்தார் என் தந்தை..
எத்தணையோ இடி .. மின்னல்களினூடே..!

ஒரு நாள் என் கல்லூரிப் பருவத்தில் என் தகப்பன் அம்மாவுக்கு எழுதிய கடிதத்தை என்னிடம் காண்பித்தபோது..
அதில் இழையோடியிருந்த அன்பை,, அன்னியோன்யத்தை..
கண்டு குறை தீர்ந்தேன்..! வெளித்தோற்றங்களிலே வாழ்வதில்லை வாழ்க்கை..!
அப்படியே.. ஏற்றுக்கொண்டு வாழ்வதே வாழ்க்கை.. என்று கற்றேன்.
பின்னாட்களில்..
என் முறை வந்தபோது..
இவள்தான் உனக்கு என்றது.! என் பெற்றொர்..
இவளா உனக்கு ..? எனக் கேட்டது சுற்றம்..!
இந்நிலையில்....
என் தகப்பனை உதாரணம் கொண்டும்..
சத்குரு ஜோசியர் தாத்தாவிடம் என் ஜாதகத்தை புயல் அடித்திருந்த ஒரு காலத்தில், எடுத்துக்கொண்டு சென்ற பொழுது .. கூறிய.. “அய்யா..! உங்களுக்கும் தம்பிக்கும் ஒரே மாதிரி விவாஹப் பொருத்தம்... இடி .. மின்னல் யாவும் இருக்கும் ஆனால் பிரிவினை என்பது இல்லை..!” என்பதையும்...நினைவில் கொண்டு..
என் திருமணத்தின் ‘நிமித்தம்’ எது என்றும் புரிந்துவிட..
என்பாற்பட்ட எதிலும்.. சத்குருவின் தாக்கம் இழையோடியிருப்பதை உணர்ந்தபடி
வாழ்ந்து வருகிறோம் .. இனிய மக்களோடு..!

பதிவு : 6 ன் தொடர்ச்சி :
சில பதிண்ம வருஷங்களின் முன்..
திருமணம் என்பதன் பொருளும்.. விளக்கமும் சில பல தவிர்க்க முடியாத காரணங்களையும், காரணிகளையும் உடன் கொண்டிருந்தது.
ஆனால் சமீப காலங்களில் மனங்களின் சிந்தணைத் தளங்களில் இது பற்றிய எண்ணங்கள் மிகவும் மாறுபாடு கொண்டதாயும்.. புரட்சிக் கருத்துக்களை உள்ளடக்கியும் இருந்து வருகிறது. இதற்குக் காரணங்களும் நிறைய...
அந்த நாட்கள் போல ஆளுமையாலும்.. அதிகாரத்தாலும் ஆட்சி செய்ய முடிவதில்லை.. பணிவு இருபுறமும் எதிர் பார்க்கப் படுகிற அதே நேரம் இருவரிடமுமே அது பெரும்பாலும் இருப்பதே இல்லை..
மனைவிதானே...என்றோ! கணவன் தானே.. என்றோ!! என்று ஒருவர் மற்றவர்க்கென மனதுக்குள் இதமான எண்ணங்கள் எழுவது.. இல்லை என்றாகிவிட்டது..
விரும்பியது அமையாவிடில்.. அமைந்ததை விரும்பு.. என்பதும் அவ்வளவு சுலபமானதாய் இல்லை..
விரும்பியதே அமைந்து விட்டாலும் .. சமரஸங்களோ.. விட்டுக் கொடுத்தல்களோ.. மயக்கங்கள் தீர்ந்தபின் தேவையே இல்லை என்றாகிவிடுகிறது..!
கொஞ்சம் கொஞ்சமாய்த் திருமணம் என்பதில்.. நம்பிக்கை குறைந்து வருகிறது.. கண்கூடாகத் தெரிகிறது.
திருமணம் ஆனவர்கள் எல்லோரும் வாழ்கிறார்களா..? உழல்கிறார்களா..? என்பதும் கேள்விக்குரியதாக இருக்கின்றது.
அவரவர்க்குறிய ஏக்கங்களோடு சேர்ந்து வாழ்தலும்...
அவரவர்க்குறிய தேடுதல்களோடு தனித்து வாழ்தலும்...
அனைத்திற்குமே அதற்குறிய நியாயங்கள் நிச்சயம் உண்டு...
இவை அனைத்தும் தாண்டி...
மனதில் விரியும் வாழ்வெனும் பெருங்கடல்
கரை ஓர அலைகள் அனைத்தும் தாண்டி..
அதைக்கடக்கும் உரிய காலங்களும் தாண்டி..
அலைகளற்ற கடலும்.......
அலைகளற்ற இடத்தில்.. மிதக்கும் படகும்...
அதைத் தள்ளும்பொருட்டு
கண்களில் பதிவது ஒற்றைத் துடுப்பல்ல..
இரண்டு..!
ஒன்று ‘ குரு “ வினுடையது.. மற்றும்.
ஒன்று.. ‘சத்குரு ‘ வினுடையது.....

இலை 11
சத்குரு : பதிவு : 7
சாது மிரண்டால்.... !!
குருக்களின் திருமேனி கண்டு, திரு நாமம் செப்பி அவர்தம் திரு வார்த்தை கேட்கும் பொருட்டு சிந்திக்க வேண்டி இருப்பதற்காக அந்தப் படகு இரண்டு துடுப்புகளுடன் நமக்காகக் காத்திருக்க.. ஒரு சுற்று பழங்கானத்தம் சென்றுவிட்டு வருவோம்.
செல்லும் வழியில் .. ஜெகதா தியேட்டர்.
அதன் மேல் விளக்கை ஏந்தி முறுக்கிய மீசையுடன் நிற்கும் அந்தச் சிலை.. பழங்கானத்தத்தின் முக்கிய அடையாளம். போகும் போதும் வரும் போதும் சிறுவன் என் கண்கள் அதன் மேல் பதியாமல் இருந்ததில்லை.
அப்போது “சாது மிரண்டால்” படம் ஓடிக்கொண்டிருக்கிறது.
பீம்சிங் டைரக்ஷனில் நாகேஷ், பாலையா மற்றும் டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்தது.
“கோயில்லாம் காண்பிக்கிறாளாம் “ என்று யாரோ சொன்னது கேட்டு.. சத்குரு எங்கள் அனைவரையும் கூட்டிக்கொண்டு.. போக..
போய் உள்ளே உட்கார்ந்து.. மங்கலான வெளிச்சம்.. சிகரெட்.. பீடி புகை மற்றும் வியாபரச் சத்தங்கள் வியாபித்திருக்க..
சிவப்பு கலரில் திரையை மூடி சூப்பராக திரைச்சீலை தொங்கும் .. அதன் கீழ் நுனியில் வண்ண விளக்குகள்.. எரிவதற்குக் காத்திருந்தோம்..
அந்தத் திரை சுருண்டு மேலெழும்ப.. ஒரு ம்யூசிக் போடுவார்கள். வென்சர்ஸ் க்ரூப்பின் ஒரு அழகான இசைப் பதிவு..
ஒவ்வொருமுறையும் இந்த இசை ஒலிக்கும்போது.. இங்கே சத்குருவின் வீட்டில் பின் புறத்தில் அந்த இசை கேட்கும் .. அதை மிகவும் ரசிப்பேன்.
விளக்கு எரிந்தது... திரை எழும்பியது.. இசை ஒலிக்க.. மனசுக்குள் உற்சாகம்..அப்பல்லாம்.. சினிமா பார்க்கப் போறோம் என்பது..குறைந்தது 10 நாட்களுக்காவது பேசப்படும் விஷயம்.
விளம்பரம்.. இண்டியன் ந்யூஸ் ரிவ்யூ.. அதன் பின்.. படம்..
ஆரம்பித்தவுடன் இரண்டு .. கார் விளக்குகள் இருட்டில் வரும்.. வயிற்றில்.. மெதுவாக பயம் .. எட்டிப் பார்த்தது..
தொடர்ந்து.. தொப்பி அணிந்த நடிகர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வது..என்று படம் ஓட.. ஒரு காட்ஷியில் கார் டிக்கியினுள் ஒரு டெட் பாடியைக்.. காண்பிக்க.. அதில் மிரண்டு.. தலையைக் குனிந்தவன் தான் படம் முடியும் வரை.. நிமிர்ந்து பார்க்கவே இல்லை..
நடுவில் இதைக் கவனித்த சத்குரு.. மடச்சாம்பிராணி என்று அவர்களுடைய இருக்கைக்கு பக்கத்திலேயே.. நிற்க வைத்து என்னைப் படம் பார்க்க வைக்க மிகுந்த பிரயத்தனப்பட்டார்கள்..
போதாததற்கு..
அவர்கள் நினைத்துப் பார்க்க வந்தது போலப் படம் பக்தி மணம் கமழ இல்லாமல் போக...முழுக் கவனமும்.. கோபமும்.. என் மீதில்...
நானும் விடுவேனா என்ன..? படத்தையே பார்க்கவே இல்லை... அன்றைக்கு அவர்கள் கோபத்திற்கு வடிகால் நான் மட்டுமே..!
அன்று மிரண்டவன் தான்...
அதற்கப்புறம் சினிமா என்றாலே.. பிடிக்காது என்று சொல்லிவிடுவேன்..
சத்குருவிடம் ‘ குட் பாய் ‘ என்று பெயரும் வாங்கினேன்...!
ஆனால் அந்தப் படம் உண்மையிலேயே காமெடிப் படமாம்..
அதான் விஷயமே...!

இலை 12
சத்குரு : பதிவு : 8
எப்படியெல்லாமோ ஸ்கூல் வாழ்க்கையை அனுபவித்திருக்கலாம் பலரும்.. சத்குருவின் இறகின் கதகதப்போடு... இங்கே
நான் என் நினைவுகளைப் பகிர்கிறேன்.
டி.வி.எஸ் ஸ்கூலில் இர்ண்டாவது வகுப்பு. என் சேட்டைகள் சற்றும் குறைவில்லாமல். தனசேகரன் என்பவன் நண்பன் என்னோடு. இங்கிருந்து கிளம்பி சாலையின் வழி செல்லும் போது.. முதலில் தேடுவது குரங்குக் கூட்டம். அனேகமாக கண்களில் தட்டுப்பட்டுவிடும். அப்புறமென்ன.. ‘இன்னும்கொஞ்ச நேரம் இருந்தாக்க என்ன..? ங்கற அளவுக்கு அளவளாவி..
ஒருமுறை அந்தக் குரங்குக் கூட்ட்த்தில் ஒரு குரங்கு.. ஒரு வீட்டு சாக்கடைத் துளையினுள் தலையை விட்டு.. எடுக்க முடியாமல் திணற.. அங்கே குரங்குகளின் கூட்டம்.. சற்று நேரத்தில் அது இறந்தும் விட்ட்து.
அதற்காக ஒரு கோயிலும் கட்டியிருக்கிறார்கள். நாங்கள் குடியிருந்த தாஸ் வீட்டு முன்பு.
அப்புறம் நடை. வழியில் மைக் செட் கடையில்.. ‘விழியே.. விழியே..உனக்கென்ன வேலை.. ன்னு பாட்டு அந்த சீசனில் ஹிட்.. அது காதில் விழும்.
ரோட்டை க்ராஸ் செய்ய எங்களுக்குள் ஒரு கண்டிஷன். ஒரு டைகர் லய்லேண்ட் (எண்.5 திருப்பரங்குன்றம் ) பஸ்ஸையாவது.. பார்த்துவிட்டு..அந்த புலி எம்பளத்தைப்.. பார்த்துவிட்டுத்தான் கடப்போம். இந்த பஸ் 4 ம் நம்பர் தெப்பக்குளம் ரூட்டிலும் ஓடியது.
காலையிலாவது .. ஒரு பஸ்.
மாலையிலோ 5 பஸ்கள் வரும் வரை காத்திருப்போம்.
ஒரு நாள் இப்படித்தான்.. பஸ்கள் தாமதமாக வந்துகொண்டிருக்க.. நாங்களும் 5 எண்ணிக்கைக்காக்க் காத்திருக்க... எங்களை வெகு நேரம் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த சத்குரு .. கண்காணித்துவிட்டு.. இந்தப் பக்கம் வந்து... தலையில் தட்டி அனுப்பி வைத்தது...
இன்னொருமுறை..
ஸ்கூல் விட்டு வரும் போது.. வருவது கோவலன் பொட்டல்.
தன் முயற்சியில் சற்றும் தளராத... விக்கிரமன்.. கதையில் வரும் மரம் கோவலன் பொட்டலில் இருக்கும் அந்த ஆலமரம் தான் என்பது எங்கள் கற்பணை..
“இங்க தாண்டா.. கோவலனை வெட்டினாய்ங்களாம்..” அனேகமாக தினசரி இதைச் சொல்லிக்கொள்வோம்.
அதற்கு எதிர்த்தார்போல் ஒரு குளம் இருக்கும்..
ஒரு நாள் அங்கே .. நிறைய காகங்களும்.. கொக்குகளும் பறந்திருக்க..மண்ணும் நீரும் சம விகித்த்தில் கலந்தாற்போல இருந்த குளகுளப்பில் மொலு மொலு வென்று சிறிய மீன்கள் பல.. நீந்திக்கொண்டிருக்க..
அப்புறமென்ன.. தீர்மானித்தோம்.. செயலிலும் இறங்கி விட்டோம்..
கைகளால் பிடிக்க முடியவில்லை. எல்லாம் துடித்து நழுவுகின்றது..தனசேகரன் சொன்னான்.. “சட்டையை கழட்டி வலை போடுவோம்டா..”
எப்பேற்பட்ட யோசணை.. நண்பேண்டா..!
நல்ல வெள்ளைச் சட்டை.. கழற்றி மீன் பிடித்தோம்.. முதல் மரியாதை படம் பார்க்கும் போது இந்த ஞாபகம் வந்த்து. சில நேரங்களில் ராதா .. தனசேகர்ர்களாக மாறி விடுவது.. பிராயத்தின் கோலம் போலும்..!
மீன் பிடித்தாகி விட்ட்து.. கொண்டு போகவேண்டுமே..?
இந்த முறை நான் ..” அதான் டிஃபன் டப்பா இருக்குல்ல..”
துடிதுடிக்க சம்படத்தில்மீன் களோடும்.. மனதில் ஒரு புலியை கொன்ற பெருமித்தோடும்.. பனியன் எல்லாம் சகதியோடும்... தோளில் ஷூக்களை மாட்டிக்கொண்டு.. எங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்க பயணம்... தொடர்ந்த்து வீடு நோக்கி...
வழியில் நிறையப் பேர்களின் பார்வை.. எங்கள் மேல் தங்கியது...
இன்று 5 பஸ் கணக்கெல்லாம் இல்லை. அந்த ரூலுக்கு லீவு..இன்னக்கி..!
வீடும்.. வந்தது..! ஆனால்...நடந்ததோ..!
அப்பத்தாவுக்கு.. கோபமும்.. ஆத்திரமும்.. புறப்படு என்னோடு..! என்று தருமியை அழைத்துகொண்டு செல்லும் அதே பாணியில் சத்குரு வீடு நோக்கிப் பயணம் நீடிக்க.. எனக்குள் ..என்னென்னமோ.. நடந்துகொண்டிருந்த்து..
தனசேகரனை எப்போதிருந்தோ காணவில்லை..!
தொடரும்...

சத்குரு பதிவு 8 ந் தொடர்ச்சி :
தொலைந்தோம்..டா.. இன்று நினைத்துக்கொண்டிருக்க வீடும் வந்துவிட்ட்து. இந்த மாதிரி நேரங்களில்.. வீடெல்லாம் சீக்கிரம் வந்துவிடும்.. கொஞ்சம் கூட மேனர்ஸே இல்லாம..!
குற்றவாளிக்கூண்டுதான் அங்கில்லை..! பராசக்தி சிவாஜி போல் நான் மட்டும்..!
“அண்ணே! இவன் பண்ணியிருக்கிற வேலையைப் பாத்தீகளா..!” என்று விவரிக்க
சத்குருவுக்கு ஒரு கணம் என்னைக் கண்டு.. கோபம் வந்தாலும் அதையும் மீறிச் சிரிப்பு வந்துவிட..
“ குலப்பெருமையைக் காப்பாத்திட்டடா.. எங்க.. காட்டு பார்க்கலாம்..” ன்னு சொல்ல..
ஒரு மாதிரி நம்பிக்கையில்லாமல் திறந்து காட்டினேன்...
(இன்னக்கி உதையா.. விசிறிக் கம்பா..?)
இன்னும் சத்குருவின் முகத்தில் சிரிப்பு மாறவில்லை...
அப்படியே.. அப்பத்தாவிடம்..” சௌந்தரம் ஒம் பேரன் என்ன பிடிச்சிருக்கான்னு பார்த்தியா..?” என்று கேட்டபடி சம்படத்தைக்காட்ட..
இப்போதுதான் நானும் கவனித்தேன்...
அதிலிருந்தது.... மீன்களல்ல..!
தலைப்பிரட்டைகள்..!
அதற்கப்புறம் பாப்பா அத்தாச்சி யுடன் தான் ஸ்கூல் என்ற நடமுறை வழக்கத்திற்கு வந்த்து.
அப்பவெல்லாம் தனசேகரன் தனியாத்தான் போவான் ஸ்கூலுக்கு. பாவம்.!!

இலை 13
சத்குரு : பதிவு 9 :
இசையும் சத்குருவும் :
“ இசையில் வசமாகா இதயமெது...? இறைவனே இசை வடிவம் எனும் போது..!”
‘’ராதா..ஸமேதா கிருஷ்ணா..! கிருஷ்ணா..!...
ஷெண்பகவள்ளி அத்தாச்சியின் குரல். ஒலிக்கிறது...அந்த ஹாலில் அனவருமே அமர்ந்திருக்க....கணீரென்ற குரல். கே.பி.எஸ். ஸின் கம்பீரமும்.. சொல் தெளிவும்...” அன்றைக்கெல்லாம் சூபர் சிங்கரோ...சப்தஸ்வரங்களோ இல்லை.. இருந்திருந்தால்...!
அந்த ஆர்வத்தை உணர்ந்த சத்குரு.. இசை முறையாகப் பயில வகுப்புக்கு அனுப்பி வைத்தார்கள். கோமதி என்று அத்தாச்சியின் தோழி ஒருவரை ஞாபகம் இருக்கிறது.
‘முருகா.. முருகா.. வென்று பாரதியின் பாடலை எத்தணை முறை கேட்டாலும்.. தெவிட்டாத இனிமை...”
நம் வீட்டில் ஒரு ராகம்..
சீர்காழியின் குரலில் ஒரு ராகம்...
வாணி ஜெயராம் குரலில் ... முருகனே குழந்தையாய்த் தவழ்வது போன்றதொரு ராகம்...
விஜி அத்தாச்சியின் குரலில்... “ நமச்சிவாய வாழ்க பாடலும்.. அதை “ பூங்கழல்கள் வெல்க..! என்று மென்மையாய் முடிக்கும் அழகும் நான் வெகுவாக ரசித்தவை.
ஓரிரு சந்தர்ப்பங்களில் சத்குருவின் குரலும் நடுவில் இழையும்..
.சத்குருவின் குரலில்.. கேட்கும்போது... உச்ச ஸ்தாயியில் சஞ்சரிப்பதில்லை. ...குரலின் வரைமுறை.. எல்கைகளுக்கு கட்டுப் பட்டாற்போல்.. ஒரு கிடை மட்டப் ப்ரயோகம்...அதன் கவர்ச்சியும்.. ஈர்ப்பும்.. படர்க்கையும் ..
ரம்மியமான ஒரு வருடல்.
“ வீரவேல்..... விண்ணோர் சிறை மீட்ட தீர வேல்...” என்னுடைய ஃபேவரிட்.
“ அயிகிரி நந்தினி.. நந்தித மேதினி....”
இது விஜி அத்தாச்சியின் குரலில் ஒலிக்கும்போது.. கண்களை மூடிக்கொண்டு கேட்டால் . சுசிலா அம்மா பாடுவது போலிருக்கும். இவர்களின் கோலக் கம்பிகளில் மெல்லிய ஆனால் அழுத்தமான .. கோடுகளுக்கும்... இவர்களின் குரலுக்கும் ஒருவிதத் தொடர்பு… குரலின் ஃபிஸிகல் ரெப்ரெசண்டேஷன் போல...
“பண்ணின் இசையாகி நின்றாய்.. போற்றி...” என்னுடைய விருப்பமான தேர்வு..அவர்களின் தேன் குரலில்..
இப்படி சத்குருவின் பிள்ளைகள் மாலை நேரங்களை.. பக்தி மணம் கமழத் தெய்வீகமாய் மாற்றிக் கொண்டிருக்கும் பல வேளைகளில்..
ஓரத்தில் நானும் பாட முயற்சித்துக் கொண்டிருப்பேன்..
அந்தத் தருணங்களில்...
ஒவ்வொரு பாடலின் முன் எழும் இசைக் கருவிகளின் ஒலியில்... பாடும் குரல் ஒலிக்கும் முன்பு அந்தப் பாடல் என்னவென்று கண்டுபிடிக்க.. மனது இசையுடன் பயணிப்பது.... போன்றதொரு சுகானுபவம்....
உதாரணத்திற்கு.... இசைக்கருவிகள் ஆரம்பிக்க மனம்..”இது சந்திரோதயம் ஒரு பெண்ணானதோ..” பாட்டு என நினைத்துக்கொண்டிருக்கும்போது...’அய்ய்யோ.. இது “ அழகிய மிதிலை நகரினிலே..” ன்னு மாறி.. பிறகு “ நேற்று வரை நீ ..யாரோன்னு..” பாடல் ஒலிக்கையில்... (முடிந்தால் கேட்டுப்பாருங்கள்)
மனதுக்குள் பெயர் தெரியாது ராகங்கள் நர்த்தனம் ஆடிக்கொண்டிருப்பது தெரிய வருவதும்...
இசையின்பால் மனதைச் செலுத்தக் கற்றுக்கொண்டதும் தெரிய வருகிறது
“ நின் தத்துவம் தவறென்று..
சொல்லவும் அவ்வையின்..
தமிழுக்கு.. உரிமை உண்டு..”
என்ற வரிகளைச் செவி மடுக்கையில் விழியோரம் எப்பொழுது கேட்டாலும் துளிர்க்கும் ஒரு துளியில் “இறைவனே இசை வடிவம்” என்ற பரவசமான பேருண்மையை
சத்குரு உணர்த்தியிருப்பதை என் மனது உணர்கிறது.....

""பெறாமல் பெற்றென்னை.. ..பெரிதும் மகிழ் அன்னையும் நீ
பேணி எனை வளர்த்த தந்தையும் நீ
கற்ற கலை யாவினிற்கும் குருவும் நீ ....."".

இலை 14
சத்குரு : பதிவு 10 :
Written on 23 May :
9 ஆம் எண் இறைவனுக்குச் சமீபம் என்பதால் பதிவு 9 ல் இறைஉணர்வை இசை மூலம் உணர வைத்த சத்குருவின் மேன்மை கண்டோம்.
இன்று காலை வண்டியூரில் தாயாய் நிற்கும் மாரி அம்மன் எழில்மிகு கோலம் கண்டும்.. நாளை எங்கள் குலதெய்வம் கும்பிடப்போகும் நல் நினைவில் உளம் நெகிழ்ந்து.. உருகிக் கொண்டேயிருக்க....
குருவாயும்..சத்குருவாயும்.. அவர்களைப்ப்ற்றிய கருத்துப் பகிர்வுகள் ஏன்? என்பதை நம் குழந்தைகள் அறியும் வண்ணம் .. உற்று நோக்கி அவர்களின் தரிசனம் கிட்டாதவர்க்கும்.. ஒரு உருவெளிக்கோடாகவாவது அவர்கள் காட்சி தரட்டும்.. என்ற அவாவில்.. இந்தப் 10ம் பதிவு.. ...
குரு ( ASP ) விடம் சத்குருவுக்கு இருந்தது பெருமதிப்பும்.. பேரன்பும் கலந்த உறவு..
அவர்களிடம் கற்றதும் அதற்குத் தக நின்றதும்... மனதில் பெரு வியப்பை ஏற்படுத்தும் ..!
குருவிடம் தான் கற்ற அனத்தும்.. சந்த்தியர்க்கும் செல்ல வேண்டும் என்ற ஒரே சிந்தனையுடன் சத்குரு வாழ் நாள் முழுதும் வாழ்ந்திருந்தார்கள்
அதனால் அவரின் பேர் விளங்க வைத்து நின்ற மகன் நம் சத்குரு..
சுற்றமும்.. நட்பும் சூழ வாழ்ந்திருந்தவர்.நம் சத்குரு..
இதற்கு நடுவில்.. இரண்டாம் உலகப் போரும்...போர்முனையில்.. வீரனாகவும் உருக்கொண்டவர் சத்குரு.
சுபாஷ் சந்திர போஸின் நம்பிக்கையான.. நேர்முக வீர்ர்.
காந்தீயச் சிந்தனைகளும்.. நேருவின் உலகம் தழுவிய விஸ்வரூபமும் கண்டு.. சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்ட வீரமகன் .. நம் சத்குரு.
ஒரு சிறந்த மூத்த சகோதரனாய்.. தங்கை தம்பியரின் நல்வாழ்வுதனில் பெருவிருப்பம் கொண்டவராய்...
கணவனை இழந்து பரிதவித்த முதல் தங்கை..பெற்ற பிள்ளையை தோள் மேலிட்டுத்.. தாய் மாமன் தான் தகப்பனாய் உருமாறியவர் சத்குரு..
பிள்ளைகள் ஐவரை விட்டுத் தங்கை தெய்வமானதும்... தெய்வமே அம்மாவாய் மூத்த தங்கை அப்பிள்ளைகளுக்கு ஆகிவிட.. அர்ணாய் நின்றிருந்தவர் சத்குரு
இன்னும் ஒரு தங்கை... சிந்தணைக் குழப்பங்களில் சிக்கி நிற்க.. செல்வங்கள் தொலைந்துபோக..அங்கேயும் ஆட்கொண்டு நின்றவர் .. சத்குரு...
நடுவில் .. நடந்தேறிய திருமணங்கள்.... தம்பி கண்ட சிறை வாசம்.. இப்படி ஒன்றுடன் ஒன்று பிணைந்து நின்ற பல குடும்பங்களில்... உற்ற துணையாய்...பன்முகங்களிலும் நின்றவர் சத்குரு.
அவர் தம் சிந்தனைகளில் என்றென்றும்.. பல குடும்பங்களின் நல்வாழ்வு மட்டுமே.. நிலைத்திருந்த்து.
நாட்டுப்பற்று சற்றும் குறையாமல்.. மூத்த தங்கை மகனை கப்பல் படையில் பணியிருத்த முனைந்த முயற்சி தோல்வியுற...
கொஞ்சமும் சளைக்காமல்.. 40 வருஷங்களின் பின்....
தங்கையின் பேரனை.. விமானப் படையில் சேர்த்து... அழகு பார்த்தவர்.. சத்குரு..
இத்தணைக்கும் நடுவில்.. தன் குடும்பத்தை எவ்வளவு கவனத்துடன் பார்த்திருக்க முடியும்.. என்பது..உங்கள் கற்பணைக்கே .. விட்டு விடுகிறேன்.
இதில் ஆழக் கற்க வேண்டியது எதுவென்றால்...
வாலி மூன்று தலைமுறைக்கும் மேலாய்க் காலத்திற்கேற்ற கவிதைப்பணியாற்றியது போல்...
அந்தந்த்த் தலைமுறைக்கேற்ற.. தேவைகளை நிர்ணயித்துக் குடும்பங்கள் வாழ்ந்து துளிர்விட மழை நீராய் நின்றவர் .. நம் சத்குரு.
மழை நீர் பாரபட்ஷமின்றி.. பசுமை வளர்க்கும்..
இது புகழுரை அல்ல..
தன் தகப்பனிடம் கற்றதைச் செயல்வடிவாக்கி ...
தீரனாய் வீரபாண்டிய கட்டபொம்மன் போல் நிற்கும்
ஒரு கம்பீர உருவெளிக் கோட்டின்
அன்பு முகம் காட்டும் முயற்சி...
நம்மிடையே உலவித் திரிந்த ஆறுமுகனை அடையாளம் காணும் .. அன்பு யாகம்..!
அருள் புரிந்து ஆதரித்து ஆண்டது ஒரு முகம்
அன்பு கூர்ந்து அரவணைத்துக் காத்து நின்றதொரு முகம்
பொருள் செறிந்த பேரறிவைப் புகட்டியது ஒரு முகம்
தேசியம் பேசித் தலை நிமிர்ந்து நின்றதொரு திருமுகம்
வாழ்வின் பாதை இதுவென்று பலருக்கும் சுட்டி நின்றது ஒரு முகம்
இருள் படர்ந்த போதெலாம் இன்னல் அகற்றத் துணை நின்றதொரு முகம்

இலை 15
சத்குரு 11 :
இன்று நேருஜி யின் நினைவு தினம். சத்குருவின் மன ஆழங்களில் பதிந்திருந்த இந்த தேசத்தலைவனின் பரிமாணங்களை நாமறிவோம்.
இந்தப் பதிவின் சமர்ப்பணம் அவருக்கு.
“ 26 மே 1964 நேருஜி டேராடுனிலிருந்து வருகிறார். மாலை முதலே உடல் நிலை சரியில்லாதது போல் தோன்றுகிறது. பின்புறம் கடுமையான வலி. அதிகாலையில் தாங்க முடியாத அளவு வலி ஏற்படுகிறது. மருத்துவரை அழைக்கச் சொல்லிவிட்டு மயக்கமடைந்து விழுகிறார்... ஐயோ! இதற்கு மேல் என் பேனா எழுத மறுக்கிறதே...கண்கள் இருண்டு வருகிறதே...! நான் எப்படி இதை எழுதப் போகிறேன்.....” இவ்வாறு தொடர்கிறது அவரின் மறைவுப் பதிவுகள்
உலக மேதை நேரு என்ற புத்தகத்தை முதல் முதலாய் சத்குரு என்னிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லிக் கொடுத்தார்கள். 12 வயதில் எனக்கு அது சற்றுப் பெரிய புத்தகம்தான்.. இருந்தாலும் படித்துவிட்டு... முடித்துவிட்டேன் என்று சத்குருவிடம் சொல்கிறேன்.
சத்குரு “ எங்கே அந்தப் புத்தகத்தைக் கொடு “ என்று சொல்லி அவருடைய இறுதி நாளைப் பற்றிச் சொல்லும் அந்தப் பக்கங்களைக் கொடுத்து “ சத்தமாகப் படி “ என்கிறார்.
நான் அதை ஸ்கூலில் ஒரு எஸ்ஸேயை பரீஷையின் போது படிப்பது போலப் படிக்க... சத்குருவிற்கு வந்ததே கோபம்.
“முட்டாள்.. என்னடா படிக்கிறே!.. கொண்டா இப்படி.. எப்படிப் படிக்க வேண்டும் தெரியுமா..?” என்று அதே கோபத்தோடு கையிலிருந்த புத்தகத்தை “வெடுக்” கென்று வாங்கி...
தன்னுடைய மனதிற்குள் சிம்மாசனமிட்டு அமர வைத்திருக்கும் ஒரு ஒப்பற்ற தலைவனைப் பற்றிச் சொல்லும் புத்தகத்தை.. அவர் மறையும் நாளில் உணர்ச்சிப் பெருக்கோடு எழுதப் பட்டிருக்கும் வாசகங்களை... சத்குரு எதிர் பார்க்கும் தொனியில்.. உள்ளுக்குள் வைத்திருக்கும் பெருமதிப்பை என் குரலில் அதைக் கொண்டு வராமல் நான் படித்தது...
கற்பூர வாசனை அறியாதவனாய் நான் சத்குருவின் கோபத்தைக் கிளறியிருக்க வேண்டும்...
அந்தப் புத்தகத்தை கையில் வாங்கிப் படிக்கிறார்கள். நேரு மயக்கமடைந்து விழுவதைப் படிக்கையில்... சத்குருவின் குரல் தழுதழுக்கிறது... மேலும் படிப்பது தொடர... வார்த்தைகளில் உணர்ச்சிப் பெருக்கு.. கண்களில் துளிர்க்கும் அந்தக் கண்ணீர்... !! அவ்வளவு உணர்ச்சி ப்ரவாகம்..!! ..
இன்று நினைக்கும்போதும் நேருவின் மேல் சத்குருவுக்கு இருந்த அபிமானம் புரிந்து கொள்ள முடிகிறது.
நேருஜி எழுதிய பல புத்தகங்கள்.. டிஸ்கவரி ஆஃப் இண்டியா.. இந்திராவுக்குக் கடிதங்கள் உள்ளிட்ட பலவும் அவர்கள் படித்திருக்கிறார்கள். தீ பரவட்டும் என்ற அறிஞர் அண்ணாவின் புத்தகம் எப்படி திராவிட இயக்கத்தில் பதிந்து போய் பேரியக்கமாக உருவெடுத்ததோ..
அதேபோல் நேருஜியின் எழுத்துக்கள் தேசப் பற்றையும்.. சுதந்திரப் போராட்ட ஈடுபாட்டையும் சத்குருவிடம் விதைத்திருக்க வேண்டும் என்றால்... அவர்கள் எனக்குப் “படி” என்று அறிமுகப்படுத்திய அந்த முதல் புத்தகம்.. எனக்குள் படித்தல் என்ற ஒரு இன்றியமையாப் பழக்கத்தை ஏற்படுத்தியதும்... தொடர்ந்து படிக்கத் தந்த கிருபானந்த வாரியார் எழுதிய கம்ப ராமாயண விரிவுரை.. தமிழ் மேல் என்னுடைய ஈர்ப்பை அதிகப்படுத்தியது.
சத்குருவின் சுட்டுதலில் என் தமிழ் மொழி மேல் நான் கொண்ட பேரார்வம்.. கேந்த்ரிய வித்யாலயாவில் என் மகளைப் படிக்க வைக்காமல் மூன்றாம் வகுப்பிலேயே எங்களை விட்டுப் பிரிந்து இங்கு வந்து தமிழ் கற்கக் காரணமாயும் அமைந்தது. புத்திரி சோகத்தைப் புரிய வைத்தது

என் படிக்கும் பழக்கத்தினால் தமிழ்க் கடல் மட்டுமல்லாது.. மேற்கொண்ட தொழில் நுட்பம் சார்ந்த நூல்களை ‘விருப்பத்தோடு” படித்தறிய முடிந்ததும்.. சத்குருவின் முதல் விதையினால் என்றால்..
எனக்குள்ளே இன்று ஒரு வனாந்திரம் செழுமையாய் வளர்ந்திருப்பதை உணர்கிறேன்.
எழுத்தறிவித்தவன் சத்குரு வன்றோ..!

இலை 16
சத்குரு பதிவு : 12:
அந்த வனாந்திரங்களில் சுற்றித் திரிந்ததில்.. கண்ணுற்ற மரங்கள் பலப்பல..!
மரங்கள் பலவற்றிலும் தாவித்தாவித் திரிந்தாலும் அதிகமான சஞ்சாரம் சுஜாதா எனும் ஹைபிரிட் .விருட்ஷம்... ஒவ்வொரு கிளையிலும் வெவ்வேறு பூவும்.. கனியும். பங்களூரில் இருந்த சமயம் இவரைப் போய்ப் பார்க்க முடிந்தது...
சரி.. இப்போது சேலம்...
முன் பதிவின் நிகழ்வு சேலத்தில் நிகழ்ந்தது. நேருஜியின் நினைவு நாள் என்பதால் நடுவில் இடைச் செருக வேண்டி இருந்தது. தொடர்ந்து சேலத்து நினைவுகளைப் பதிவு செய்கிறேன்.
அப்பொழுது ‘ஏ.டி.சீ” அண்ணா போக்குவரத்துக் கழகமாயிருந்த அரசு பஸ்ஸில் நானும் சத்குருவும் மதுரையிலிருந்து பயணம். 7 மணி நேரம். எனக்கு 7 வது வகுப்பு முழுப் பரீட்ஷை விடுப்பு.
அப்பொதெல்லாம் லீவுக்கு எங்க போற..? என்பது ஒரு மிக முக்யமான டிஸ்கஷன்.. எங்கேயாவது போகணும் அதுதாண்டா லீவு.!
இப்படி ஒரு எழுதாத ரூல். போய்விட்டு வந்ததும் முதல் நாள் வகுப்பில் பீற்றிக் கொள்வது என்பது பொதுவான.... ஆனால் சுவாரசியமான விஷயம்
லீவுக்குப் பெரும்பாலும் அம்மைய நாயக்கனூர், அச்சம்பத்து சின்னமனூர் இதில் ஏதாவதொன்றிருக்கும். அதென்னமோ அம்மையனாயக்கனூரில் செல்லும் ஒவ்வொரு தடவையும் கண்டிப்பாக முடிதிருத்தம் செய்யப்படும். எனக்கு நினைவுதெரிந்து கல்யாணம்மாச்சியே முன்னின்று இருமுறை இதை நடத்தியிருக்கிறார்கள். ( விமானப் படையில் சேர்ந்து 8/1/1981 – அன்று என்னுடைய ஸ்டெப் கட் வெட்டப்பட்டு மொட்டை என்று தீர்மானமாய்ச் சொல்வதற்கு 15 செகண்ட் முன்னாடியே நிறுத்தப்பட்டு “முடியலங்காரம்” செய்யப்பட்டபோது—(கொடுமைடா அது..!) – (சத்தியமாய்க் கல்யாணம்மாச்சியை நினைவு கூர்ந்தேன்..!)

தோட்டத்துக் கிணற்றில் குளியல்.. நீச்சல்.. கொய்யா மற்றும் மாங்காய் எறிந்து உப்பும் மிளகாயும் தொட்டு தின்பது.. போன்ற கதைகள் நிறைய கை வசம் உண்டு.
முருகாத்தாத்தா பீடத்தில் இருந்து இந்தச் சேட்டைகளை ரசிப்பதாய் ஒரு ரகசியப் பெருமையும் உண்டு.
இதன் பாதிப்பாய் எங்கள் குல தெய்வத்துதியில்
“ குழந்தையர்கள் விளையாடப் பரவசிப்பாய் போற்றி “ என்றும் எழுதியிருக்கிறேன்.
(கணம் நீதிபதி அவர்களின் கவனத்திற்கு இதை வைக்கிறேன் )

பாருங்கள் பஸ்ஸிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டேன்..!
..........
பஸ்ஸில் நெடுக நிறையக் கேள்விகள் நான் கேட்கிறேன். முக்கியமானது அந்த ட்ரைவ்ர் போடும் ‘கியர்’ பற்றியது. ‘”அத எதுக்கு திருப்பி.. திருப்பி போட்றார் ட்ரைவர்..?”
“அதுவா.. அப்பத்தான் வண்டி யிலிருக்கும் இஞ்சினில் இருந்து சக்கரத்திற்கு கிளச் மூலமா பவர் கிடைக்கும்.” “ வேகமாப் போணும்ணா 1, 2.. ன்னு அஞ்சு கியர் போடணும்...”
பின் நாட்களில்.. 30 வருஷங்களின் பின்.. அட்வான்ஸ்டு கார் ஸ்ர்வீசிங் பற்றிய பயிற்சி வகுப்புக்களின் போது.. Main Lay shaft, Gear shift Fork, Speed synchronizer Mechatronics என்று அந்த 5 கியர்களைப் பற்றி விலா வாரியாகத் தெரிந்து கொண்டேன்..

வழியெல்லாம் ஒவ்வொரு ஊர் கடக்கும் போதும்.. அந்த ஊரின் பெயரைச் சொல் என்பார்கள். முழிப்பேன். “ஷண்முகனாதா.. அங்க பார்.. கடைகள் மேலே தொங்கவிட்டிருக்கும் பெயர்ப் பலகையில் .. கடைசியில் தெருப் பேர்.. ஊர்ப் பேர்.. எல்லாம் இருக்கும்..” யார்ட்டயும் நம்ம கேட்கவே வேண்டாம் என்று அந்தப் பயணத்தில் சொல்லிக்கொடுத்தார்கள் சத்குரு.
விமானப் படையில் இருந்த சமயம் நாவிகேஷன் ( Navigation ) பற்றிய பாடங்கள்.. மற்றும் செய்முறைப் பயிற்சிகளின் போது..இதுவே “ வே பாயிண்ட் - (Way point) “ என்றும்.. லாட்டிட்யூட் .(Latitude ). லாங்ஜிட்யூட் ( Longitude ) கோ ஆர்டினேட்ஸ் - (Co.ordinates) எனவும் தொடர்புறுத்தி விவரங்கள் அறிந்தேன். விமானங்கள் பறப்பது இந்த Way point களின் வழியேதான்.
எங்கேயிருந்து எங்கே பாருங்கள்....!
எங்கேயிருந்து எங்கே பாருங்கள்....!
ஒரு பஸ்ஸிலிருந்து கொண்டே நாவிகேஷன் பற்றிய பாடம் எனக்கு சத்குரு எடுத்திருக்கிறார்கள் என்றால்.. இதைப் போன்று ஒவ்வொரு நிகழ்வையும் கோர்த்துக் கோர்த்துத் தொடர்புபடுத்திப் பார்ப்பதில் என் நன்றியறிதலைப் பதிவு செய்ய இயல்பாய் எனக்கு வாய்ப்புக் கிடைப்பது சத்குருவின் பேரருள் என்றே நினைக்கிறேன்..!
சரி இனி மறுபடி சேலத்திற்கு வருவோம்..
அம்மாப்பேட்டையில் வீடு.
தினமும் அதிகாலை சீக்கிரமாய் எழுந்திரிப்பது .. (நான் மட்டும் கொஞ்சம் லேட்) எனக்குச் சலுகை உண்டு. சத்குரு படுக்கையின் ஓரம் உடகார்ந்துகொண்டு பெயருடன் ‘குஞ்சு” என்ற அடைமொழியோடு எழுப்புவார்கள்.
எழுந்ததும் பல்விளக்கி குளித்து.. 6 மணி க்கு முன்பாக சாமி படங்கள் முன் உட்கார்ந்து விட வேண்டும். சந்தனப் பொட்டு.. லாவகமான துணியால் ஒற்றி எடுத்தல்.. இவை முடிந்து...
“ கைத்தல நிறைகனி....
“ சரண கமலாலயம்.. “
என்று பாட்டுக்கள். அப்பல்லாம் கொஞ்சம் சத்தமாகப் பாடுவேன். வார்த்தைகளை நடுநடுவே மறக்காமல்.. பாடும் போது..தயக்கமில்லாமல்.. பரீட்ஷையில் ‘தெரிந்த’ ஒரு கேள்விக்கு அனாயசமாக.... அலட்ஷியம்.. கான்ஃபிடன்ஸ் நிறைந்து பதில் எழுதுவது போல.. ‘ஹ..” வென்று ஒரு உணர்வு உள்ளூர.
ஆனால் காலையில் சீக்கிரமே குளித்து விடுவதால் பயங்கரமாய்... பசிக்கும். அடுப்படியில் அத்தை ஸ்டவ்வில் தோசை ஊற்றும் சத்தமும்.. ஊதுபத்தி மணம் தாண்டி வரும்.. அந்தக் கெட்டி பிரவுண் கலர் சட்னியின் வறுத்தரைத்த வாசனையும்.. ..
எப்படா இந்தக் ‘குன்றமெறிந்தாய்..” பாட்டு வரும் என்று மனசு ஏங்கும்.
“ பரிசைக் கொடுத்துவிடுங்கள் மன்னா..!” எனும் தருமியின் மன நிலை.
பசி வந்தால் பத்தென்ன.. பத்தாயிரமும் பறந்து போம்..! அப்பத்தானே சூடம் கொளுத்தி பூஜை முடிச்சு. அப்புறம் மொறு மொறு தோசையை வெளுத்துக்கட்ட முடியும்..!

அந்த தோசையை அதற்கப்புறம் நான் பார்க்கவேயில்லை.. ! என்பது என் வா நாள் சோகங்களில் ஒன்று..! (ப்ச..)
9 மணிக்கெல்லாம் சத்குரு வேலைக்குப் போய் விடுவார்கள். போகும் முன்பாக.. ஹிண்டு பேப்பரில் ஏதாவது ஹோம்வொர்க் கொடுத்துவிடுவார்கள்.
அத்தாச்சிகளுக்கு “வெள்ளிக்கிழமை விரதம்” படக்கதையை.. பாம்பு வரும்போது போடும் ம்யூசிக்கோடு சொல்லி.. நைஸாக அந்த ஹோம் வொர்க்கைச் செய்துவிடுவேன்..
அங்கேதான் குகை, சேலத்தில் ஜெயலஷ்மி அப்பத்தா ( எனக்கு சேலப்பத்தா..) இருந்தார்கள்.
.......................................................................................................................சேலம் தொடரும்...

இலை 17
சத்குரு : 13 :
அப்ப எது சரி..???
ஒரு நாள் சத்குரு என்னை சேலப்பத்தா வீட்டிற்கு அழைத்துச் செல்ல.. திடீர் என்று கடைசி பரீட்ஷை முடிந்து அந்த முதல் நாள் விடுமுறை போல் உணர்ந்தேன். அங்கே அவ்வளவு சுதந்திரம்.. உடம்பில் உள்ள அத்தனை மில்லியன் அணுக்களும் ஓஹோவென்று குதித்துக்கொண்டிருக்க...
அங்குதான் முதன் முதலில் மாணிக் தாத்தாவின் ‘சமரஸ ஸ்ன்மார்க்கம்” என்ற வார்த்தைக்கு அறிமுகமானேன். அத்துடன் கம்பீரமாய் ரசித்துப் பாடும்
“கற்பக வல்லி நின் பொற்பதங்கள்.. பிடித்தேன்.. நற்கதி அருள்வாயம்மா..!”
என்ற பாடல் கேட்டு இன்றளவும் அந்தப் பாடலை செவி மடுக்கையில் ஒரு கணம் ரேடியோ தாத்தாவின் முகம் நினைவில் ஆடும்..
“ அம்மா ஜயலக்ஷ்மி! ரெண்டு நாள் இவன் இங்கே இருக்கட்டும்.. ஏதாவது நல்ல சினிமாவுக்கு முடிஞ்சா கூட்டிட்டுப் போய்ட்டு வாங்க ..!
சினிமா என்ற வார்த்தையைக் கூட சத்குருவின் முன்னிலையில் சொல்லாத ஒரு சூழ்னிலையில் .. சின்னப்பையன் சினிமாவிற்குப் போய் வரட்டும் என்ற் புரிதலோடு ... அப்படி ஒரு தனிக்கவனம்,, சிறு விஷயத்திலும் கூட..
“ மற்றவர்க்கு தேவை என்ன என்பதில் காட்டும் அக்கறை..!
2 படங்கள் பார்த்தேன். “கண்மணி ராஜா..”
முதல் முதலாய் எஸ்.பி.பி யை இந்தப் படப் பாடலான “ ஓடம் .. கடல் ஓடும்.. அது சொல்லும் கதை என்ன..?” வில் இருந்து ரசிக்க ஆரம்பித்தேன்.
அப்புறம் யாரோ ஒருவரிடம் சொல்லி.. சைக்கிளில் ரொம்ப தூரம் சென்று.. ‘கௌரவம்” படம் பார்த்தேன்.
“என்னப்பா படம் பார்த்தே..?” ன்னு சத்குரு மறுபடி அங்கே சென்றபோது கேட்க
“ கௌரவம் ” என்று சொன்னேன். எங்கே கதையைச் சொல்லு என்றதும்...
‘ ஒருத்தன் உண்மையிலேயே கொலை ஒன்றைச் செய்துவிட்டு பாரிஸ்டர் ரஜினிகாந்த் என்ற கிரிமினல் லாயரினால் தப்பித்துவிடுகிறான்..”
அவனே அவனுடைய மனைவி விபத்தினால் இறக்கும்போது லாயரின் மகனால் கொலை செய்யப்பட்டதாகத் தண்டனை பெறுகிறான்..”
இவ்வளவு தெளிவாக அன்று சொல்ல முடியவில்லை.. எனக்குப் புரிந்த அளவில் கதையைச் சொன்னேன். சத்குரு தன் யூகத்தில் நான் சொல்ல வந்ததைப் புரிந்துகொண்டு ..
“ அப்ப எது சரி ..? என்று கேட்க.. அன்று கேட்ட அந்த கேள்வியைப் பற்றி நிறைய யோசித்திருக்கிறேன்.

ஒரு குற்றம் செய்தவன் எப்படித் தப்பிக்கலாம்..? அவனைத் தண்டிக்கத்தானே சட்டம்.. ஆனால் இந்த லாயர்கள் ஏன் குற்றவாளியைத் தப்புவிக்க இவ்வளவு மெனக்கெடுகிறார்கள்..? (பணம்..?– அதைத் தாண்டிய விஷயங்களை யோசிக்க முனைகிறேன்..)
வாதத்திறமைதான் வெல்கிறது என்று கொண்டாலும்...
உண்மை மறைக்கப்பட்டது என்று கொள்வதா..?
அப்படியே அது இருந்துவிட்டாலும் அது தன்னைக் காட்டிக்கொள்ளாமல் இருந்துவிடும் அவல நிலை ஏன் ஏற்படுகிறது...?
அமைதியாக.. இருந்துவிடுவதால்தான் அது உண்மையாக இருக்கிறதா?..?
உண்மையான ஒன்றைப் பொய்யாக்கிப் பார்ப்பதுதான் சட்ட நிபுணத்துவமா..?
பொய்களுக்கு ஏன் இவ்வளவு வலிமை..?
உண்மைக்கு வலிவு இல்லை என்ற ப்ரம்மையை ஏற்படுத்தும்படி ஏன் இவ்வளவு வலிமை..?
உண்மை எப்போதும் மௌனமானதா..?
குரு “அறிவுத்திறளில்” சுட்ட்டியிருப்பது போல் ..
மௌனமே ஞானத்தின் எல்லையா..?
ஞானத்தின் எல்லையில்..
மௌனத்தில் இல்லாத மொழிகள் இல்லை என்றால்..

பொய்கள் ஏன் இவ்வளவு “சப்தமாக” ஒலிக்கின்றன..?
சத்தமாகச் சொன்னால் அவை சத்தியங்களாகி விடுமா..?
சத்தியத்துக்கும்.. கடவுள் என்பதற்கும் வித்யாசமிருக்கிறதா என்ன..?
‘ உண்டு என்றால் அது உண்டு.. இல்லை யென்றால் அது இல்லை..” தானா..?
“........நான் பார்த்து ஒன்றாகக் கண்டது..
நீ பார்த்து வேறாக மாறிவிடுவதும்
தெரிவது ஒன்றும்...
புரிவது ஒன்றுமாய்..
வாழ்க்கையின் அடுத்த நொடி ஆச்சரியங்களோடு.. வழி நெடுகிலும் எழும் நிறையக் கேள்விகளுக்கு வித்து ..
சத்குரு என்னிடம் அந்தப் புரியாத வயதில் கேட்ட...
அந்த “ அப்ப எது சரி..? “
..................................................................................சேலம் தொடரும்....

இலை 18
SATHGURU : 14/1
“ ஷண்முகனாதா இங்கேயே ரெண்டு நாள் இருந்துட்டு வொர்க்ஷாப் பெல்லாம் போய்ப் பார்த்துட்டு வந்து.. என்னவெல்லாம் பார்த்தேன்னு சொல்லனும்..”
இது சேலப்பத்தா வீட்டில் என்னை விட்டுவிட்டுப் போகும்போது சத்குரு உதிர்த்த வார்த்தைகள்.
எம்.ஜி.ஆர்.. தன்னுடைய கொள்கைப்பாடல்களில் கருத்துக்களை மக்களுக்குச் சொல்லும் போது ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் இருந்திருக்குமா என்று தெரிந்திருக்கவில்லை.
அதைப்போல் என் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றிலும் சத்குருவின் மூலம் சுட்டிக்காட்டப்படுபவை.. பின்னாட்களில் என்னுடைய வாழ்க்கைப்பாதையின் மகத்தான பக்கங்களுக்குக் காரணமாய் இருந்து வந்திருக்கின்றன... மறுபடி அவர்கள் சொன்ன வார்த்தைகள்.. கீழே..

*******************************************
முதன் முதலில் நான் மிகவும் சிறு பிள்ளையாய் அங்குச் சென்றிருக்கிறேன் .. ஆனாலும் 73 ல்( correct ஆ) காவடி எடுத்தபின் சென்ற நிகழ்வுகளைத்தான் பதிவு செய்து கொண்டிருக்கிறேன்.
சேலம் எனக்கு மிகவும் நன்றியறிதலுடன் நினைத்துக் கொள்ளும் ஊர் என்றால்.. எனக்கு அதை வார்த்தைகளில் வடிக்கத் தமிழ் பற்றாக்குறை என்றே எண்ணத் தோன்றும்.

சக்தி எலக்ற்றானிக்ஸ் என்ற நிறுவனம்.. அங்கே ஸ்ரீ.மாணிக்கம் தாத்தா அவர்களின் தொழில்னுட்ப அறிவுத் துணையொடு சோக்ஸ் உற்பத்தித் தொழில்சாலையில் நான் கால் பதித்த போது.. ஸ்ரீமதி.கீதா அத்தை ஒவ்வொன்றாக்ச் சொல்லிக் கொடுத்தது. அத்துடன் தாத்தா அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கும் போது உடனிருந்து சொல்டெரிங் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த்து.
அப்பவெல்லாம் வால்வ் ரேடியோ செட்கள் தான். மின் அணுவியலில் முதல் ஜெனரேஷன் காலம். 2 வது ஜெனெரேஷன் செமி கண்டக்டர்ஸ் , அப்புறம் LSI, VLSI, VVLSI , ICs MUPs(Microprocessors) என்று போகும்..
முதல் முதலாய் நான் வயர்களை எடுத்து ஒரு ஸ்பீக்கரில் தொடர்பு கொடுத்துப் பாட வைத்ததும்.. அது பாடியதும்.. ஒரு பரவசம்.
அப்புறம் ஒரு ப்ள்க், ஸ்விட்ச், ஹோல்டெர் இவைகளை வயரில் இணைத்து எரிய வைத்தது. ப்ல்ப் எரிந்தது என் முகத்திலும்.
என்னுடைய மின் நுண்ணணுவியல் துறைக்கான முதல் வித்து விழுந்த இடம் சேலம்.

விமானப் படையில் சேர்ந்ததும் முதலில் க்ரவுண்ட் ரேடார் (GROUND RADAR – VALVE SYSTEM) வால்வ் சிஸ்டம் களில் பணியாற்றிவிட்டு.. இறுதியில் மிராஜ்..2000 விமானங்களில் அதிநவீன டிஜிடல் மற்றும் லேசர் டெக்னாலஜிக்களால் ( DIGITAL & LASER TECHNOLOGY ) வடிவமைக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் நாவிகேஷன் ( NAVIGATION )சம்மந்தப்ப்ட்ட கருவிகளில் பணியாற்றியது.
.அந்த முதல் வித்தின் விருட்சமே..
.அந்த முதல் வித்தின் விருட்சமே..
இதற்கு நடுவில் காப்பர் கம்பிகளை வைத்துப் பண்ணவேண்டிய இடத்தில் காப்பிட்ட அலுமினியக் கம்பிகளை உபயோகித்தது சம்மந்தமாக.. சத்குருவின் கடினமான விமரிசனங்கள்... இவற்றில் பெரும்பாலும் அந்த சமயங்களில் எனக்குப் புரிய வில்லை என்றாலும் சேலம் விட்டு நாகமலை வந்தபோது.. ஏதோ பெரிதாகத் தப்பு நடந்துவிட்டது என்பது மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது....
தங்கை ஸ்ரீமதி.ஜயலஷ்மியின் குடும்பத்தின்மேல் ஒரு அண்ணனாக சத்குரு அந்த நேரங்களில் நடந்து கொண்ட விதம்..
நகமலைக்கு சத்குருவும் குடிபெயர்ந்து வந்தவுடன் அனுசரணையாக ஏதேதொ முயற்சிகளின் பின் நான் என் அன்புக்குரிய அக்கா என்றழைக்க முயன்று தோற்று (அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே) அத்தை என்று அழைத்த ஸ்ரீமதி.ஜோதி அத்தையைத் தன் இளவல் ஸ்ரீ.ரவீந்திரன் (முருகாத் தாத்தாவுக்குப் பாண்டித்துரை) அவர்களுக்கு மணமுடித்து மருமகளாக்கிக் கொண்டார் சத்குரு அவர்கள்.

“அநாதரவாகிவிட்ட தோணிகளுக்கு துடுப்புக்களாயிருப்போம்.. என்று ஆதரவுக்கு வந்த வார்த்தைகள் வெறும் வார்த்தைகளாக மட்டும் இருந்துவிட.. செல்வ நிலையத்தில் ஜோதி குடிகொண்டது.. எந்தக் குறைகளுமின்றி. !
சமகாலத்தில் நடந்த விஷயம் என்பதால் இதை "நானே" பதிவு செய்கிறேன்.
முதல் முதலாய் தனக்கே தனக்கென்று சுபவிளக்கு ஒன்று பேத்தியாய் ஜனித்ததும்.. செல்வ நிலயம் மேலும் ஒளிர்ந்து நின்றதும்..
என் சத்குருவும்.. பெரிய அத்தானும் அதைவிடவும் வாழ்க்கையில் பிறிதொரு சந்தோஷத்தை அடைந்திருக்க மாட்டார்கள்.
என் கண்முன்னே ஒரு மூத்த அண்ணன் தங்கையிடம் பாசமலர் பூக்க நின்றது .. நிச்சயம் முன்னுதாரணமாய்க் கொண்டு செயல்பட வேண்டியது என்றாலும்...
..................................................................................தொடரும் பதிவு 14/2

இலை 19
Sathguru : 14/2
சமீப காலங்களில்..
மனவெளிகளில் மனித உறவு முறைகளுக்குள் ஏற்படும் இழைப்பின்னல்களில் பெரியதாய் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அறிய முடிகிறது. ..
முந்தைய கால கட்டங்களில் சார்ந்திருப்பதென்பது.. பலவீனமான பொருளதார நிலைகளோடும் சம்மந்தப் பட்டிருந்ததாலும்...
மனதில் பெருமதிப்பும், பாசமும் இரண்டறக் கலந்திருந்தது என்பதை நிச்சயமாக நன்கு உணரமுடிந்தது.
மனம் சோர்ந்த அண்ணனாய் சத்குரு ஷண்முகபவனத்தில் கால் பதித்த போதெல்லாம்.. ஒரு தாய் கொடுக்கும் தைரியத்தைத் தங்கையிடம் பெற முடிந்தது.
அந்த ஜெனரேஷனின் அனலாக் பரிமாணங்களிலான உறவு இழைப்பின்னல்கள் ( ANALOG FABRICATION ) காலங்களில் மாறிக்கொண்டிருக்கும் உறவு நிலைச் சங்கேதங்களுக்கு (VARYING SIGNAL COMPONENTS ) ஏற்ப உறவுச்சூழலில் மாறுதல்களின் உயர்வு தாழ்வை ஏற்றுக்கொண்டபடி.. மனங்கள் இயங்கும்..
இன்றைய டிஜிட்டல் (DIGITAL ) யுகத்தில் தனிப்பட்ட ஒவ்வொருவரும் பலவித வளர்ச்சிகளின் காரணமாய், ஏராளமான அரசியல், படிப்பறிவு, சொந்தம், அன்னியம், ஈகொ, பணபலம், இப்படிப் பலவித “ லாஜிக் “ குகளுக்கு உட்படுத்தப்பட்டு மனங்கள் டிஜிட்டல் முறைகளுக்கு (DIGITAL PROCESSING ) மாறியிருக்கிறது....,
நூற்றுக்கணக்கான உறவு நிலை லாஜிக் 1 மற்றும் 0 அதாவது “சம்மதம்” அல்லது “ சம்மதமில்லை” என்ற சங்கேதங்களுக்கு. (BINARY SIGNALS) மனங்கள் இயங்கி மாறுதலை ஏற்கும் வழிகளின்றி சட்டென்று “ஃபெய்ல்” என்று சிவப்பு விளக்கு எரிந்துவிடுகிறது. ஒன்றுக்குப்பதிலாக பலவித ஒருங்கிணைப்பு (CLOCK PULSES) சங்கேதங்களை தவறான இடங்களிலிருந்து பெறுவதினாலும், பல சமயங்களில் இயல்பு இயங்கு நிலைகளுக்கு ஒவ்வாத (FORBIDDEN ) நிலைகளுக்கு உறவுகள் தள்ளப்பட்டும் விடுகின்றன.
இப்படி எலெக்ட்ரானிக்ஸ்-ஐ இன்றைய உறவு இழைப்பின்னல்கள் (RELATIONSHIP) அடைந்திருக்கும் பரிணாம மாற்றத்திற்கு ஒப்பிடலாம் என்று எனக்குத் தோன்றுகிறது.. (உங்களுக்கு எப்படி..?)
மழை நீர் தான் விழும் நிலத்தின் நிறம் பெற்றுவிடுதல் போல்.. வாழும் சூழ்னிலை.. உறவுகளின் நிறத்தை மாற்றி விடுவது... தவிர்க்கமுடியாததாகிப் போய் விடுகிறதே..!
இந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவரவர் வழிகளில் சிறந்து வாழும் வகையை வரையறை செய்து..
“ அன்பின் எதிர்பார்ப்புக்கள்...”
என்ற வன்முறைச் சிந்தனை இன்றி வாழ்தலே சிறப்பு என்று எனக்குப் படுகிறது..
“......தாமரை இலை மேல் நீராயிரு....”
இதன் வெளிப்பாட்டை..
அதன் காரணமும்... !
உன்னதமும்..!
புரியாத காலத்தில் சத்குருவிடம் பின்னொருனாளில் நான் கண்டேன்.. அதைப்பற்றிப் பிறகு ஒரு பதிவில் காணலாம்...

.....................................................................நாளை குமரனைத்தேடி குமரகிரி செல்லலாம்..
இலை 20
சத்குரு பதிவு : 15
Title : நம் கதி என்னவாகியிருக்கும்..????
அன்று மாலை குமரகிரி செல்வதாய் ஏக மனதாய் முடிவு செய்யப்பட்டு.. நடக்க ஆரம்பித்தோம்.
அம்மாப்பேட்டையிலிருந்து நடந்து செல்ல 2, 3 கி.மீ. இருக்கும்.
வழியில் ஒரு மாசாணி அம்மன் படுத்த நிலையில்.. பனை மரங்களினூடே கொஞ்சம் பயமாக இருந்தது... அப்படி ஒரு அமானுஷ்யம்..!!. அந்த மூக்கும்.. முழியும்...!

அங்கே கைலாயத்தில்.. மாம்பழத்தினால் பிரச்ணை ஏற்பட.. நம்மைப் பாடாய்ப் படுத்தி ஆனந்திக்கும். செல்லக் குழந்தை முருகன் மயிலேறிக் கிளம்பி.. பழனி வரும் முன்பு சிறிது நேரம் இளைப்பாறிய இடம் ..தான் இந்தக் குமரகிரி..
இந்தக் கதையை சத்குரு எனக்குச் சொல்லியபோது.. இளைப்பாற வேண்டியிருந்தது.. மயிலுக்கா..? முருகனுக்கா..? என்று தோன்றியது..
இங்கே ஞானப்பழத்திற்கு.... மாம்பழமே நிவேதனம்..!!!!
‘குமரா.. இங்கு தரும் மாம்பழத்தைப் பெற்றுக் கொண்டு மனமுவந்து சற்றே. சாந்தமாயிரு.. தங்கமே..! “ என்கின்ற பாவனையாய் இந்த நிவேதனம்..

அங்கே அந்தக் குழந்தை சாந்தமாய் இருப்பதாகத்தான் பட்டது. அந்தக் குழந்தையிடம் கோபத்தை காணவும் முடியுமோ..?
இதனாலேயே சேலம் மாம்பழத்திற்கு பிரசித்தி பெற்றது என்பது இங்கே கருத்தில் கொள்ள வேண்டியது...காண்க.

சங்க காலத்தில் அவ்வைப் பிராட்டி அவதரித்த ஸ்தலம் சேலம் என்பது இன்னுமொரு விசேஷம்.
அருணகிரி திருப்புகழில் பாடப்படும் ஒரு ஸ்தலமும் இது என்பது மற்றுமொரு விசேஷம்.
இங்கே ஒரு பக்தரிடம் குமரன் தோன்றி இந்தக் கோவிலை நிர்மாணிக்கச் சொன்னது ஒருபுறமிருக்க.. அந்த பக்தரின் பெயர் கருப்பண்ணசாமி என்பது நமக்குப் பெரிய விசேஷம்..!
சத்குரு “ இதோ இதுதான் முருகன் வந்து காட்ஷியளித்த இடம் “ என்று காண்பித்த இடத்தில் அழகனின்.... பாதங்கள்...!
“....முருகனென்றால் அழகனென்று தமிழ் மொழி கூறும்..
அழகன் எந்தன் குமரன் என்று மனமொழி கூறும்.....!”
தானே பெற்றவள் போலே சக்திக்கு.. என்ன ஒரு பெருமை..?
அன்று.. “ த பார்றா !! ” என்று லேசான ஆச்சரியம் மட்டும் உணர்ந்த மனம் இன்று அந்தக் காட்ஷியை மனதில் இருத்தி முழூருவத்தில் பார்க்கிறது..

குமரகிரியை உங்கள் பார்வைக்கு இணைத்திருக்கிறேன். (பின்புலத்தில் நாமமலை).
பெரியதாய் நாமம் போட்டிருக்கும். அதனால் தானோ என்னாவோ மாமனுக்கு மரியாதை நிமித்தம் பக்கத்தில் இந்தக் குமரகிரிக் குன்றில் இளைப்பாறினார் மயில் வாஹனன் என்று தோன்றும்...
ஒருபக்கம் “அந்தப் பழத்தைத்தான் இந்தக் குழந்தைக்குக் கொடுத்திருக்கக் கூடாதா..? என்று பாசம் மேலிடக் கேள்வி நமக்குள் எழுவது மெய்யென்றாலும்..
இந்தக் கதையை சத்குருவிடமிருந்து செவி மடுக்கும்போது... அன்று தோன்றாத கேள்வி இன்று மனதில்..!
அந்தக் குழந்தை மட்டும்... இங்கு வந்திராவிட்டால்...?
நம் முன்னோர் முதல் இன்று பிறந்திருக்கும் குழந்தை வரையிலும்....

நம் கதி என்னவாகியிருக்கும்..????
****************************************************************************இனி பதிவுகள் மதுரையில் தொடரும்

இலை 21
சத்குரு 16 :
அஞ்ஞாதவாசம் என்று அப்பாவிற்கு சத்குரு எழுதிய ஒரு கடிதத்தில் விவரிக்கப்பட்டிருந்த சேலத்திலிருந்து .. அனைவரும் குடிபெயர்ந்து நாகமலை காலனிக்குக் குடிபெயர்ந்தார்கள். அப்போது நான் 8 ம் வகுப்பில்.
அந்தச் சமயங்களில் நான் அங்கேதான் இருந்து படிப்பது என்று முடிவு. சிறு சிறு வேலைகள் செய்வேன். மாலையில் படிப்பு என்று ஓடிற்று.. காலம்.
ஒரு நாள் சமணர் மலையைச்சுற்றி வந்து நானும் சத்குருவும் பெரிய வாக்... நடந்துகொண்டிருந்தோம்... ஆலமரம்.. கோயில் பகுதியில் நடந்தபோது.. அங்கே ஒரு 4 தூண் மண்டபம். இருக்கிறது.. அதில்
‘சித்த இப்படி உட்கார்ந்துட்டு போலாமா..?” என்று கேட்டபடி சத்குரு உட்கார நானும் அமர்ந்தேன்.
சத்குருஉட்கார்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு..
“ ஒரு பத்து பதினஞ்சு வருஷம் கழிச்சு சமணர் மலை பக்கத்தில் ஒரு நாலு கால் மண்டபம்.. இருந்ததா..? ன்னு கேட்டால் உனக்கு ஞாபகம் இருக்கணும்டாப்பா..”
இருக்குமா..? ந்னு எனக்குச் சந்தேகம்.
” நான் தெரியலை மாமா.. என்கிறேன்.
“எதுக்குச் சொல்றேன்னா நம்முடைய ஞாபக சக்தியை எப்பவும் ஷார்ப்பா வச்சுக்கணும்.. அதுக்கு இப்படி எதையாவது மனசுக்குள் நினைச்சுப் பாத்துப் பாத்து.. புதுப்பிச்சுட்டே இருக்கணும்.. இதத்தான் ( Increasing the Mind power ) ந்னு சொல்றது.. அய்யா (முருகாத்தாத்தா) இத மாதிரி நிறய அப்பியாசங்கள் எங்களுக்குச் சொல்லுவாங்க...”
“ உனக்குத் தெரியுமா..? அய்யா திடீர்னு ஒரு விரலைச் சுட்டி கண்ணுக்கு நேரே காமிச்சு “ என்ன டைம்..” நு கேட்டா யாருன்னாலும் சரியான நேரத்தைச் சொல்லிருவாங்க.. . அய்யா இப்படி பல முறை பண்ணிக் காமிச்சிருக்காங்க.. நம்முடைய மன ஆற்றல்களை எப்பவும் குறெச்சு.. மதிப்பிட்றக்கூடாது.. . “
என்று அட்ன கால் போட்டிருந்த கால் பாதத்தைத் தடவியபடி.. சொல்லிக்கொண்டிருந்தார்கள்.... சத்குரு எப்போதும் தான் சொல்லும் விஷயத்தை மிகவும் லயித்துச் சொல்லும்போது.. தன் பாதங்களைத் தடவிக்கொள்வது .. ஒரு அழகு.!
முருகாத்தாத்தாவிற்கு உள்மன ஆற்றல்கள் பற்றிய ஆராய்ச்சியும் சிந்தணைகளும் எப்பொழுதும் உண்டு என்பது பற்றி நிறையக் கேட்டிருக்கிறோம்.”
உடல் ஓம்பலும்..!
நல் உளம் ஓம்பலும்..!
கற்றுக் கொடுத்தனை...!
இனியொருவர் இங்கமைவரோ..
குருவாய்..சத்குருவாய்..?
பிள்ளைகள் நாங்கள் கூவியழைக்க..
தம் செவிகள்தனில்
தேன் வந்து பாயலையோ..?”
ஒவ்வொரு மகனுக்கும் தன் தகப்பன் தான் முதல் ஹீரோ. தகப்பனைப் பார்த்துப்..
படித்துக்... கற்றுகொள்ளல் இங்கே அவசியம்.. உலகத்தின் அறிமுகம் தகப்பனின் பார்வையிலேயிருந்துதானே பிள்ளைக்குப் போய்ச்சேரும்..!
“ எங்க அப்பா..!!” என்ற நெஞ்சு நிமிர்த்தும் பெருமை சத்குருவின் ‘குரலின்’ வழி ஒலிக்காமல் .... அதன் எதிரொலி மட்டும் வியாபித்துப் பரந்து விரிந்து இன்னும்.. ‘ எங்க தாத்தா.. எங்க அய்யா. குரு, .வெனப் பரவிப் பரவிப் போய்க் கொண்டே இருக்கிறது.... தலைமுறைகள் தாண்டி.. 40 வருடங்கள் கடந்த பின்னும்... கற்றை ஊதுபத்தியின் வாசம் கமழ்ந்து சுற்றிச் சுற்றி வருவது போல...
மனங்கள் நுகரட்டும்... அவ்வாசம்..!

********************************************மதுரைப்பதிவுகள் தொடரும்..
“ இப்பூத உடல் அழிந்தே தீரும்.. திருமணம் நடந்தே தீரும்..!
இந்தகுரல் ஒலித்ததும்
ஜூன் 3 – ல் அந்தத் திருமணமும் நடந்தேறியதும்..
“ என்னுடலை அடக்கம் செய்.. எரிக்க வேண்டாம்..?”
என்று குரு திருவாய் மலர்ந்தருளியதும்...
“ தன் மேல்.. தன் சந்தனம் கமழ்ந்திருந்த உடல்மேல்.. தான் பெருமிதத்தோடு நேசித்த அந்த கம்பீரத் திருமேனிதனில் .. எத்தணை பெருமதிப்பிருந்திருந்தால்.. இந்த வாசகம் குருவிடம் இருந்து தம்பி ராமுவிற்கு வந்திருக்கும்...?
குரு ஏன் அப்படிச் சொன்னார் என்பதற்கு.. உரிய பதில்/பதிவு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்....!

இலை 22
சத்குரு : 17
நாகமலை வைகறைகள் :
“ வைகறைப் பொழுதினில் விழித்தேன்... அந்த வடிவேல் முருகனை நினைத்தேன்..!”
அது மார்கழி மாதம்...
அதிகாலையிலேயெ நாகமலை புதுக்கோட்டையிலிருந்து பாட்டு கேட்க ஆரம்பித்துவிடும். அந்தக் குளிரின் கதகதப்பில் இன்னும் இழுத்துப் போர்த்துக் கொள்ள மட்டுமே ஆசை வரும்.

நிச்சயமாகப் படிக்க அல்ல..!
ஆனால் இந்த அரையாண்டுத் தேர்வுகள் எப்போதும் டிசம்பரில்தானே வந்து தொலைக்கின்றது....?
காலையில் 4.30 மணிக்கெல்லாம் எழுந்திரிக்க வேண்டும். முதல் நாளிரவில் 9.00 க்கு இரவில் விளக்கு அணைக்கப்படும். இது தினசரி நடப்பு.
சரியாக 4.25 காலை விளக்கு ஸ்விட்ச் போடப்படும். இது முதல் வார்னிங்.
அந்தச் சத்தத்திலேயே பெரும்பாலும் முழிப்பு வந்துவிடும். மூடிய கண்களுக்குள் சிவப்பாய்த் தெரியும். லைட்டைப் போட்டுவிட்டு சத்குரு பின்புறம் கிணற்றடிக்குப் போய்விட்டுத் திரும்பி வந்து எங்களை எழுப்புவார்கள்.
இடைப்பட்ட இந்தப் பத்து நிமிடம் சொர்க்கம்.
பிறகு எழுந்திரித்து மூஞ்சி கை கால் கழுவி படிக்க உட்கார்றதுன்னுதான் ஐதீகம். ஆனா இந்தத் தூக்கம் ஆளை அப்படி அமுக்கும்.
தலைகாணி மேல் புத்தகத்தை வைத்துப் படிக்க ஆரம்பிப்பேன் ( இது முதல் நிலை ).. 2 வரிகள் கூடத் தாண்டாது.
அப்புறம் நைஸாக..ரெண்டு கைகளையும் முகத்துக்கு முட்டுக் கொடுத்து.. ( இது இரண்டாம் நிலை )
மறுபடி அந்த முதல் 2 வரிகளில் ஆரம்பிக்க.. இன்னும் கொஞ்ச நேரம் கண்ணை மூடிக்கொள்ளலாமா என்று ஆசை எழும்பும்.
இப்ப ஒரு பக்கம் சாய்ந்தாபடி.. இடது கையை முட்டுக்கொடுத்து ( இது மூன்றாம் நிலை )..
மறுபடி அந்த இரண்டு வரிகளை ஆரம்பிப்பேன்... ம் ஹூம்.. அடுத்த நிலைக்கு மாற உடம்பு உத்தேசித்துப் பெரு விருப்பம் கொள்ள ....
இப்ப நான்காம் நிலையில் அனேகமாகப் படுத்துவிடுவேன்.... அந்த. சுகம் இருக்கிறதே..!
வால்ட் டிஸ்னீ ப்ளூட்டோ நாய் எக்கச்சக்கமான.. தூக்கத்தின் கொடூரமான ஆக்கிரமிப்பில்.. படி, படுக்கை எல்லாவற்றிலும் வழிந்து, வழிந்து எஜமானரின் பின் செல்லும்.. அப்ப கண் இமைக்குக் கீழே குச்சி வச்சாக்கூட உடைந்து தெறித்துவிடும்..!
அந்த மார்கழிக் குளிரின் காலையில் எனக்கும் ப்ளூட்டோவிற்கும் ரொம்பப் பெரிய வித்யாசம் ஏதும் இருந்திருக்காது என்பேன்.
புத்தகம் திறந்த நிலையில் கிடக்க...
சிலீரென்று சாரல் போல் குளிர்ந்த நீர்.. மென்மையாய் முகத்தில் விழ வாரிச் சுருட்டி எழுந்து.. அசடு வழிய...(தூக்கமும் வழிய..) முழிக்க..
அங்கே சத்குரு .. பொய்யான கோப முறைப்புடன்.. இதான் அரைபரீட்ஷைக்குப் படிக்கிற லட்சணமா..? ந்னு கேட்டு.. “அங்கே போய்ப் படி.. என்று ஹாலைக் காண்பிக்க நான் அங்கே செல்கிறேன்..”
அன்று வீட்டிற்குப் போனதும் அப்பத்தாவிடம் இதை எதார்த்தமாகத்தன் சொன்னேன்.. ! அப்பா கூட இதைக் கேட்டுவிட்டு லேசாகச் சிரித்தபடி ஒன்றும் சொல்லாமல் அந்தப்பக்கமாய் சென்றுவிட்டார்கள்.
நானும் ஸ்கூலுக்குச் சென்றுவிட்டேன்.
மாலையில் அப்பத்தாவும் அம்மாவும் பின்பக்கத்தில் அண்ணன் வந்துவிட்டுப் போனதைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே நான் சத்குருவின் வீட்டிற்குச் செல்லப் புத்தகங்களை எடுத்துக்கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தேன்.
வழக்கம்போல் படிப்பு.. 9.00 க்கு விளக்கணைப்பு என்று நிகழ்ச்சிகள்.
மறு நாள் காலை மறுபடி.. ரொம்பச் சீக்கிரமே வந்துவிட்ட 4.25 மணி.
வழக்கம்போல் விளக்கின் வெளிச்சம்... கண்ணுக்குள் சிவப்பு நிறம்.. எல்லாம்.
அப்புறம் ஒரே அமைதி..!
எனக்கு விழிப்பு வந்த போது.. சத்குருவின் விரல்கள் என் முதுகை வருடிக்கொண்டிருக்கிறது.
பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள்.

என் பேர் சொல்லிக் குஞ்சு என்று கூப்பிட்டு..” எந்திரிச்சுப் படிப்பா..! என்கிறார்கள்.
என்னை வருடி எழுப்பிய அந்த வாஞ்சையான விரல்களில் ஈரம்.... கொஞ்சம் கூட இல்லை...
எதேச்சையாய் நிமிர்ந்து அந்த ஜெர்மனி சுவர்க்கடிகாரத்தை பார்க்க...
அது கம்பீரமாய் 5 தடவை அடித்து ஓய்ந்தது
.**********************************************************************************
இப்போதெல்லாம் எனக்கு காலை சரியாக 4 .. 4.15 க்கெல்லாம் தினமும் முழிப்பு வந்துவிடுகிறது..
என் பெரிய மகளைக் “ காலையில் 5 மணிக்கு எழுந்திரிக்கலைன்னா வாளித் தண்ணீரை ஊற்றிவிடு “வதாகச் சொல்லிப் பயமுறுத்திக்கொண்டிருக்கிறேன்..
- தொடரும்...

இலை 23
சத்குரு : 18
களிமண்ணில் தாமரைகள் பூக்கும் ! :
களிமண்ணில் தாமரைகள் பூக்கும் ! :
அந்த மார்கழிக் காலைகளில் சத்குரு ‘பஜ கோவிந்தம்” பாடிய படி காலனிக்குள் நிறைய பெரிய மனிதர்களுடன் 5 மணிக்கெல்லாம் சுற்றி வருவார்கள்.
இதை நாங்கள் ஷண்முக பவனத்தில் இருந்த காலத்தில் பஜனை சத்தம் கேட்டுவிட்டு எழுந்து போய் ஜன்னலில் நின்று பார்த்துவிட்டு திரும்பி வந்து படுத்திருக்கிறேன்.
(என்ன ஒரு அயோக்கியத்தனம்..?)
அதிகாலை சூரியோதயத்திற்கு முன்னால் அந்தப் பனியில் நடப்பது எவ்வளவு சுகமானது.. ஓசோன் களை வீனாக்காமல் பெற்றுக்கொள்ள முடியும் .. என்ற விஞ்ஞான காரணத்திற்காகவாவது அதைச் செய்திருக்கலாம்.
நான் செய்தது இல்லை.
அப்படி ஒரு நாள், காலையில் நன்றாக விடிந்ததும் ஆவின் பால் வாங்கப் போனேன். ( அப்பவெல்லாம் பாட்டில் பால் ) பிள்ளையார் கோவிலில் கந்தசஷ்டி பாடிக்கொண்டிருக்கிறது...
பாட்டிலோடு திரும்பி வந்தவ்ன்.. கோவிலில் இருந்து வெளியே வந்த சத்குரு அவர்களின் கண்ணில் பட்டுவிட..
லேசாகச் சிரிக்கிறேன்..
அதைக் காணாதது போல்.. எனக்கு முன்புறம் நடக்க ஆரம்பிக்கிறார்கள்... எனக்கு அப்பவே.. வயிற்றில் கிலி.!
மாலையில் சத்குருவிடம் வழக்கம்போல் சென்றதும்..
“ ஏண்டாப்பா அவ்வளவு பேர் குளிச்சு சந்தனப் பொட்டு வச்சு கோவிலுக்கு வந்துகொண்டிருக்கும்போது.. அதற்கு நடுவில் .. எப்படி உன்னால் தூங்கின முகத்தோடு வரமுடியுது..?” என்று கேட்க....
எனக்குப் பெருத்த அவமானமாகிவிட்டது...
ரொம்ப மனசுகக்கு கஷ்டமாகிவிட்டது.....
நான் பண்ணினது தப்புத்தான்..அத நான் வீட்டுக்குள்ள வந்த பிறகாவது கேட்டிருக்கலாம்தானே..? இப்படி நுழைஞ்சதும் கேட்கணுமா..?
அதான் ரொம்ப ஃபீலிங்ஸ்.. ஆகி விட்டது..! மூடு அவுட்..!
அப்புறம் ரெண்டு நாள் போகவில்லை. அப்பா கூட “ ஏண்டா ராஜப்பா மாமா வீட்டுக்குப் போகலை..?” ந்னு கேட்டபோது மழுப்பி விட்டேன்.
மூன்றாம் நாள் முருகா அம்மாச்சி வீட்டுக்கு வந்திருந்தார்கள்..
“ சாமி ஏன்யா அந்தப் பக்கமே காணம்..?” ..
நான் பேசாமல் இருந்தேன்.. இதைக் கவனித்த அப்பத்தா.. “ என்ன ராஜா பதில் சொல்லாம நிக்கிறே..?” ந்னு கேட்டுவிட்டு.. அவர்களே..
“ அண்ணே ஏதாவது சொல்லிப்புட்டாகளா..? “ந்னு கேட்க.. நான் சொன்னேன்.
சொன்னதைக் கேட்டுவிட்டு... “ஆமா அதில என்னயா தப்பு..? மாமா நீ சுறுசுறுப்பா இருக்கணும்னு சொல்லிருப்பாக..! அதுக்குப் போய்.. போகாம இருக்கலாமா..? எல்லாம் உன் நல்லதுக்குத்தானே.ய்யா..?”
அதுக்கப்புறம் .. மூன்று நாள் கழித்து மறுபடி போனேன்...
என்னைக் கண்டதுமே.. சத்குரு முகத்தில்.. அப்படி ஒரு சிரிப்பு.. சந்தோஷம்...!
“ ஷண்முகனாதா.. வா வாக்கிங் போகலாம்னு.. உடனே கிளம்பி விட்டார்கள்..”
வழியெல்லாம்.. அதிகாலை நேரத்தின் .. மகத்துவம்.. பற்றிப் பேசிக்கொண்டே வந்தார்கள்...
பிரம்ம முகூர்த்தம்... சுந்தர்ராசு பிள்ளை.. மஹாதேவான்னு.. தண்ணீர் ஊற்றிக் குளிப்பது.. இது போன்ற பல விஷயங்கள்...
என்னை நான் ஒரு தூசு போல உணர ஆரம்பித்தேன்..அந்த சமயத்தில்..
உண்மையில் நான் செய்ததுதான் தவறு...! நாந்தேன் சாரி..!
ஆனால் நான் அதை குற்ற உணர்ச்சியோடு.. மனதில் வைத்துக்கொள்ளக்கூடாதே.. என்ற மெனக் கெடலோடு..
அதிகாலையில் குளிப்பதென்பது நல்ல விஷயமே..! என்று எனக்குப் புரிந்துகொள்வதற்காக..
இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து ..
என் மனத்தில் உள்ள “ எண்ணங்களில்” தான் பிடிக்காததைச் சொன்னவனாக ஆகிவிடக்கூடாதே..! என்கிற.. கவலையோடு..
சத்குரு என் முகம்.. வாடிவிடக் கூடாதே என்பதற்காக..
இவ்வளவு... தூரம் வாக்கிங்கும் வந்து.. தான் சொன்னதன் நியாயத்தின், ... நியாயத்தை.. அறிவுறுத்தினார்கள் என்றால்..!
“ மோப்பக் குழைந்த அனிச்சமாய் இருந்த...
என் முகம் திரிந்து நோக்கக் குழையவும்
காணச் சகியாது நின்ற என் சத்குருவே....!” “
நான் செய்த பாக்கியம் தான் என்ன..?
வாழ்விருக்கும் வரையிலும்.. இந்தக் களிமண்ணில்...
தாமரைகள் பூத்து நிற்கும்..!
நின் பாத கமலங்களுக்காய்..!
**************************************************************************************தொடரும்... பதிவுகள்

இலை 24
No comments:
Post a Comment