Thursday, 14 May 2015

விழுது - அரவிந்தன்

பதிவு – 1

பெரிய தாத்தா ஒரு பிதாமகர். ஆம் அப்படித்தான் நான் சொல்ல ஆசை படுகிறேன்.
பால்ய கால நினைவுகள் . எத்தனையோ முறை தாத்தா அம்மைநகர் வந்திருந்தாலும் முதன் முதலில் ரவி மாமா என்னை ஒரு கோடை விடுமுறை நாளில்..சர்க்கஸ் பார்க்க வைத்து விட்டு ( அரசரடி என்று நினைக்கிறன்..) செல்வ நிலையம் கூட்டி கொண்டு போனபோதுதான் தாத்தாவின் அருகாமை எனக்கு மிகவும் பரிச்சய பட்டது..
எத்தனை நாள் அங்கு இருந்தேன் என்று நினைவு இல்லை இது என்ன சண்முகம் தாத்தாவை போல மிகவும் மிருதுவாக இங்கேயும் ஒரு தாத்தா என்று வியந்ததுண்டு. செல்வ நிலையம் கிரக பிரவேசம் தினத்தன்று செண்பக அண்ணன் கூட வயல் வெளியில் நடந்து அங்கு சென்று தாத்தா இன்னும் சிலரிடம் வயலில்.."நண்டு பார்த்து பயல் பார்த்து பயந்து விட்டான் என்று அண்ணன் சொன்னது .." இதுக்கு கூடவா பயப்படுவார்கள்..என்று யாரோ என்னை கேலி செய்தது.. என்னால் மறக்க முடியாது.. !
அந்த சர்கஸ் தின இரவில் தாத்தாவுடன் அமர்ந்து சாப்பிட்டது இன்னும் நினைவில்.. தாத்தா அந்த மனை பலகையில் அமரும் பங்கு, நேராக நேர்த்தியாக சாப்பிடும் அழகு .. எல்லா தாத்தாக்களும் இப்படித்தான் சாப்பிடுவார்களா.. ஓஹோ இப்படித்தான் சாப்பிட வேண்டும் என்று
ஒரு வரை முறை செய்தது போன்று! அன்றைய தினம் மின் வெட்டு..மாமா எதோ ஒரு விளக்கு பொருத்தி வைத்து விட்டு போன பிறகு அந்த வெளி அறையில் விசிறிய படி என்ன படிக்கிறாய் .. எப்படி படிப்பாய் என விசாரணைகள்.. நல்ல வேலை எனக்கு தூக்கம் வந்து விட்டது... போய் படு என்று சொல்லி விட்டார்கள், தாத்தா.
அடுத்த நாள் காலை என்னை யாரும் எழுப்ப வில்லை.. ஆனால் நான் சீக்கிரம் எழுந்த போது தாத்தா பின் முற்றத்தில் மிகவும் பிஸியாக இருந்தார்கள்..காலை விசயங்கள் முடிந்த பிறகு ..வா இங்கு வந்து கிணற்று அடியில் உட்கார் என்று சொல்லி தண்ணீர் இறைத்தது ..எனக்கு அம்மை நகரில் தாத்தாவிடம் குளிப்பது போல..எவ்வளவு வாளி என்று என்று ஞாபகம் இல்லை...அப்படி ஒரு குளியல்.. வேலை செய்பவரின் மகத்துவம் தெரியாமல்..! காலையில் என்ன சாப்பிட்டேன் என்று ஞாபகம் இல்லை.. மதியம் ஆச்சி எனக்கு பிடித்த பருப்பு வைத்து இருந்தார்கள்..அப்படி ஒரு ருசி.! நல்லா சாப்பிடு என்று...ஆச்சி சொல்ல, நன்றாகத்தான் சாப்பிட்டேன்..!
முருகன் இல்லம் - பெரிய தாத்தா வந்து இருக்கிறார்கள் என்றால் ஹால் ஜன்னலில் அப்படி ஒரு வெள்ளையாக ஒரு சட்டை தொங்கும்..அந்த சட்டையும் சண்முகம் தாத்தா சட்டை மாதிரிதான் இருக்கும்.. என்ன சண்முகம் தாத்தா சட்டை கதர்.. பெரிய தாத்தா சட்டை இன்னும் வெண்மையாக இருக்கும் என்ன துணி என்றுதெரியாது.... மெதுவாக மின் விசிறி சுழலும், Hindu பேப்பர் மறுபடியும் படிக்கப்பட்டு இருக்கும்.. . அம்மா தாத்தாவை பார்த்தவுடன் கும்பிடறேன் அப்பா.. என்று சொல்லி
என்னையும் சொல்ல சொல்வார்கள்.. விடுமா பரவாயில்லை என்று தாத்தா சொல்லும் போது.. அவர்கள் எனக்கு வித்தியாசமாக தெரிந்தார்கள்.. சொல்லு சொல்லு என்று மற்றவர்கள் கட்டாய படுத்தும் போது..!
வெளிர் சிரிப்பு, .. பொக்கையாகத்தான் இருக்கும்.. ஆனாலும் அதில் அப்படி ஒரு வசீகரம்..மணக்கும் விபூதி.. மறுபடியும் எல்லா தாத்தாவும் ஒன்றுதானா என யோசிக்க வைக்கும் .. கைகள் அவ்வளவு மென்மை.. தாத்தா என்றால் அப்படித்தானே இருக்க வேண்டும்.. மாமா அம்மா எல்லோரும் நிற்கும் போது என்னை மட்டும் அருகில் அமர வைத்து வாத்சல்யமாக பேசும் போது..பறக்கும் மனசு.. ! கோபப்பட்டு பார்த்தது இல்லை. சிரிக்கும் போது.. ஒரு விதமான வெட்கம் இருக்கும் .முடிந்தும்
முடியாமலும் இருக்கும் ஒரு சிரிப்பு... மறுபடியும் வெண்மை .. பளீர் என பற்கள்..சண்முகம் தாத்தா மாதிரி இவர்களும் பல் செட் வைத்திருப்பார்.. ஆம் அப்படித்தான்..!

இலை 1

பெரிய தாத்தா மிக அபூர்வமான ஒரு ஆசிரியர். பாடம் எதுவும் எடுக்காமல் கேள்விகள் கேட்டு கொண்டே நமது எண்ணங்களை இன்னும் சீராக்கிய குரு. கண்டிப்பாக இன்னும் நிறைய எழுதுவேன். I had few great one to one sessions with him and I am happy to share that all.. சண்முகம் தாத்தாவும் பெரிய தாத்தாவும் எல்லா வற்றிலும் ஒரே மாதிரி.. .. feeling very emotional. !

பதிவு – 2
என்ன படிக்கிறாய்...இந்த தடவை அம்மை நகரில் நல்ல பகல் பொழுதில்.. தூங்க வாய்ப்பு இல்லை.. +1 என்று ஞாபகம். வணிகவியல் பிரிவு.. மறுபடியும் செண்பக அண்ணனை பார்த்து காபி எடுத்தாச்சு.. (வேதியல் இயற்பியல் எல்லாம் ஏலியன் பாடங்களாக இருந்தது) . “+1” என்று சொன்னேன்.. அடுத்து என்ன படிக்கப்போற.. ஆடிட்டர் ஆக போறியா...( ஆடிட்டர் எல்லாம் எனக்கு அப்ப தெரியாது.. ) .. ஞே..என்று விழித்தேன். பொதுவாக இந்த மாதிரி தருணங்களில் இன்னும் சில பேரு என் கூட இருப்பாங்க.. தப்பிச்சேனு ஓடி வந்துட்டேன். என்ன பண்ண போறோம் அப்படிங்கிற பயம். மாமா கேட்கிறதே பயமா இருக்கு.. தாத்தா வேற.. ச்சே..என்னடா வாழ்கை அப்படின்னு...கிரிக்கெட் விளயாடும் போது அல்லது சினிமா பார்க்கும் போது தீடிர்னு இந்த கேள்வி surface ஆகி வயத்த கலக்கும்!
Hindu வில் know your english படிக்கிறியா..? இது அடுத்த கேள்வி.. என்னடா இது மாமா கேட்கிற மாதிரியே இருக்கே .. நல்ல வேலை இதுக்கு affirmative பதில் சொன்னேன்.. என்ன dictionary use பண்றே..ரொம்ப detailing இருக்கே எடுத்து காமித்தேன்..இது யாரு use பண்ணியது தெரியுமா..தெரியாது!. மாமா use பண்ணுவாங்க..அதனால் நானும்!. But am honoured to have used that dictionary!.. 
Hindu paper படிக்கிறியா.. ( நமக்குத்தான் தெரியுமே.. ஸ்போர்ட்ஸ் page) ஆமாம் அப்படினேன்..நல்ல வேலை சண்முகம் தாத்தா அப்புறம் இன்னும் வேற யாரோ வந்துட்டாங்க.. சண்முகம் தாத்தா வேற மாதிரி அப்படின்னு இப்ப யோசிக்க ஆரம்பிச்சேன் ... பெரிய தாத்தா என்ன படிச்சு இருப்பாங்க..இதே யோசனை.. அண்ணன் ஏதோ சொல்லுச்சு.. ஆனால் இனிமேல் தாத்தா கிட்டவும் நாம நல்ல பேரு வாங்கணும் கவலை.. அந்த நேரத்தில் நான் நல்ல பேரு வாங்கறது ரொம்ப கஷ்டமே.. ( இப்பவுமே..)
அதற்கு பிறகு தாத்தாவை அதிகம் சந்திக்க வாய்ப்பு இல்லை.. bcom ரெண்டாவது வருடம்.. நானும் அண்ணனும் எதற்கோ செல்வ நிலையம் போனோம்.. அதே வெளிர் சிரிப்பு.. தாத்தா ஈசிசேரிலே.. ஊர் விசாரிப்புகள் முடிந்த பிறகு... காலேஜ் பற்றி என்ன மாதிரி subjects.. ரொம்ப கவனமாக பதில் சொன்னேன். அடுத்து ஒரு டமால் கேள்வி..மதுரையில் என்ன companies இருக்குனு தெரியுமா..ஒரு வெடிப்பான கேள்வி! மறுபடியும் மாட்டிகிட்டேன்.. பதிலே சொல்லலை..அவங்களும் சொல்லலை.. கண்டு பிடி பார்க்கலாம் அப்படின்னு சொல்லிட்டாங்க..
bcom படிச்சுட்டு என்ன பண்ண போற..pointed question.. MBA என்று சொன்னேன்.. வெரி குட் அப்படின்னு சொன்னங்க.. MBA பத்தி தாத்தாவுக்கு தெரிஞ்சு இருக்கு.. ஆனால் தாத்தா கேள்வி கேட்கும் போது பயம் இல்லை.. மாமா கேட்கும் போது பயம் இருக்கும். MBA மதுரைல எங்க இருக்கு.. TSM MKU அப்படின்னு அடிச்சு விட்டேன்.. மெல்லிய புன்னகை.. இந்த விசாரணை எல்லாம் ஒரு பத்து நிமிடங்கள்தான். ஆனால் புடம் போட்ட எல்லையில்லா கால அளவுகள்..!
கேள்விகள் கேட்டு எனக்கு அவர்கள் என்ன எனக்கு கொடுத்தார்கள் அப்படின்னு தெரியலை.. ஆடிட்டர் அப்படினா என்ன, Companies பத்தி நான் ஏன் தெரிஞ்சக்கணும்.. எதிரில் நிக்கிற நபர் தனக்கு அந்த பதில் தெரியலேன்னு மெலிதாக வெட்கப்படணும்.. அதே நேரத்தில் அவனை யோசிக்க வைக்கனும்.. கேள்விகளை கேட்பதற்கும் ஒரு அபரிமிதமான நேர்மையும் ஆழ்ந்த ஞானமும் வேண்டும்!
பிதாமகர் வாழ்கிறார்!

No comments:

Post a Comment