இலை - 1
எனக்கு 6,7 வயதிருக்கும் கல்கி புத்தகத்தில் கல்கியின் படத்தைப் பார்த்து விட்டு இது நம்ம பெரியப்பா தானே என நான் கேட்க ஆமாம் என சிரித்துக் கொண்டே அம்மா சொல்லியது இன்று என் நினைவில். அன்றிலிருந்து கல்கி மீது பிரியம் கூடுதலாகியது. நம்ம அப்பாவும் ஒரு எழுத்தாளர் என்று எப்படியோ ஒரு எண்ணம் வெகு நாள் இருந்தது. சகோதரர்களாகிய (பெரியண்ணன் முதல் முரளி வரை)நாங்கள் எல்லோரையும் அப்பா என்றே அழைத்தோம். அவ்வாறுதான் அழைக்க வேண்டும் என்று உணர்த்தி வைக்கப் பட்டது. எங்கள் பிள்ளைகளும் அதையே கடைப்பிடிக்கிறீர்கள்.
அதே சமயத்தில் ஏதாவது தவறு செய்யும் போது ம்ஹூம்.... தவறு செய்ய நினைக்கும் போதே 'பெரியப்பாவிடம் சொல்லவா' என்று அம்மா கேட்டால்.... அவ்வளவுதான்.. வடிவேலு 'வசீகரா படத்தில் சொல்வது போல... அவ்வளவும் அடங்கிப் போகும்... அப்பா அடித்து ஏன் யாரையும் கடிந்தோ கோபமாக பேசியோ பார்த்ததேயில்லை என்னும் போதும்..ஏனிந்த பயம் - இது பயமில்லை, மரியாதை, அப்பாவிடம் நல்ல பெயர் வாங்க வேண்டுமே என்ற துடிப்பு.... இந்த துடிப்பு அப்பாவின் இறுதி வரை இருந்தது. என் இறுதி வரை இருக்கப் போவது....
சிறுவயதில் (அப்படின்னா இப்ப வயசாகி விட்டதா என்ன) 11.00 மணியளவில் பழங்காநத்தம் வந்து சேருவோம் நானும் அம்மாவும்.
இலை - 2
பழங்காநத்தம் ! அப்பொழுது, ஒரு சிறிய கிராமம் போல இடைவெளியுடன் வீடுகள் அமைந்திருக்கும். பெரியப்பா வீட்டின் முன்பு மிகப் பெரிய பொட்டல் இருக்கும். அதைத் தாண்டி அக்ரஹாரம் இருக்கும். அங்கே அருணாச்சல அத்தான் அவர்களும் வசித்து வந்தார்கள். அப்பா வீட்டின் முன்பு முக்கியமாக கொடிமுல்லை பந்தல் ஒன்று இருந்ததைச் சொல்ல வேண்டும். காலையில் நானும் செண்பகவல்லி அக்காவும் பூக்களைப் பொறுக்கி அவர்கள் பூத்தொடுக்கும் போது கதை சொல்லச் சொல்லிக் கேட்பது (உயிரை வாங்குவது) என் வழக்கம்...சரி, அம்மாவுடன் வெயில் நேரத்தில் பழங்காநத்தத்தில் இறங்கியதும் மனது ஜிவ்வென்று ஒரே குதூகலமாய் (சரியாக எழுதியுள்ளேனா அல்லது கமல் வசூல் ராஜாவில் சொல்வது போல் இருக்கா?) ஆகிவிடும்.
அதற்கு காரணம் என்னவென்றால் வீட்டில் நுழையும்போதே அய்.. மூர்த்தி பயல் வந்துட்டானே..! என்று அப்பா சொல்லும் வார்த்தைகள். அம்மா, அண்ணன், அக்காக்கள் ஆகியோரின் மகிழ்ச்சி கலந்த வரவேற்பு. அதையெல்லாம் நினைக்கையில் கறந்த பால் மடி புகுவது போல..தாயின் அரவணைப்பில் இருப்பது போல..
இலை -3
பெரியப்பா என்றவுடன் தூய்மை, வெண்மை என இயல்பாகவே கலந்துதான் ஞாபகத்தில் வரும். அதெப்படி ஒரு சட்டை நாள்முழுவதும் போட்டிருந்தாலும் கசங்காமல் சலவையிலிருந்து வந்தது போல இருக்கும் என்பது இன்றுவரை புரியாத புதிர்.சட்டையைப் போடும் போதும் கழட்டும் போதும் ஒரு 'லாவகம்''. இன்றுவரை எனக்கு வரவில்லை...அப்புறம் அந்த "மூக்குக் கண்ணாடி" "சட்டைக்கென்று" ஒரு இடம். அப்பா அமர்வதற்கென்று ஒரு இடம். அது எப்போதும் எந்த வீட்டிலும் மாறுவதில்லை.
பழங்காநத்தம்!.. அப்போ சண்முகநாதன் சின்னப் பையன். நான் கொஞ்சம் பெரிய பையன். ஆனால் எனக்கும் அந்த சாமி ரூமில் உள்ள ஒரு மேடு ஞாபகம் இருக்கிறது. அப்பா வீட்டில் இருந்தால் என் அம்மா அந்த சாமி ரூமிலேதான் இருப்பார்கள். நான் அதை பயம் என்று நினைத்தேன்... அம்மாவே பயப்படும் பெரியப்பாவிடம் அருகே... அமர்ந்து எல்லாம் பேசும் உரிமை எனக்கிருப்பதை பெருமையாக நினைத்த காலம்... அந்த வீட்டில் நான் என்ன சேட்டை வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று ஒரு கர்வம் இருந்த காலம்... பட்டம் விடச் சொல்லி விஜி அண்ணன் (சென்னை) அவர்களைப் படுத்தி எடுத்ததையும், என்னை விட்டு விட்டு ரவியண்ணன் வெளியே செல்ல விடாமல் பார்த்துக் கொண்டதெல்லாம் ஞாபகத்திற்கு வருகிறது...
அங்கேதான் சுலோச்சனா அத்தாச்சியின் பூப்புனித நீராட்டு விழா நடந்தது! அதில்.. நான்தான் 'துணை மாப்பிள்ளை''... விசேஷம் முடிந்ததும் பெரியப்பாவும், தோட்டத் தாத்தாவும் அக்ரஹாரத்திலிருந்து வீட்டிற்கு வர, நானும் விசேஷ வீட்டில் அனைவரும் கேலி செய்ததால் வெட்கப்பட்டு அவர்களுடனே வந்துவிட்டேன்... பின் மதிய உணவு நேரம், சின்னையா சாப்பிடப் போகலாமா என அப்பா கேட்க, தாத்தா நாம் போகலாம் என்று சொல்லியபடியே என்னைப் பார்த்து "டே நீ இங்கேயிரு உனக்கு பொண்ணு வந்து சாப்பாடு கொண்டு வரும் என்று சொல்ல, பெரியப்பா "அடி சக்கை" என்று கண் சிமிட்ட அப்பொழுதுதான் அது 'கேலி'' என்று உயிர் வந்தது.
இலை -4
இலை -6
இலை -7
இலை -8
சத்குரு பெரியப்பா
நல்ல வேலையாக சண்முகநாதன் ஒரு முக்கிய விசயத்தை நினைவு படுதியுள்ளன் பெரியப்பா பற்றிய என் /எங்களது நினைவுகுளை நன்றியுடன் நினைவு கூருஹிருமே தவிர இது எங்கள் முட்டாள்தனத்தை மற்றும் எங்கள் பெருமையை வேலிகட்ட அல்ல. மேலும்ம் சுபாஸ்ரீ 100 வது வருடம் முன்னிட்டு எழுத ஆரம்பித்த வேளை மிக மிக நல்ல நேரம் ..ஏதோ ஒரு சக்தி எழுதும் அனைவரையும் ஒருங்கினைகிருது... படிக்கின்ற பலரின் நல உணர்வுகளை தட்டி எழுப்புகிறது எழுதி எழுதி மேல் செல்லும் விதியின் கையினை திரும்பி பார்க்கையில் கட...ந்து வந்த பாதையின் கடுமை புரிகிறது இது வரை காத்த தெய்வம் இனியும் காத்து நிற்கும் என் நம்பிக்கை பிறக்கிறது
அந்த நம்பிக்கை அது தரும் பலம் எனக்கு தேவை இக்கணம் . மேலும் சண்முகநாதனின் நினுவுகளையும் என் அனுபவங்களையும் உற்று பார்கில் எவ்விதம் அவன் ஒரு நல்ல வார்ரியர் ஆக மாற்றம் அடைந்தானோ அவ்விதமே நான் ஒரு நல்ல சிவிலியனாக மாறி இருப்பது புரிகிறது

No comments:
Post a Comment