Sunday, 21 June 2015

விழுது - பாலா

விழுது - பாலா

இன்றைய எந்திர உலகில் போலியான ஒரு இலக்கை நோக்கி வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் நமக்கு அந்த இலக்கை அடைந்தபிந்தான் தெரிகிறது நாம் போக வேண்டிய தூரம் இன்னும் பல மைல்கள் இருக்கிறது என்று... என்னதான் மனவலிமைமிக்கவராய் இருந்தாலும் ஒரு கட்டத்தில் சோர்வடைகிறோம்.. பின் நம் முதுகில் தட்டிக்கொடுத்து போ என்று சொல்ல எப்போதும் யாரவது ஒரு அனுபவசாலி தேவை படுகிறார்கள் !!!
இங்கு தாத்தாவை பற்றி எழுதப்பட்ட ஒவ்வொரு பதிவிலும் என்னால் உணர முடிகிறது.... ஒரு மனிதன் எதனை பேரை இப்படி முதுகில் தட்டி ஓட வைத்திருக்கிறார் என்பது... சில நேரங்களில் வியப்பாகவும்... பல நேரங்களில் என் மீதே எனக்கு கோபமாகவும் (எனது ஞாபக சக்தியை எண்ணி)... போரமயாகவும் கூட... காரணம்... இப்படி ஒரு மனிதரை சந்தித்திருக்கிறேன் அவருடன் சில நாட்கள் வாழ்ந்தும் இருக்கிறேன் அனால் உண்மையில் எனக்கு தாத்தாவுடன் இருந்த ஞாபகங்களோ அவரிடம் கற்றுக்கொண்டதாகவோ எதுவும் நினைவில் இல்லையே என்றும்.. முகப்புதகத்தில் கண்டதையும் எழுதும் எனக்கு தாத்தாவை பற்றி எழுத எதுவுமே இல்லையே என்றும் !!!!!
எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் அமைதியான திருநீர் அணிந்த முகமும் அந்த திண்ணையும் தான்....!!!!
அனால் வேறு சில தாத்தாக்களை பற்றி பகிர விரும்புகிறேன் !!!
சேதுராமன் பிள்ளை (பெரிய தாத்தா ) !! லக்ஷ்மணன் பிள்ளை (சின்ன தாதா ) !!!!! - இரட்டையர்கள் !!!!
லக்ஷ்மணன் பிள்ளை என் அப்பாவின் அப்பா !!!! பேருக்கு ஏற்றது போல் ராமனும் லக்ஷ்மனுமாக தான் வாழ்ந்தார்கள் என்று சொல்ல வேண்டும் !!! பெரிய தாத்தாவிற்கு குழந்தைகள் கிடையாது அவரும் எங்களுடன் தான் இருந்தார் !!! இருவரும் அதிகமா பேசி கொண்டு பார்த்ததில்லை என்றும்.. பல நேரங்களில் கண்களாலேயே பேசிக்கொள்வார்கள் !!! நாராயணன் மற்றும் அனைவரும் திருச்சியில் படித்து கொண்டிருந்தார்கள்... நான் மட்டும் பரமக்குடியில்... எனக்கு விளையாட்டு தோழர்களை இருந்தது பெரும்பாலும் தாதாக்களே.... என்னை சைக்கிளில் வைத்து எங்கு சென்றாலும் கூட்டி செல்வர்கள் ... !!!! எந்த கடையில் நான் எதை சாப்பிடுவேன் என்று அவர்களுக்கு தெரியும் ... அந்தந்த கடைகளில் சைக்கிள்கள் தானாக நிற்கும் !!! எப்போது அம்மா சாப்பாடு பரிமாறினாலும் அண்ணன் சாப்பிட்டார என்று கேட்டு தான் சாப்பிடுவார் சின்ன தாத்தா !!! ஒரு நாளும் சாப்பாட்டில் குறை சொல்லியதே இல்லை (எங்கள் வீட்டில் தாத்தாக்கள் இருவர் மட்டும் தான் அப்படி )...!!
உணவை எப்படி ருசித்து சாப்பிட வேண்டும் என்று அவரிடம் தான் கற்று கொள்ள வேண்டும் !!! இன்றளவும் நான் பல ஊர்கள் சென்று விதவிதமான உணவுகளை சுவைபதிலும் அதை பற்றி எழுதுவதிலும் எனக்கு சந்தோசமாக இருக்கும் ... தாத்தாவிடம் என்னை அறியாமல் கற்றுக்கொண்டது தான் போல !!!!!!
பள்ளி பருவத்தில் மேலயகுடியின் செல்லப்பிள்ளையாக வளர்ந்த நான் .... எங்கு சென்றாலும் யாரு டா நீ என்று கேட்கும் போது ... ஒரு போதும் அப்பாவின் பெயரை சொல்லியதாக ஞாபகம் இல்லை... "லக்ஷ்மணன் பிள்ளையின் பெயரன் " என்று கர்வமாக சொல்லி நடைபோடுவேன் ... அவர் அங்கிருந்த பள்ளியில் ஆசிரியர் ... ஊரில் தென்படும் 5இல் ஒருவர் தாத்தாவின் மாணவர்களாக இருப்பார்கள்...
தெருவில் வருபவர்களை எல்லாம் தாத்தா செல்லமாக வம்பிலுப்பர்... பாரபட்சம் இல்லாமல் எல்லோரிடமும் அன்பை இறைத்தவர் !!! எல்லோருக்கும் பிடித்த ஒரு நபராக வாழ்ந்தவர் அவர் என்பதில் எனக்கு ஒரு கர்வம் !!!
தாத்தா ஓய்வு பெற்றபின் ஒரு நாள் பள்ளியில் சுதந்திர தின விழாவிற்கு தலைமை தாங்க கூப்பிட்டார்கள்... அங்கே கபடி போட்டிகள் நடைபெற்றன... வெற்றி பெற்றவர்கள் தாத்தாவிடம் பரிசுகள் வாங்கினர்.. வெற்றி பெற்ற ஒவ்வொருவருக்கும் ஒரு பேனா பரிசாக கொடுக்க பட்டது ... அருகில் அமர்ந்த நான் எனக்கும் ஒரு பேனா வேண்டும் என அடம்பிடிக்க ... அருகில் இருந்த ஆசிரியர்கள் ஒரு பெனாதனே குடுங்க சார் என்று சொல்ல.. என்னிடம் திரும்பிய தாத்தா "கழுத சும்மா இரு.. அவங்க எல்லாம் ஜெயிச்சுருக்காங்க வாங்குறாங்க , நீயும் ஜெயிக்கும்போது பேனா கிடைக்கும் என்று சொன்னார் "... அப்போது கோவம் வந்தது.. இப்போது புரிகிறது.... இப்போதும் பேனாவை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறேன் !!!!!!!
சண்முகம் தாத்தா (தேவி சித்தியின் அப்பா )
இவரை பற்றி சொல்ல இரண்டு சொற்கள் போதும் .. ஒன்று உழைப்பு ...!!! மற்றும் ஒன்று எளிமை !!!
அவரால் முடியாத ஒன்று சோம்பேறியாக ஓரிடத்தில் இருப்பது .. அவர் சித்தப்பாவின் கடை வேலைகளிலும் கட்டிட வேலைகளிலும் துணையாக இருந்தவர்... எடுத்துக்கொண்ட ஒவ்வொரு செயலையும் முழு ஈடுபாட்டுடனும் எவ்வளவு சிக்கனமாக சிறப்பாக செய்ய முடியுமோ அதை செய்வர்... வியந்திரிக்கிறேன் பல முறை !!!! "கடமையை செய் பலனை எதிர் பார்க்காதே என்று சொல்வார்கள்" ... எதார்த்தத்தில் யாரால் செய்ய முடியாது இதை .. ஆனாலும் அவர் எதிர்பார்ப்பின்றி உழைத்த ஒரு மனிதராக என் மனதில் உயர்கிறார் !!!
முனியாண்டி தாத்தா (பிரபா சித்தியின் அப்பா)
பலநேரங்களில் கோபக்கார மனிதராக அனைவருக்கும் தென்படும் மனிதர் என்றாலும் !!! அவரிடம் நான் வியப்பது சுய ஒழுக்கம் !!! அவரால் ஒழுக்கமின்மையை எங்கு பார்த்தாலும் போருக்க முடியாமல் சொல்லிவிடுவார் ... பலருக்கு அது அவரை கோபக்காரராக காட்டிவிடுகிறது !!!
பள்ளி பருவத்திலும் கல்லூரி பருவத்திலும் நான் எப்போதும் ஒரு below average மாணவன்தான் !! என் ஆர்வம் எல்லாம் எப்போதும் விளையாட்டில் !!! பொய் சொல்லி விளையாட்டு போட்டிகளுக்கு செல்வேன் பல சமயம் மாட்டிக்கொண்டு அடி வாங்குவேன் !!!! ஆனாலும் என்னை வீட்டில் ஒவ்வொரு முறை போகும்போதும் அமரவைத்து இப்போ எந்த matchukku போன ... அங்க tournament நடக்குது போகலைய ... என்று என் திறமையை மதித்து பேசும் ஒரு நபராக இருந்தவர் அவர் மட்டுமே... அவர் ஒரு உடல் கல்வி ஆசிரியர் !!! இந்த வயதிலும் அவர் trouser மாட்டிக்கொண்டு மைதானத்துக்கு செல்கிறார் !!!!
I have always admired him as a sports man and wondered how could a man stick to his biological clock so strictly.
இப்படியாக தாத்தாக்கள் பலவிதங்கள் !!! தாத்தாக்கள் தீர்க்க தரிசிகள் !!!!!

Wednesday, 10 June 2015

விழுது - ரவீந்திரன்

இலை 1

நீ அல்லால் தெய்வமில்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை
இந்த பாடலை கேட்கும் தோறும் மனம் இதை அசை போடும் போதும் எந்தையை எம் சிந்தை நிறை தந்தையை மனதார நினைந்து விழிஎல்லாம் நீரால் நிறைந்து உள்ளம் கசிந்து உயிர் உருகா நாள் எல்லாம் நான் பிறவா நாளே!
ஐயா துரை மகனே என அருமையுடன் அழைத்து மெய்யாய் வாழ்த்து சொன்ன மேதகு அருணைசெல்வி இதனினும் பெரிய பேறுஎனக்கு இனி வேறுண்டோ!
தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்னும் தாரக மந்திரத்தை சிரம் மேற்கொண்டு வாழ்ந்த தனயனாம் என் தந்தை செய்திட்ட செயல்களெல்லாம் தாய் தந்தையின் கட்டளைகளை நிறை வேற்றிய விஷயங்களே என்பது நிதர்சனமாய் நான் கண்ட உண்மை.
என் பிறப்புக்கு முன் என் அப்பாவின் வாழ்வில் நடந்த சம்பவங்களை என் மக்கள் இருவரும் எழுதி வருவதால் அதனை தவிர்த்து பெருமாள் கோவில் வீட்டிலிருந்து இப்பெருங்கதை தொடங்குகிறேன் (சுபா உன் ஆணைப்படி எல்லாம் நடக்கும்)
என் பள்ளிப்பருவம் தொடங்குவதன் முன்னரே பெருமாள் கோவில் பின்புற வீட்டில் வாசம் (6ம் நம்பர் வீடு அதே வரிசையில் PSS OFFICE ) பெருமாள் கோவில் யானை தினசரி வீட்டின் முன்னே பீடு நடை போட நான் குஞ்சரம் ஊர்ந்த கோமகனாய் சவாரி செய்யும் பாக்கியம் அப்பாவின் செல்வாக்குக்கு சாட்சியம். ஒளிந்து விளையாட பெருமாள் கோவில் வேடிக்கை பார்க்க பஸ்கள் என ஓடியது நாட்கள் தாத்தாவின் 60 வயது நிறைவின் போது பெருமாள் கோவில் உச்சியில் ஏறி மதுரை மாநகரின் பேரழகை ரசித்த காட்சி பால பருவத்தின் பதிவான பேரானந்தம் .
பசளைக்கு செல்ல வீட்டு வாசலிலேயே பஸ் ஏறி செல்லும் முக்கியத்துவம் . பின்னர் பசளையில் இருந்து திரும்பும்போது பஸ்சில் முன் வரிசை (டிரைவர் சீட்டின் தொடர்ச்சியான) சீட்டில் பயணம் கனக்கப் பிள்ளை வீட்டு டிக்கெட் என்று புறப்பட்ட இடத்திலிருந்தே (கமுதி )காலியாக வரும் ( அந்த பாவம் தான் இப்போது பஸ்களில் சீட் கிடைக்கமாட்டேன் என்கிறது )ராதா அத்தாச்சியின் சடங்கிற்கு பசளைக்கு செல்ல எனக்கு அம்மை போட்டிருந்ததற்காக எனக்கு ஒரு தனி சீட்டும் அதனை சுற்றி வேப்பிலையை.சுவர் போல்கட்டி அம்மாவுடன் பயணம் செய்தேன் இதெல்லாம் அப்பாவின் செல்வாக்கினை சொல்லவே!
பள்ளி வாழ்க்கை தாத்தாவின் ஆணைப்படி அம்மை நகரிலே ஆரம்பமானது அரிகேன் விளக்கொளியில் சின்ன அத்தையின் வழி காட்டுதலில் அட்சர அப்பியாசம் ஆரம்பம் பள்ளி செல்லும் நேரம் தவிர நாளின் எல்லா நேரமும் தாத்தாவின் தர்பாரில்தான் நாள் தவறாமல் காலையில் பூஜை (அட சாமி கும்பிடறதுதான்) மாலை படிப்பு முடிந்தவுடன் மீண்டும் அம்மையப்பன் ஆனவருக்கு அரகரோகரா இரவு உணவுக்கு பின் எங்காவது வீட்டுக்கு வெளியில் (அந்த ஊரின் மாபெரும் கடை வீதியில் )பார்த்தால்அன்று பூஜை(இது உண்மையான அடி தான்)நிச்சயம் ஆனால் அன்பு அப்பத்தாவின் அரவணைப்பு அதனை மறக்க செய்யும்
குருகுல வாசத்தின் பின் உள்ள கதை தொடரும்

இலை 2

பாண்டித்துரையின் பதிவுகள் - பகிர்வு 2
ஒரு வருட குருகுல வாசத்தின் பின் மதுரை தெற்கு மாசி வீதி தலையாரி குருநாதன் கோவில் பள்ளியில் 2ம் வகுப்பு. அதே பள்ளியின் 7ம் வகுப்பில் பாமா அத்தாச்சி.அண்ணன் Madura collegeல் B com .செல்ல அக்கா எனக்கு பதிலாக அம்மை நகரில் . நன்மை தருவார் கோவிலின் எதிரே வீடு. காலையில் குளித்தவுடன் அப்பா சாமி கும்பிட அழைத்துச் செல்வது எதிரில் இருந்த கோவிலுக்கு தான். அங்கிருந்த போது அப்பாவுடன் சாந்தாராமின் Dho ankhen bhara haath(தமிழில் பல்லாண்டு வாழ்க ) படம் பார்த்தது ஞாபகம் உள்ளது ஒரே வருடத்தில் மீண்டும் பள்ளி மாற்றம்
தி கிரேட் பழ்ங்கானததம் சகாப்தம் ஆரம்பம் 3 மற்றும் 4 ம் வகுப்பு மட்டும் அங்கே 2ம் வகுப்பு இறுதித் தேர்வின் கடைசி மூன்று பரீட்சைகள் புதிய வீட்டிலிருந்து காலையில் (புதிதாக Sincere agency ல் வேலைக்கு சேர்ந்திருந்த) அண்ணனுடன் சைக்கிளில் வந்து மாலையில் அருணாச்சல மாமாவுடன் திரும்புவதாக ஏற்பாடு கடைசி பரிட்சை முடிந்த அன்று சீக்கிரமே, மாமாவின் வருகையின் முன்பே பள்ளி முடிந்ததால் தனியாக நடந்தே புறப்பட்டு விட்டேன்.பள்ளி வாயிலின் இடப்புறம் பார்த்தால், எனக்கு தெரிந்த பெருமாள் கோவில் அதனை சுற்றி நடந்து வந்தால் திருப்பரங்குன்றம் ரோடு வீட்டிலிருந்து வரும் பாதையை 2 நாளாக கவனிதிருந்ததால் எவ்வித பயமுமின்றி ராஜ நடை போட்டேன் ( புதிய வானம் புதிய பூமி ல ல ல லா அட.. அந்த பாட்டு அப்போது வரவில்லை.. நடடா.. ராஜா நடடா...என எதோ ஒன்று) பின்னாளில் பழனிக்கு நடப்பதற்கு அன்றே ஒத்திகை ஆரம்பம் போலும்
Office முடித்து பள்ளிக்கு வந்த மாமாவுக்கு ஒரே அதிர்ச்சி வழி நெடுகிலும் பயத்தோடு தேடி வந்தவரின் கண்ணில் அகப்பட்டேன் ஆண்டாள்புரம் -வசந்த நகர் சாலையின் வளைவு அருகே சுமார் 4 கி மீ தனி ஆவர்தனத்தின் பின் ஒரு முத்தாய்ப்பு . தேடி அலைந்த எரிச்சலும் கண்டேன் ரவியை என்ற உணர்விலும் "பெரிய இவன் மாதிரி" என்னும் அவர்களின் வழக்கமான வசனத்துடன் அழைத்து போனார்கள்.
(அருணாச்சல மாமா என்றாலே ஒரு மூத்த சகோதரர் என்னும் நினைப்பும் பிரியத்தோடு பாசமும் கூடிய வெளிவேஷம் சிறிதும் இல்லாத குணமும் இன்றளவும் மனதை விட்டு நீங்காத இனிய நினைவுகள் இனி எப்போது இப்படி ஒரு பிரியத்தை அனுபவிக்க போகிறேன்!!)
அப்பாவிடம் இது பற்றி மாமா நிறைய எதிபார்ப்புடன் குறை கூறிய போது எதிர்பாரா திருப்பம் இப்படிதான் தைரியமாக இருக்கணும் தான் போய் வரும் பாதையில் கவனமாக இருந்ததால்தான் சரியாக வர முடிந்தது என பாராட்டினார்கள். சித்திரை பொருள் காட்சிக்கு அழைத்து சென்று விட்டு பார்த்து முடிக்கும் நேரத்தில் நீ தனியாக புறப்பட்டு வீட்டுக்கு யாரிடமும் கேட்காமல் பஸ் ஏறி வரவேண்டும் என்பார்கள்.
மூன்றாம் நான்காம் வகுப்புகள் பழங்காநத்ததில் முடித்து 5ம் வகுப்பு M C Highschool ல் உள்ள டவுன் primary ஸ்கூலில் சேர்த்து டவுன் பஸ் சீசன் பாஸ் எடுத்து கொடுத்து அதன் மாதாந்திர புதுப்பிப்பு செய்ய தனியாக முடக்கு சாலை சென்று Southern Road ways ல் வேலையை முடித்து திரும்ப வேண்டும் . இவ்விதம் ஒருமுறை போய் வரும் போது அச்சம்பத்து செல்லையா மாமா (சதாசிவம் நவநீதனின் அப்பா )பார்த்து விட்டு இப்படித்தான் ஒரு பத்து வயது பாலகனை தனியே அனுப்புவதா என உரிமையோடு அப்பாவிடம் கூறினார். இத்தகைய சோதனைகளால் எந்த ஒரு தெரியாத இடமாக இருந்தாலும் தனியே செல்லக் கூடிய திறனை வளர்க்க வழி காட்டிய ஆசான் அவர்களே.
1961-62ல் தாத்தாவுக்கு உடல் நலம் குன்றி அம்மை நகரில் வைத்தியம் எடுத்துக் கொண்டு இருந்த போது ஒவ்வொரு சனிக்கிழமையும் தாத்தாவுக்கான எதாவது மருந்துடன் தனியாக அம்மை நகர் சென்று மறுநாள் அங்கு தம்பி முருகனுடன் ஆனந்தமாய் கழித்து விட்டு திங்கள் காலை 05:30க்கு ஷண்முகப்பா கூட்டிவந்து சோமசுந்தர விலாஸ் பஸ்ஸில் ஏற்றி அனுப்பி வைப்பார்கள் காலை 07:00 மணி அளவில் மதுரை வந்து வீடு சென்று மீண்டும் 09:00 மணிக்கு பள்ளிக்கு திரும்ப வேண்டும் இந்த நிகழ்வு கிட்டத்தட்ட 5 மாதங்கள் தொடர்து நடந்தது இதனால் மதுரை கொடைரோடு சாலையில் பயணிக்கும்போது கண்களை மூடிக்கொண்டு கோரிப்பாளையம், பாத்திமா கல்லூரி, சமயநல்லூர்.டபேதார் சந்தை,தனிசியம் பிரிவு,பாண்டிய ராஜபுரம், சர்க்கரை ஆலை என எந்த இடத்தை பஸ் கடக்கிறது என அனுமானிப்பது ஒரு சுவையான பொழுது போக்கு. இப்போதய 4 வழிச்சாலையில் இந்த அனுபவத்திற்கு வாய்ப்பே இல்லை எல்லா இடமும் ஒரே மாதிரி இருப்பதால்! இவ்வனுபவம் இன்றளவும் மதுரை சென்னை பாதையில் எந்த ஊர் எத்தனாவது கி மீ என்று சொல்லும் திறனை எனக்குள் ஊட்டியதுஅப்பாவின் வழிகாட்டுதலே.
பழங்காநத்தத்து வாழ்க்கையின் (கிட்டத்தட்ட 1957 முதல் 1971 வரை உள்ள) தகவல்களை அடுத்த பகிர்வில் காண்க!

இலை 3

பாண்டித்துரையின் பதிவுகள் - பகிர்வு 3
பழங்காநத்தம் வாழ்க்கையின் ஆரம்ப ஒரு வருடம் பூபதி விலாஸ் மற்றும் பட்டம் வீடு ஆகியவற்றின் நடுவே இருந்த (DEPUTY COLLECTOR) வீட்டில் இது ஒரு மிகப் பெரிய தோட்டத்துடன் கூடிய ஒரு பங்களா போன்ற வீடு இதனை ஒட்டியிருந்த ஒரு அவுட் ஹவுஸ்சில் நாங்களும் பிரதான வீட்டில் தாத்தா அப்பத்தா, பெரிய அத்தையும் அருணாச்சல மாமாவும்,சுலோசனாவுடன் மற்றும் மாணிக்க மாமா சின்ன அத்தை குழந்தைகளுடன் இது தவிர பசளையில் இருந்து விடுமுறைக்கு வருவோர் என ஒரு பெருங்குழு ஒவ்வொரு வேளை உணவு அருந்தும் போதும் கல்யாணக்களை கட்டும். இவ்விதம் அதிக எண்ணிக்கையில் நபர்கள் காலை உணவு சாப்பிட்ட போது எனக்கு மட்டும் கொடுக்க மறந்த சோகமும் (எனக்கு தான் சோகம்) இங்கே நடந்தது. இந்த வீட்டின் வாடகை ரூ 55/(1957-58ல் இது அப்பாவின் மாதாந்திர வருமானத்தில் சாத்தியப்படாத ஒன்று)
தாத்தா அவர்களின் சொல்படியே இந்த கூட்டுக குடும்ப நிர்வாகத்தை தன சக்திக்கு மீறிய அளவில் நடத்த நேர்ந்தது என்றும் இதனாலேயே முதன் முதலாக தான் கடன் பட நேர்ந்ததாகவும் அப்பா பின்னாளில் கூறக் கேட்டிருக்கிறேன் அச்சமயம் மாமா இருவருக்கும் குறைந்த வருவாயே இருந்த நிலைசிரமத்திற்கு ஒரு காரணம் தந்தை சொன்ன சொல்லை எந்த நிலையிலும் மீறக்கூடாது என அப்பா தன் உயிரினும் மேலாக கடைப்பிடித்த கொள்கையை எடுத்து இயம்பவே இந்த சூழலை விவரித்தேன் இந்த பங்களாவில் தான் ராதா அத்தாச்சியின் திருமணம் தொடர்பான நிகழ்வுகள் நடந்தேறின. ஏழெட்டு மாட்டு வண்டிகளில் மாப்பிள்ளை வீட்டார் வந்து பெண்ணை நிச்சயம் செய்ய வந்ததும் அந்த பங்களாவைச் சுற்றி வண்டிகளும் மாடுகளும் நிறைந்திருந்த காட்சி கள்ளழகர் திருவிழாவை இன்றும் நினைவூட்டும்.
இவ்வீட்டின் ஒரு வருடத்திற்கும் குறைவான வாசத்தின் பின்னரே நம் உறவு வட்டத்தில் பிரபலமான கதிர்வேல் பிள்ளை வீடு ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டு நடைபெறும் அகன்று விரிந்த களத்தினை நோக்கி அமைந்த ஒரேமாதிரி தோற்றமுடைய இரண்டு வீடுகள்.ஒரு வீட்டின் வாடகை ரூ 38- அடுத்தது ரூ 40- முன் போலவே நாங்கள் ஒரு வீட்டிலும் அருணாசலம் மாமா அத்தை ,மாணிக்கம் மாமா உடல் நலம் குன்றிய நிலையில் சின்ன அத்தை கீதா ஜோதியுடன் இவ்வீட்டில் ஆரம்ப காலங்கள் மிகுந்த மன வேதனையுடன் கழிந்தன. எத்தனையோ சோதனை களையும் தளராத மன திடத்துடனும் தெய்வ நம்பிக்கையுடனும் கடந்து வந்த நம் தாததா கண் கலங்கி நின்றதையும் நான் காண நேர்ந்ததும் இங்கே நிகழ்ந்தது இத்தகைய மன சங்கடங்களுக்கு நடுவில் பார்த்திபனூர் கோவில் மறு நிர்மாண பணிகளை மேற்கொண்டதும் இச்சூழலில்தான்.ஆனாலும் அத்தகைய அனுபவங்களே இன்று நான் சந்திக்கும் மன இறுக்கங்களை நிச்சயமாக கடந்து நல்ல வழியைக் காண்போம் என்ற நம்பிக்கையை தந்து கொண்டிருக்கிறது.


இன்று ஒரு தகவல் 


Ravindran Aiyadurai அப்பா, தாத்தாவோடு இந்தப் புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரியுமா? 
மேலும் மலேயா மற்றும் ரங்கூனில் தாத்தாவோடு இருந்தவர்கள் குறித்து ஏதேனும் உங்களுக்குத் தெரிந்த தகவல்களை சொல்லுங்களேன்

Ravindran Aiyadurai அப்பாவுடன் இருப்பவரில் குள்ளமாக உள்ளவரைப் பற்றிக் கூறக் கேள்விப்பட்டுள்ளேன்.இவர்களனைவரும் மதிச்சியத்தில் நேரு யுவஜன வாலிபர் சங்கத்தில் உறுப்பினர்களாக அப்பாவுடன் இருந்தவர்கள்.இதில் சமீபத்தில் காலமான ஐ.மாயாண்டி பாரதியும் ஒருவர்.
அப்பாவின் நண்பர் குழாமில் குறிப்பிடத்தக்கவர் "ஜெய்ஹிந்த் "ஷண்முகம் பிள்ளை.தியாகிகள் உதவிப் பணம் பெற முயற்சி எடுக்கக் காரணியாக இருந்த இவரைப் பற்றி அடுத்து எழுதுகிறேன்
Ravindran Aiyadurai மேலும் தொடர்கிறேன்.
தியாகி ஜெய்ஹிந்த் ஷண்முகனார் அப்பாவுடன் மலேயாவிலிருந்த போதிருந்துதான் நட்பாகி இருக்கக்கூடும் இருவரும் ஒருவரையொருவர் அண்ணே என அழைக்குமளவில் நட்புறவாகப் பழகியவர்கள்.யுத்தம் தீவிரமாக இருந்த போது ரப்பர் தோட்டங்களில் தஞ்சமடைந்திருந்த நாட
்களில் இவர்களைத் தஞ்சம் அடைந்தார் ஒருவர் 
மலேயப் பூர்வகுடியைச் சேர்ந்த உயிர் பிழைக்கக் கூட வழி இல்லாத நிலை மேலும் வயிறு உப்பிய நிலையில் எந்த வேலை கொடுத்தாலும் செய்து ,கொடுத்த உணவை உண்டு உய்யும் நிலையில் வந்து இவ்விருவர் உடன் ஐக்கியமாகி இந்தியாவுக்கும் குடி பெயர்த்து அப்பாவின் உதவியால் P S S லும் workshop ல் பணி புரிந்து,பின் மணம் முடித்து எங்களின் பிரியமான குப்பு சாமி அண்ணணாய் வாழ்ந்த வரும் அப்பா அவர்கள் ஆதரவில் தழைத்தோங்கியவரே( இவர் பின் நாளில் NGO colony யில் இருந்த (ஷண்முகனாதன் அறிந்த)மீனாக்ஷி முருகரத்தினம் என்பவரின் உறவில் மணம் முடித்தவர் என்பது பிற்சேர்க்கைத் தகவல்)

Monday, 1 June 2015

திரு சுப்பையா பிள்ளை நினைவுகள் - திரு சிவசுந்தர வேலன்

இன்று நமது பாட்டனார் திரு சுப்பையா பிள்ளையின் 50வது நினைவு தினத்தை முன்னிட்டு அப்பா திரு சிவசுந்தர வேலன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு பதிவு.
பாகம் 1
பார்த்திபனூர் கருப்பையா - அங்காள ஈஸ்வரி துணை
எங்களது குலதெய்வத்தின் அருள் எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பதை என் அப்பா, சித்தப்பாக்களுக்கும், பின்னர் பேரன் பேத்திகளான எங்களுக்கும் உணர்த்திய பெருந்தகை என் தாத்தா சுப்பையா பிள்ளை மற்றும் எங்களது அப்பத்தா முத்து ரத்தினம் அம்மாள்.
சண்முகம் பிள்ளை
மலையூர் எனப்படும் திண்டுக்கல்லை அடுத்த சிறுமலை பழையூர் பகுதியில் மலைத்தோட்டங்களில் விவசாயம் செய்து வந்தனர் அவனியா பிள்ளை என்ற வெள்ளயப்பிள்ளை மகன்கள் சண்முகம் பிள்ளை மற்றும் சங்கிலியா பிள்ளை.
சண்முகம் பிள்ளை தீவிரமாக அம்மையநாயக்கனூரில் விவசாயம் செய்து வந்தார். நல்ல உழைப்பாளி மற்றும் தீவிர முருக பக்தர். அம்மையநாயக்கனூரிலிருந்து பாதயாத்திரையாக ஒவ்வொரு வருடமும் காவடியுடன் பழனி சென்று முருகனை தரிசித்து வந்தார். ஒரு சில பங்காளிகளும் இவருடன் பாதயாத்திரை வருவதுண்டு. இவர்களது காவடி வருகிறது என்றால் வழியில் உள்ள ஊர்களில் பயபக்தியுடன் மரியாதை செய்து அனுப்புவர்.
இவரது முதல் மனைவி அக்கண்டியாயி, கவுண்டப்பகோட்டை (பள்ளபட்டி போகும் வழியில்) கிராமத்தை சேர்ந்தவர். இவர்களது திருமணம் 1836ல் நடந்தது. இவர்களுக்கு ஏழு குழந்தைகள் பிறந்து அனைவரும் குழந்தை பருவத்திலேயே இறந்து விட்டனர். பின்னர் 1850 வாக்கில் மனைவியும் இறந்து விட்டார்.
1851ல் மானாமதுரையில் ரயில் பொய் இறங்கி கால் நடையாக மேலப்பசளை வழியாக பார்திபனூருக்கு சென்று கொண்டிருந்தார். (சுமார் 8 மைல்). இந்த நேரத்தில் மேலப்பசளை மங்கை நாத பிள்ளை என்பவரின் வசதியான குடும்பம் பசளையில் இருந்தனர். அப்போது அங்கு சற்று இளைப்பாறி செல்லும் போது இவர்களிடையே நல்ல உறவு ஏற்பட்டது. அதன் விளைவாக மங்கை நாத பிள்ளையின் பெண் மக்களில் ஒருவரான அழகு சௌந்தரம் என்ற மாதரசியை இரண்டாம் தாரமாக சண்முகம் பிள்ளை திருமணம் செய்து கொண்டார். அப்போது சண்முகம் பிள்ளையின் வயது 40. அவரது மனைவியின் வயது 20. இது நடந்தது 1851ல்.
இந்த இருவரும் அம்மையநாயக்கனூரில் சாதாரண விவசாயக் குடும்பமாக இருந்தாலும் அரசன் அரசியைப் போல பல நல்ல காரியங்களை செய்து வந்தனர். இவர்களது ஆதரவால் வெலியூர்கலில் இருந்து சில உறவினர்கள் வந்து குடியேறினர். சண்முகம் பிள்ளை பாடு பட்டு விவசாயத்தின் மூலம் சம்பாதித்து இடம் வாங்கி வீடு கட்டினார். இது தவிர சில இடங்களை உறவினர்களுக்கும் விட்டுக்கொடுத்தார்.
சண்முகம் பிள்ளையை பின்பற்றி இவரது சித்தப்பா மகன் அம்மாபட்டி நாகலிங்கம் பிள்ளை பசலை அழகு சௌந்தரம் அம்மாளின் தங்கை மீனாட்சியின் மணந்து கொண்டார். 
சண்முகம் பிள்ளை அழகு சௌந்தரம் அம்மாளுக்கும் ஒரு மகளும் (ராக்கு அம்மாள்), ஒரு மகனும் (ஆறுமுகம் பிள்ளை) பிறந்தனர். அழகு சௌந்தரம் அம்மாள் தன மகன் ஆறுமுகத்தைத் பற்றி சொல்லும் போது "ஒற்றை பிராமணன்" என்று குறிப்பிடுவார். ஆறுமுகம் பிள்ளைக்கு மனைவியாக வந்தவர் அண்ணாமலை என்ற பெண். தென்காசி இலஞ்சியில் பிறந்தவர். இந்த அண்ணாமலை அம்மாளின் தாயார் முத்துரத்தினம் என்பவர் சண்முகம் பிள்ளையின் சின்ன தாத்தா சீனிய பிள்ளையின் மகள்.
இத்தம்பதியினரின் பிள்ளைகள் நான்கு பெண் மக்கள் ஆறு ஆண் மக்கள் நம் தாத்தா சுப்பையா பிள்ளையும் சேர்த்து. இனிமேல்தான் ஆரம்பமாகிறது நமது கண் கண்ட தெய்வம் சுப்பையா பிள்ளையின் வரலாறு. (தொடரும்..)
 
பாகம் 2
சுப்பையா பிள்ளை தம் ஆரம்பக்கல்வியை அம்மையநாயக்கனூரில் படித்தபின் இவரது மாமன் புது வீட்டுத் தாத்தா மகாலிங்கம் பிள்ளை இவரது படிப்புக்காக மதுரையில் பசுமலை பள்ளியில் படிக்க ஏற்பாடு செய்தார். அதுவரை வெறும் விவசாயக்குடும்பமாக இருந்த நமது பரம்பரையில் கல்விக்கண்ணை திறந்து வாய்த்த மகாபுருஷர் இந்த மகாலிங்கம் பிள்ளை ஆவார். இவர் அந்த காலத்திலேயே படித்து அரசாங்க உத்தியோகம் பார்த்தவர். பார்பதற்கு சர்தார் படேல் போன்றவர். அதே போன்ற நெஞ்சுறுதியும் உள்ளவர்.
பசுமலை பள்ளியில் III FORM(எட்டாம் வகுப்பு) படித்துக்கொண்டிருந்தபோதே இவரது அப்பத்தா அழகு சௌந்தரம் அம்மாளுக்கு ஒரு ஆசை. பேரனுக்கு சீக்கிரமே மணம் முடித்து பேரனின் குழந்தைகளையும் பார்த்து விட வேண்டும் என அந்த 81 வயது பாட்டியின் விருப்பம்.
மேலப்பசளைக்கு ஆள் அனுப்பி சுந்தர்ராஜ பிள்ளை கண்ணாயிர அம்மாள் மகள் முத்து ரத்தினத்தை பேசி முடித்து விட்டார். இந்த பாட்டியின் அன்பு, பாசம், மனித நேயம் போன்ற உயர்ந்த பண்புகளால் அம்மையநாயக்கனூர் வட்டாரம், மற்றும் பசளை வட்டாரத்திலும் இவரது செல்வாக்கு உச்ச நிலையில் இருந்தது.
23-05-1912 அன்று திருமணம் அம்மயநாயக்கனூரில் நடந்தது. இவர்களது திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே சமயத்தில் தாத்தா சுப்பையா பிள்ளையின் மூத்த சகோதரி மீனாம்பாள் நிறைமாத கர்ப்பிணி ஆகா இருந்தார். இவர் அச்சம்பத்து மாரிமுத்துப்பிள்ளையின் இரண்டு மனைவிகளில் இளையவர். அதே தேதியில் 23-05-1912ல் ஒரு பெண் குழந்தை பிறந்தது. கல்யாணி என்ற இந்தப்பெண் குழந்தை வயது வந்து பின்னர் எங்களது தோட்டத்து தாத்தா ராமசாமி பிள்ளையின் மனைவியாகி 89 வயது வரை வாழ்ந்தவர்.
சுப்பையா பிள்ளையின் திருமணம் முடிந்த பிறகும் 3 வருடங்கள் ஹைஸ்கூலில் S S L C படித்து முடித்தார். முடித்த பின் அரசாங்க உத்தியோகத்தில் மதுரை கலெக்டர் ஆபீசில் சேர்ந்தார். தனிக்குடித்தனமாக என் தாத்தாவும் அப்பத்தாவும் கிளாஸ்கார தெரு என்ற இடத்தில் குடியேறினர். அந்த வீட்டில் சுப்பையா பிள்ளையின் தம்பிகள் நாகலிங்கம் பிள்ளை, ராமசாமி பிள்ளை, மேலும் அக்காள் மகன் சோமசுந்தரம் ஆகிய மூவரும் தங்கி U.C. ஹைஸ்கூலில் படித்து வந்தனர். ஸ்கூலும் வீடும் மிக அருகில் இருந்தது.
சுப்பையா பிள்ளை அவர்கள் தினமும் சைக்கிளில் போய் கலெக்டர் ஆபீசில் வேலை பார்த்து வந்தார். சில வருடங்களுக்குப் பிறகு நத்தம், கொட்டாம்பட்டி ஆகிய ஊர்களில் ரெவென்யூ இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தார். 29 வயதில் ஆறு குழந்தைகள். அப்போது எடுத்த புகைப்படம் அனைவரின் பார்வைக்கு.
 
பாகம் 3
ரெவென்யூ டிபார்ட்மென்டில் வேலை பார்த்து வந்த சுப்பையா பிள்ளை அதை விட்டு பாரஸ்ட் டிபார்ட்மென்டில் சேர்ந்தார். காரணம் சம்பளம் ரூ 5 அதிகம். பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மதுரை வந்து வருஷக்கணக்காக வேலை பார்த்தார். 37 வயதில் குடும்பம் பெரிதாகி விட்டது. தனது மூத்த மகன் அய்யாத்துரையை அவரது தாய் மாமன் இராமநாத பிள்ளையின் வீட்டில் பசளையில் தங்கி, மானாமதுரை O V C ஹைஸ்கூலில் படிக்க ஏற்பாடு செய்தார். அடுத்த 2 மகன்கள் சிவசாமி, சண்முகம், இருவரையும் தங்களது தாத்தா அப்பத்தாவின்மேற்ப்பார்வையில் படிக்க வைத்தார். இவர்கள் இருவரையும் நன்கு படிக்க வைக்க வசதி இல்லை. நான்காவது மகன் கருப்பையாவை ஹைஸ்கூலிலும், பின்னர் கல்லூரியிலும் படிக்க வைக்க முடிந்தது.. அழகு சௌந்தரம் அம்மாள் இறந்த சில மாதங்களில் பிறந்த காரணத்தால் (1917), தன் மூத்த மகளுக்கு சௌந்தரம் என்று பெயர் வைத்தார்.
1934ல் தன் மூத்த மகள் சௌந்தரத்தை, அவரது தாய் மாமன் சண்முகம் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தனர். இந்தத் திருமணத்தன்று இராமனாத பிள்ளையின் மூத்த மகள், எனது பெரியம்மா மீனாம்பாளுக்கும், அவரது தாய் மாமன் பூசேரி சுப்பிரமணிய பிள்ளைக்கும் ஜோடியாக திருமணம் நடந்தது. அய்யாதுரை பிள்ளை 1934ல் S S L C முடித்து விட்டு அவரது தாய்மாமன் பசளை இராமநாத பிள்ளையின் உதவியுடன் சம்பாதிப்பதற்காக பர்மா சென்றார்.
ஆனால் 1936 ஜனவரியில் மிகக்கொடுமையான நிகழ்வுகள் நடந்து விட்டன. தாத்தாவின் 6 வயது மகள் சொர்ணவல்லி காலமாகி விட்டார். அடுத்த 10 நாட்களில் தாத்தாவின் மூத்த மருமகன், சௌந்தரத்தின் கணவர் சண்முகம் 22 வயதில் திடீரென காலமாகி விட்டார். இது ஒரு தாங்க முடியாத அதிர்ச்சி. சௌந்தரத்தின் மகன் அருணாசலம் பசளையில் பிறந்து 40 நாட்கள். அடுத்த 10 நாட்களில் தாத்தாவின் மகன் ஆறுமுகமும் 11 வயதில் பசளையில் காலமாகி விட்டார். இந்த மூன்று பேரிடிகளையும் ஒரே மாதத்தில் சந்தித்த தாத்தாவும் அப்பத்தாவும் பைத்தியம் பிடித்தவர்கள் போல் ஆகி விட்டனர்.
After all these calamities Aiyadurai was recalled from Burma. தாத்தா சுப்பையா பிள்ளை எழுதிருப்பவை.

விழுது - ரம்யா

இலை 1

தாத்தா - A man with eternal power who had influenced, inspired so many individuals. என்னுடைய தாத்தா, என்னுடைய அப்பா, என்னுடைய மாமா என்று இங்கு நம் உறவினர்கள் பெருமை கொள்வதன்றி "he is my guide" என்று சொல்லும் முகமறியா பலரை கண்டிருக்கிறோம். பத்து வயது வரை தான் உடனிருக்க முடிந்தது, எனக்கே பல நூறு நினைவுகள். Appas, Athans, Annans and Akkas can share their experiences with everyone. ஒரு முறை தூத்துக்குடியில் குடியேறிய சமயம் என்னை மட்டும் அழைத்துக்கொண்டு தாத்தா ஒரு ஜோஸிய நண்பரின் விலாசம் தேடிச்சென்றோம். அங்கு அந்த நபர் இல்லை. காலி செய்து பல வருடம் ஆகியிருந்தது. ஆனால் அந்த வீட்டில் இருந்த நபரும் ஜாதகம் பார்ப்பவர் தான். இருவரும் இஞ்சி டீயை ருசித்தபடி மூன்று மணி நேரம் உலக விசயம் பல பேசிக்கொண்டிருந்தனர். ஹர்ஷத் மேத்தாவெல்லாம் எனக்கு அன்று தான் அறிமுகம். எட்டு வயதில் ஏதோ புரிந்த மாதிரி இருந்தது. இவரும் உங்க friend ஆ, இவ்வளவு நேரம் பேசினீர்களே! என்று கேட்டேன். Simply amazing to hear their talks in wide range of topics.

இலை 2
சற்குரு - தாத்தா
என் நினைவோடையில் தாத்தாவின் செல்லப் பேத்தியாக சில ஞாபகங்கள். என்றுமே தாத்தாவிடம் திட்டு வாங்கியதாக நினைவில்லை. நான் ஒன்றாம் வகுப்பு காரைக்குடியில் படிக்கும் சமயம், காலையில் ரேடியோ கேட்பது தினமும் பழக்கம். அதில் கரகாட்டக்காரன் படப்பாடல் "மாங்குயிலே பூங்குயில்லே" பாடலுக்கு நானும் ரவி அப்பாவும் தாளம் போட்டு நடனம் ஆடிய நினைவில் மதுரைக்கு சென்ற போது தாத்தா முன் எப்போதோ என்னை அறியாமல் ஆடியிருக்கிறேன். தாத்தா ஒரு நாள் "எங்கே மாங்குயிலே தேங்குயிலே பாடி ஆடு" என்றார்கள் "தாத்தா அது தேங்குயிலே இல்ல பூங்குயிலே" எனச் சொல்லி ஆடினேன். மஹா அத்தாச்சி சொன்னது போல என் நடனத்திறமையை பார்த்து தாத்தா என்னை நடன வகுப்பில் சேர்க்கவே வேண்டாம் என்று நினைத்திருப்பார்கள்.