Friday, 15 May 2015

விழுது - மகாலட்சுமி

இலை 1

அப்பா அடிக்கடி சொல்வது."நாம் சாப்பிடும் இந்த சாப்பாட்டுக்கு காரணம் என் பாட்டையாவும் மாமாவும்.!வாழ்க்கையில் எந்த உயரம் போனாலும் இதை மறந்துவிடாதீர்கள்."என்று.!அப்படியே பதிந்துவிட்டது பச்சை குத்தியது போல்.!இன்றுவரை தாத்தா இருவர் முகம் காணாமல் பள்ளிக்கு சென்றதில்லை.!கலங்கி நின்ற தருணங்களில் குருசரிதமும் பெரிய தாத்தாவின் ஆறுதலான புன்னகையும்.எம் பதினெட்டாம்படி கருப்பணின் வாளும் தான் என் துணை.!எழுத எழுத கண்களில் கண்ணீர்.!!எப்பேர்ப்பட்ட மகான்கள்.!!!

இலை 2

நான் எட்டாம் வகுப்பில் இருந்த போது ஒரு விடலைப்பையன் கேட்க ஆளில்லை என்று நினைத்து விடாமல் தொந்தரவு செய்ய அப்பாவிடம் விஷயம் போனது.அப்பாவுக்கு எல்லாம் தாத்தானே.!என்னை அப்பத்தா தாத்தாவிடம் கூட்டிச்சென்றார்கள்.அவர் ஒரு வீர மங்கை..!வழியெல்லாம் எனக்கு வீரஉபதேசம்.!எவனோ ஒரு காவாலிப் பய துரத்துரானு இங்க வந்து அழுகுது,எடுத்துக்குட்டு சாத்த வேண்டாமா.?என்றவுடன் சகோதரியின் ஆவேசத்தை ரசித்துக் கொண்டே என்னிடம் விசாரணை! வாய் குளறி எப்படியோ சொல்லி முடித்தேன்.கந்தசஷ்டியில் வரும் பெண்களை தொடரும்....என்ற. வரிகளை சொல்லி."இதை சொல்லிக் கொண்டே ஸ்கூலுக்குப் போ.!என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.தைரியமாய் சொல்ல வேண்டும் என்ற ஆர்டர் வேறு.!ஆச்சரியப்படும் விதமாய் அவனைக் காணவேயில்லை.!கந்தஷ்டிகவச மகிமை என்று நான் நினைத்தேன்.பின்னொருநாள் தெரிய வந்தது காத்தது அய்யாத்துரை கவசம் என்று.!அந்த பையனின் அப்பாவிடம் தாத்தாவே பேசி வரவிடாமல் செய்தது.!பக்தியை ஊட்டி,தன்னம்பிக்கை ஊட்டி,ஒழுக்கம் ஊட்டி....ஸ்ரீமான் அய்யாத்துரை,...Great legend.!!

இலை 3

சிறுமியாய் இருந்த போதே கதைபுத்தகங்களை விடாமல் படிப்பது வழக்கம.அதே பின் பழக்காமாய் மாறி கல்கியின் பொன்னியின் செல்வன்,சிவகாமியின் சபதம் என்று நீண்டு கொண்டே போனது.!தாத்தா என்னை பல கேள்வி கேட்பார்கள்.என்ன சொல்கிறார் ஆயனச்சிற்பி.?என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைவார்கள்.!ஒருநாள் தாத்தா வரும்போது ரேடியோவில் "அந்த சிவகாமி மகனிடம்."என்று சுசிலா தேனாய் ஒழுகிக் கொண்டிருக்க நான் என்னை கே.ஆர்.விஜயாவாய் கற்பனை செய்து கொண்டு கோணங்கித்தனமாய். அபிநயம் பிடித்து ஆடிக் கொண்டிருந்ததை அமைதியாய் பார்த்து விட்டு ."மஹாலஷ்மி டான்ஸ் கிளாஸ் போக இஷ்டமா.?என்று கேட்டு Feesக்காய் அப்பா யோசித்த போது.(ஒன்பது பேர்,ஒரு சம்பளம்.)பிள்ளையார் கோயிலுக்கு வரும் மாமியிடம் சொல்லி சேர்த்துவிட்டார்கள்.அந்தக்கலை இன்றளவும் கை கொடுக்கிறது எப்போதும் Annusl dayல் Welcomedance கொடுக்கும் அளவுக்கு.,He knows to identify our potential and talents...great GURU!!!!

இலை 4

தாத்தாவின் சிந்திக்கும் வேகம் அபாரமானது.தீடீர்தீடீரென்று விஷயங்கள் வந்து விழும்.பொறுக்கி சேகரிக்க வேண்டியது அவரவர் திறமை.!புத்தி எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும.கேள்விகள் அதைவிட வேகமாய் வரும்."பாக்டீரியா Plant a animala.?என்று ஒரு கேள்வி.!திணறிப் போனேன்.!அதே கேள்வி Sboa interview வில் கேட்கப்பட்டது.!தாத்தாவின் நினைவோடு பதில் சொன்னேன்.!அந்த வேதாந்த கிரந்தத்தின் பாண்டித்யம் சொல்லில் அடங்காதது.!!!

No comments:

Post a Comment