இன்று நமது பாட்டனார் திரு சுப்பையா பிள்ளையின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு அப்பா திரு சிவசுந்தர வேலன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு பதிவு.
பாகம் 1
பார்த்திபனூர் கருப்பையா - அங்காள ஈஸ்வரி துணை
எங்களது குலதெய்வத்தின் அருள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை என் அப்பா, சித்தப்பாக்களுக்கும், பின்னர் பேரன் பேத்திகளான எங்களுக்கும் உணர்த்திய பெருந்தகை என் தாத்தா சுப்பையா பிள்ளை மற்றும் எங்களது அப்பத்தா முத்து ரத்தினம் அம்மாள்.
சண்முகம் பிள்ளை
மலையூர் எனப்படும் திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை பழையூர் பகுதியில் மலைத்தோட்டங்களில் விவசாயம் செய்து வந்தனர் அவனியா பிள்ளை என்ற வெள்ளயப்பிள்ளை மகன்கள் சண்முகம் பிள்ளை மற்றும் சங்கிலியா பிள்ளை.
சண்முகம் பிள்ளை தீவிரமாக அம்மையநாயக்கனூரில் விவசாயம் செய்து வந்தார். நல்ல உழைப்பாளி மற்றும் தீவிர முருக பக்தர். அம்மையநாயக்கனூரிலிருந்து பாதயாத்திரையாக ஒவ்வொரு வருடமும் காவடியுடன் பழனி சென்று முருகனை தரிசித்து வந்தார். ஒரு சில பங்காளிகளும் இவருடன் பாதயாத்திரை வருவதுண்டு. இவர்களது காவடி வருகிறது என்றால் வழியில் உள்ள ஊர்களில் பயபக்தியுடன் மரியாதை செய்து அனுப்புவர்.
இவரது முதல் மனைவி அக்கண்டியாயி, கவுண்டப்பகோட்டை (பள்ளபட்டி போகும் வழியில்) கிராமத்தை சேர்ந்தவர். இவர்களது திருமணம் 1836ல் நடந்தது. இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்து அனைவரும் குழந்தை பருவத்திலேயே இறந்து விட்டனர். பின்னர் 1850 வாக்கில் மனைவியும் இறந்து விட்டார்.
1851ல் மானாமதுரையில் ரயில் பொய் இறங்கி கால் நடையாக மேலப்பசளை வழியாக பார்திபனூருக்கு சென்று கொண்டிருந்தார். (சுமார் 8 மைல்). இந்த நேரத்தில் மேலப்பசளை மங்கை நாத பிள்ளை என்பவரின் வசதியான குடும்பம் பசளையில் இருந்தனர். அப்போது அங்கு சற்று இளைப்பாறி செல்லும் போது இவர்களிடையே நல்ல உறவு ஏற்பட்டது. அதன் விளைவாக மங்கை நாத பிள்ளையின் பெண் மக்களில் ஒருவரான அழகு சௌந்தரம் என்ற மாதரசியை இரண்டாம் தாரமாக சண்முகம் பிள்ளை திருமணம் செய்து கொண்டார். அப்போது சண்முகம் பிள்ளையின் வயது 40. அவரது மனைவியின் வயது 20. இது நடந்தது 1851ல்.
இந்த இருவரும் அம்மையநாயக்கனூரில் சாதாரண விவசாயக் குடும்பமாக இருந்தாலும் அரசன் அரசியைப் போல பல நல்ல காரியங்களை செய்து வந்தனர். இவர்களது ஆதரவால் வெலியூர்கலில் இருந்து சில உறவினர்கள் வந்து குடியேறினர். சண்முகம் பிள்ளை பாடு பட்டு விவசாயத்தின் மூலம் சம்பாதித்து இடம் வாங்கி வீடு கட்டினார். இது தவிர சில இடங்களை உறவினர்களுக்கும் விட்டுக்கொடுத்தார்.
சண்முகம் பிள்ளையை பின்பற்றி இவரது சித்தப்பா மகன் அம்மாபட்டி நாகலிங்கம் பிள்ளை பசலை அழகு சௌந்தரம் அம்மாளின் தங்கை மீனாட்சியின் மணந்து கொண்டார்.
சண்முகம் பிள்ளை அழகு சௌந்தரம் அம்மாளுக்கும் ஒரு மகளும் (ராக்கு அம்மாள்), ஒரு மகனும் (ஆறுமுகம் பிள்ளை) பிறந்தனர். அழகு சௌந்தரம் அம்மாள் தன மகன் ஆறுமுகத்தைத் பற்றி சொல்லும் போது "ஒற்றை பிராமணன்" என்று குறிப்பிடுவார். ஆறுமுகம் பிள்ளைக்கு மனைவியாக வந்தவர் அண்ணாமலை என்ற பெண். தென்காசி இலஞ்சியில் பிறந்தவர். இந்த அண்ணாமலை அம்மாளின் தாயார் முத்துரத்தினம் என்பவர் சண்முகம் பிள்ளையின் சின்ன தாத்தா சீனிய பிள்ளையின் மகள்.
சண்முகம் பிள்ளை அழகு சௌந்தரம் அம்மாளுக்கும் ஒரு மகளும் (ராக்கு அம்மாள்), ஒரு மகனும் (ஆறுமுகம் பிள்ளை) பிறந்தனர். அழகு சௌந்தரம் அம்மாள் தன மகன் ஆறுமுகத்தைத் பற்றி சொல்லும் போது "ஒற்றை பிராமணன்" என்று குறிப்பிடுவார். ஆறுமுகம் பிள்ளைக்கு மனைவியாக வந்தவர் அண்ணாமலை என்ற பெண். தென்காசி இலஞ்சியில் பிறந்தவர். இந்த அண்ணாமலை அம்மாளின் தாயார் முத்துரத்தினம் என்பவர் சண்முகம் பிள்ளையின் சின்ன தாத்தா சீனிய பிள்ளையின் மகள்.
இத்தம்பதியினரின் பிள்ளைகள் நான்கு பெண் மக்கள் ஆறு ஆண் மக்கள் நம் தாத்தா சுப்பையா பிள்ளையும் சேர்த்து. இனிமேல்தான் ஆரம்பமாகிறது நமது கண் கண்ட தெய்வம் சுப்பையா பிள்ளையின் வரலாறு. (தொடரும்..)
பாகம் 2
சுப்பையா பிள்ளை தம் ஆரம்பக்கல்வியை அம்மையநாயக்கனூரில் படித்தபின் இவரது மாமன் புது வீட்டுத் தாத்தா மகாலிங்கம் பிள்ளை இவரது படிப்புக்காக மதுரையில் பசுமலை பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்தார். அதுவரை வெறும் விவசாயக்குடும்பமாக இருந்த நமது பரம்பரையில் கல்விக்கண்ணை திறந்து வாய்த்த மகாபுருஷர் இந்த மகாலிங்கம் பிள்ளை ஆவார். இவர் அந்த காலத்திலேயே படித்து அரசாங்க உத்தியோகம் பார்த்தவர். பார்பதற்கு சர்தார் படேல் போன்றவர். அதே போன்ற நெஞ்சுறுதியும் உள்ளவர்.
பசுமலை பள்ளியில் III FORM(எட்டாம் வகுப்பு) படித்துக்கொண்டிருந்தபோதே இவரது அப்பத்தா அழகு சௌந்தரம் அம்மாளுக்கு ஒரு ஆசை. பேரனுக்கு சீக்கிரமே மணம் முடித்து பேரனின் குழந்தைகளையும் பார்த்து விட வேண்டும் என அந்த 81 வயது பாட்டியின் விருப்பம்.
மேலப்பசளைக்கு ஆள் அனுப்பி சுந்தர்ராஜ பிள்ளை கண்ணாயிர அம்மாள் மகள் முத்து ரத்தினத்தை பேசி முடித்து விட்டார். இந்த பாட்டியின் அன்பு, பாசம், மனித நேயம் போன்ற உயர்ந்த பண்புகளால் அம்மையநாயக்கனூர் வட்டாரம், மற்றும் பசளை வட்டாரத்திலும் இவரது செல்வாக்கு உச்ச நிலையில் இருந்தது.
23-05-1912 அன்று திருமணம் அம்மயநாயக்கனூரில் நடந்தது. இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே சமயத்தில் தாத்தா சுப்பையா பிள்ளையின் மூத்த சகோதரி மீனாம்பாள் நிறைமாத கர்ப்பிணி ஆகா இருந்தார். இவர் அச்சம்பத்து மாரிமுத்துப்பிள்ளையின் இரண்டு மனைவிகளில் இளையவர். அதே தேதியில் 23-05-1912ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கல்யாணி என்ற இந்தப்பெண் குழந்தை வயது வந்து பின்னர் எங்களது தோட்டத்து தாத்தா ராமசாமி பிள்ளையின் மனைவியாகி 89 வயது வரை வாழ்ந்தவர்.
சுப்பையா பிள்ளையின் திருமணம் முடிந்த பிறகும் 3 வருடங்கள் ஹைஸ்கூலில் S S L C படித்து முடித்தார். முடித்த பின் அரசாங்க உத்தியோகத்தில் மதுரை கலெக்டர் ஆபீசில் சேர்ந்தார். தனிக்குடித்தனமாக என் தாத்தாவும் அப்பத்தாவும் கிளாஸ்கார தெரு என்ற இடத்தில் குடியேறினர். அந்த வீட்டில் சுப்பையா பிள்ளையின் தம்பிகள் நாகலிங்கம் பிள்ளை, ராமசாமி பிள்ளை, மேலும் அக்காள் மகன் சோமசுந்தரம் ஆகிய மூவரும் தங்கி U.C. ஹைஸ்கூலில் படித்து வந்தனர். ஸ்கூலும் வீடும் மிக அருகில் இருந்தது.
சுப்பையா பிள்ளை அவர்கள் தினமும் சைக்கிளில் போய் கலெக்டர் ஆபீசில் வேலை பார்த்து வந்தார். சில வருடங்களுக்குப் பிறகு நத்தம், கொட்டாம்பட்டி ஆகிய ஊர்களில் ரெவென்யூ இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். 29 வயதில் ஆறு குழந்தைகள். அப்போது எடுத்த புகைப்படம் அனைவரின் பார்வைக்கு.
பாகம் 3
ரெவென்யூ டிபார்ட்மென்டில் வேலை பார்த்து வந்த சுப்பையா பிள்ளை அதை விட்டு பாரஸ்ட் டிபார்ட்மென்டில் சேர்ந்தார். காரணம் சம்பளம் ரூ 5 அதிகம். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை வந்து வருஷக்கணக்காக வேலை பார்த்தார். 37 வயதில் குடும்பம் பெரிதாகி விட்டது. தனது மூத்த மகன் அய்யாத்துரையை அவரது தாய் மாமன் இராமநாத பிள்ளையின் வீட்டில் பசளையில் தங்கி, மானாமதுரை O V C ஹைஸ்கூலில் படிக்க ஏற்பாடு செய்தார். அடுத்த 2 மகன்கள் சிவசாமி, சண்முகம், இருவரையும் தங்களது தாத்தா அப்பத்தாவின்மேற்ப்பார்வையில் படிக்க வைத்தார். இவர்கள் இருவரையும் நன்கு படிக்க வைக்க வசதி இல்லை. நான்காவது மகன் கருப்பையாவை ஹைஸ்கூலிலும், பின்னர் கல்லூரியிலும் படிக்க வைக்க முடிந்தது.. அழகு சௌந்தரம் அம்மாள் இறந்த சில மாதங்களில் பிறந்த காரணத்தால் (1917), தன் மூத்த மகளுக்கு சௌந்தரம் என்று பெயர் வைத்தார்.
1934ல் தன் மூத்த மகள் சௌந்தரத்தை, அவரது தாய் மாமன் சண்முகம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இந்தத் திருமணத்தன்று இராமனாத பிள்ளையின் மூத்த மகள், எனது பெரியம்மா மீனாம்பாளுக்கும், அவரது தாய் மாமன் பூசேரி சுப்பிரமணிய பிள்ளைக்கும் ஜோடியாக திருமணம் நடந்தது. அய்யாதுரை பிள்ளை 1934ல் S S L C முடித்து விட்டு அவரது தாய்மாமன் பசளை இராமநாத பிள்ளையின் உதவியுடன் சம்பாதிப்பதற்காக பர்மா சென்றார்.
ஆனால் 1936 ஜனவரியில் மிகக்கொடுமையான நிகழ்வுகள் நடந்து விட்டன. தாத்தாவின் 6 வயது மகள் சொர்ணவல்லி காலமாகி விட்டார். அடுத்த 10 நாட்களில் தாத்தாவின் மூத்த மருமகன், சௌந்தரத்தின் கணவர் சண்முகம் 22 வயதில் திடீரென காலமாகி விட்டார். இது ஒரு தாங்க முடியாத அதிர்ச்சி. சௌந்தரத்தின் மகன் அருணாசலம் பசளையில் பிறந்து 40 நாட்கள். அடுத்த 10 நாட்களில் தாத்தாவின் மகன் ஆறுமுகமும் 11 வயதில் பசளையில் காலமாகி விட்டார். இந்த மூன்று பேரிடிகளையும் ஒரே மாதத்தில் சந்தித்த தாத்தாவும் அப்பத்தாவும் பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆகி விட்டனர்.
After all these calamities Aiyadurai was recalled from Burma. தாத்தா சுப்பையா பிள்ளை எழுதிருப்பவை.
After all these calamities Aiyadurai was recalled from Burma. தாத்தா சுப்பையா பிள்ளை எழுதிருப்பவை.
No comments:
Post a Comment